Tuesday, May 3, 2022

வேர்கடலை மசாலா

 வேர்கடலை மசாலா.. 

அனைவருக்கும் பிடித்தமான, ஆரோக்கியமுள்ள வேர்கடலை மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க .

🍱 தேவையான பொருட்கள் : 

வேர்க்கடலை- 3 கப்
வெங்காயம்- 1
பச்சை மிளகாய்- 2
உப்பு - தேவையான அளவு
மிளகாய்தூள்-1 டீஸ்பூன்
சாட் மசாலா -1டீஸ்பூன்
கேரட் துருவியது- 1/2 கப்
மாங்காய் துருவியது- 1/4 கப்
கருவேப்பிலை
கொத்தமல்லி

 செய்முறை ..

முதலில் வேர்க்கடலையை சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு வேகவைத்த வேர்க்கடலையில் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் துருவல், மாங்காய் துருவல், மிளகாய்தூள், சாட் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

பின்பு ஒரு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு மற்றும் கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்தால் சுவையான வேர்கடலை மசாலா ரெடி.



No comments:

Post a Comment