மைசூ ர் பாக்கு
தேவையான பொருட்கள் :
கடலை மாவு அரை கிலோ
சர்க்கரை அரை கிலோ
நெய்250 கிராம்
எண்ணெய்தேவையான அளவு
தண்ணீர்தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சர்க்கரை உருகும் வரை கிளறவும். சர்க்கரை உருகியதும் எண்ணெயையும் நெய்யையும் சேர்த்து பாகு பதம் வரும் வரை கிளறிக் கொண்டேயிருக்கவும்.
பிறகு, கடலை மாவை சிறிதளவு நெய் சேர்த்து வறுத்து வைக்கவும். எண்ணெய் சிறிது சுடாகி கொதிக்க தயாரானதும் நெய் மற்றும் எண்ணெயை சேர்த்து கடலை மாவை சிறிது சிறிதாக பாகில் சேர்த்து கட்டி விழாமல் கிளறிக் கொள்ளவும்.
மாவு கெட்டியானதும், மைசு ர் பாக்கை கொட்டும் தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் இருந்து பாத்திரத்தை எடுத்து தயாராக வைத்துள்ள நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக பரப்பவும்.
சிறிது சு டாறியதும் உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். சுவையான மைசு ர் பாக்கு தயார்.
No comments:
Post a Comment