Wednesday, May 4, 2022

உருளைக்கிழங்கு கொஸ்து

 உருளைக்கிழங்கு கொஸ்து        

தேவையான பொருள்கள்         உருளைக்கிழங்கு - 2, வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 2, நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி, கடுகு - ஒரு தேக்கரண்டி, கடலைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி, மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி, இட்லி மாவு - ஒரு கரண்டி, கொத்தமல்லி - 2 கொத்து, கறிவேப்பிலை - 2 கொத்து, உப்பு - தேவையான அளவு          

செய்முறை            வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும்.அதன் மேல் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கின வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போட்டு நன்றாக வதக்கவும்.இவற்றுடன் பெருங்காயப்பொடி, மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு போட்டு ஒரு முறை வதக்கவும்.

காய்கறிகள் நன்கு வதங்கிய பின், 3 டம்ளர் தண்ணீர் கலந்து குக்கரை மூடி 3 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து ஒரு கரண்டி இட்லி மாவு எடுத்து கலந்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.இதன் மேல் கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கலந்து விட்டால் சுவையான கொஸ்து தயார்.சுடச் சுட இட்லியுடன் கொஸ்து தொட்டு சாப்பிட்டு அதன் ருசியில் திளையுங்கள்.

No comments:

Post a Comment