சர்க்கரை நோய் : எச்சரிக்கை.. இந்த அறிகுறிகள் சர்க்கரை நோய் தொடக்கத்துக்கான அலாரமாகவும் இருக்கலாம்..
வரும் முன் காப்போம் என்பது எல்லா நோய்க்கும் பொருத்தமாக இருக்கும் என்றாலும் கனகச்சித பொருத்தம் என்பது சர்க்கரை நோய்க்கு என்றே சொல்லலாம். சில குறிப்பிட்ட அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்கலாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாகச் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.என்னென்ன அறிகுறிகள் என்பதை பார்க்கலாம்.
சர்க்கரை நோய்
இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் சேரும் போது அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படு கிறது. சர்க்கரை நோய் டைப்-1, டைப்-2 என்று இருவகைப்படுகிறது. ஒன்று கணையத்தில் இன்சுலின் சுரப்பு இல்லாமல் போவதால் உண்டாவது டைப் -1 சர்க்கரை நோய். பெரும்பாலும் குழந்தைகளுக்கு இது உண்டாகிறது. இவர்களுக்கு மாத்திரைகளும் ஊசிகளும் கட்டாயம்.
டைப் -2 சர்க்கரை நோயானது பெரியவர்களுக்கு உண்டாகக்கூடியது. கணையத்தில் இன்சுலின் சுரப்பு இருக்கும்.ஆனால் மிகக் குறைவாக இருக்கும். இவர்கள் மாத்திரைகளோடு உணவு பழக்கத் தையும் கடைபிடிக்க வேண்டும்.
👉 அதிகமான தாகம் வறட்சி
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தாலும் கூட அவ்வபோது தொண்டையில் தாகம் எடுப்பது போன்ற உணர்வு அதிகமாக இருக்கும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற உணர்வு அதிகரிக்கும். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காமல் இருக்கும். உடலில் இருக்கும் திரவங்கள் அடிக்கடி வெளியேறுவதால் இழந்த நீரை ஈடுகட்ட அவசியமாகிறது. அதனால் தான் அதிக தாகம் உண்டாகிறது.
👉 சிறுநீர் கழிக்க வேண்டும் உணர்வு
நாள் ஒன்றுக்கு 4 அல்லது 5 முறை சிறுநீர் கழிப்பது சரி. ஆனால் அதற்கு அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றுவதும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் இதற்கான அறிகுறிதான். இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது அவை இரத்த ஓட்டத்தில் திரவங்களின் அளவை அதிகரித்து சிறுநீரகத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். இதனால் அதிக அளவு சிறுநீரை உறிஞ்சும் சிறுநீரகமானது சிறுநீரை வெளியேற்ற அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் எண்ணத்தை உண்டாக்கும்.
👉 சோர்வும் மந்தமும்
அவ்வபோது பசி எடுப்பதும் சாப்பிட்டதும் களைப்பை உண்டாக்குவதும் கூட தொடக்க கால சர்க் கரை நோயின் அறிகுறி. உடலில் இருக்கும் நரம்புகள், திசுக்கள், இதயத்தசைகள், மூளை, நரம்பு மண்டலம் இரத்த ஓட்டத்தில் இருக்க கூடிய குளுக்கோஸை உறிஞ்ச இன்சுலின் அளவு போதுமான அளவு இருக்க வேண்டும். அவை குறையும் பட்சத்தில் அவற்றால் சரிவர வேலை செய்ய முடியாது அதனால் உடல் சோர்வு, அசதி போன்ற தொல்லைகள் வரக்கூடும்.
👉 கண் பார்வையில் மங்கல்
கண் பார்வை கூர்மையானவர்களுக்கு பார்வை திறன் மங்கலாக இருக்கும். பார்வையில் ஏற்கனவே குறைபாடு இருப்பவர்களுக்கு இவை மேலும் மங்கலான பார்வைகுறைபாட்டை உண்டாக்கும். கண்களில் இருக்கும் ரெட்டினா பகுதியை பாதிக்கும். அறிகுறியை அலட்சியம் செய்தால் கண் பார்வையை மங்க செய்து தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும்.
👉 ஆறாத காயம்
பொதுவாக உடலில் எங்கு காயம் ஏற்பட்டாலும் உடலே உள்ளிருக்கும் மருத்துவரை கொண்டு அடுத்த இரண்டு மணி நேரத்தில் காயங்களை ஆற்ற கூடிய வேலையை தொடங்கும். அத்தகைய ஆற்றலை அளிக்கு போதுமான இன்சுலின் சுரக்காத போது காயங்கள் ஆறுவதிலும் அதிக தாமதம் உண்டாகும்.
👉 மரத்துபோதலும் பூஞ்சை தொற்றும்
சர்க்கரை நோய்க்கான தொடக்க அறிகுறியில் இதுவும் ஒன்று. உள்ளங்கை, உள்ளங்கால் போன் றவை மரத்துபோக தொடங்கும். சருமத்தில் அரிப்பு உண்டாகும். சிலருக்கு தேமல் போன்று பூஞ் சைத்தொற்று உண்டாகும். இதில் அரிப்பு ஏற்படும். கை, கால்களில் உணர்ச்சிகள் குறையும்.
மேற்கண்ட அறிகுறிகள் எல்லாமே சர்க்கரை நோய் உங்கள் உடலில் நுழைவாயிலில் நின்றதற்கான அறிகுறிகளே. அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோ தனை செய்து கொள்வது நல்லது. சமயங்களில் இவை ஃப்ரீ டயாபட்டிக் ஆகவும் இருக்கலாம். அதாவது சர்க்கரை நோய் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் இவை. இவர்கள் சரியான உணவு கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதாலும் துணை உணவுகள் எடுத்துக்கொள்வதாலும் வாழ்நாளில் சர்க்கரை நோயால் உண்டாகும் உபாதைகளைத் தவிர்த்துவிடலாம்.
எனக்கு இப்போதுதான் 35 வயதாகிறது எனக்கு எப்படி சர்க்கரை நோய் சாத்தியம் என்று அலட்சி யம் கொள்ளாமல் கவனிப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
பயனுள்ள ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கும், நிபுணர்களுடன் நேரலை கலந்துரையாடல்களுக்கும் Healthy Tips குழுவில் இணைந்திருங்கள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
No comments:
Post a Comment