Wednesday, May 4, 2022

​​அவரைக்காய் துவட்டல்

 ​​அவரைக்காய் துவட்டல் 😋

அவரைக்காய் மலச்சிக்கலைப் போக்கும் மற்றும் நுரையீரலில் உள்ள கிருமிகளை அழிக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பு பிரச்சனையை வரவிடாமல் தடுக்கும் .😍

🍱 தேவையான பொருட்கள் :

அவரைக்காய்  அரை கிலோ
துவரம் பருப்பு  1 கப்
தேங்காய் துருவல்  1 கப்
பெரிய வெங்காயம்  3
காய்ந்த மிளகாய்  4
கடுகு  1 டீஸ்பன்
கறிவேப்பிலை  1 கொத்து
எண்ணெய்  தேவைக்கேற்ப
உப்பு  தேவைக்கேற்ப

🍴 செய்முறை : 👇

👉 அவரைக்காய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை நன்கு வேக வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

👉 தேங்காய் துருவலை அரைத்து கொள்ளவும். பின்பு அவரைக்காய் போட்டு கிளறி விட்டு வேகவைத்த பருப்பையும், அரைத்த தேங்காய் துருவல் சேர்த்து கிளறி வெந்தவுடன் இறக்கினால் அவரைக்காய் துவட்டல் ரெடி. 👍🌷

என்றென்றும் அன்புடன்




No comments:

Post a Comment