Tuesday, May 3, 2022

மாங்காய் ஊறுகாய் தொக்கு

 மாங்காய் ஊறுகாய் தொக்கு

தேவையான பொருட்கள்

மாங்காய் 1(   புளிப்பு காயாக இருந்தால் சுவை அதிகமாக இருக்கும்)
மிளகாய்10
வெந்தயம் 1/4 ஸ்பூன்
கடுகு  1ஸ்பூன்
பெருங்காயம் 1    ஸ்பூன்
உப்பு 2ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை

மாங்காயை சிறியதாக நறுக்கவும்.

மிளகாய், வெந்தயம், பொடி, உப்பு,கடுகு நன்கு வெய்யில்ல காய வைக்கவும்.

வெந்தயம்,கடுகு,உப்பு மூன்றையும் வறுத்து மிக்ஸியில் பொடி பண்ணுங்க. நைசாக வேண்டாம்.

வாணலியில் நல்லெண்ணை 1/2டம்ளர் ஊற்றி நன்கு காய்ந்த பிறகு கடுகு போட்டு பொறிந்தவுடன்,அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு அதில் பெருங்காய பொடி, மிளகாய் பொடி, மிக்ஸியில் அரைத்த பொடி போட்டு நன்கு கலக்கி பிறகு அடுப்பை பற்ற வைக்கவும்.

மாங்காயை போட்டு லேசான தீயில் வதக்கவும். 

5நிமிடங்கள் கழித்து அடுப்பை நிறுத்தவும்.

ஆறிய பிறகு,கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.

குறிப்பாக. 

வெளியில் வைத்தால் 1 மாதம் நன்றாக இருக்கும்.

குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால் 6  மாதம் நன்றாக இருக்கும்🎈



No comments:

Post a Comment