சார், மிஸ்டர் தண்டபாணி வீட்ல இருக்காரா?”
“இல்லைங்க”
“வெளில போயிருக்காரா?”
“இல்லைங்க”
“அதெப்படிங்க, வீட்லயும் இல்லாம வெளிலயும் போகாம ஒருத்தர் இருக்க முடியும்?”
“இருக்காரான்னு கேட்டப்பவே இல்லைன்னுட்டேன். இருந்தாத்தானே வெளில போக முடியும்? இல்லாதவர் எப்படிப் போக முடியும்?”
“வெளில போனதினாலே இல்லாம இருக்கலாம் இல்லையா?”
“இல்லாததாலே வெளில போகாம இருக்கலாம் இல்லையா?”
“வெளில போறத்துக்கு முன்னாலே வீட்ல இருந்தாரா?”
“வெளில போனாத்தானே போறத்துக்கு முன்னால இருந்தாரான்னு சொல்ல முடியும்? அதான் போகல்லைன்னுட்டேனே”
“ரொம்பக் குழப்பறீங்க. இது தண்டபாணி சார் வீடுதானே?”
“இல்லை”
“பின்னே ஏன் தண்டபாணி இருக்காரான்னு கேட்டதுக்கு இல்லைன்னீங்க?”
“நல்ல கதையா இருக்கே. தண்டபாணி அவர் வீட்ல இல்லைன்னா மட்டும்தான் வீட்ல இல்லைன்னு சொல்லணுமா? என் வீட்ல இல்லைன்னாலும் சொல்லலாமே?”
“இது தண்டபாணி வீடு இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே?”
“நீங்க இது தண்டபாணி வீடுதானேன்னு கேட்க வேண்டியதுதானே”😜😁
ஒருவர் : என் பையன் தங்கமானவன்டா!
மற்றவர் : எப்படி சொல்ற?
ஒருவர் : சிகரெட், தண்ணி.. எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது.
மற்றவர் : உன் பையனுக்கு என்ன வயசு?
ஒருவர் : ஒரு வயசு!
மற்றவர் : 😡😡
மனைவி : நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
கணவன் : அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்.. ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது. நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்!!
மனைவி : 😐😐
கடைக்காரன் : கடையில் 2000 ரூபாய்க்கு எது வாங்கினாலும் 1 கடிகாரம் இலவசம்!
பாபு : எது வாங்கினாலும் கடிகாரம் இலவசமா?
கடைக்காரன் : ஆமா
பாபு : அப்படின்னா 2000 ரூபாய்க்கு சில்லறை கொடு! அப்படியே அந்த கடிகாரத்தையும் கொடு..
கடைக்காரன் :
No comments:
Post a Comment