Tuesday, May 31, 2022

இரத்த அழுத்தம் குறைய

 இரத்த அழுத்தம் குறைய எளிய மருத்துவக் குறிப்புகள்

 தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4 வௌளைப் பூண்டுப் பற்களை சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.

 முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் முள்ளங்கி இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும்.

 அதிகம் சத்தம் போட்டுப் பேசுவதை நிறுத்திவிட வேண்டும்.

 இரத்த அழுத்தம் குறைய தினமும் ஒரு வாழைப் பழம் சாப்பிடுவது நல்லது.

 உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம், நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் நல்லது.

 தினமும் 45 நிமிடம் நடைப் பயிற்சி செய்வது இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும்.

 உணவில் குறைந்த அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

 தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.

 எளிதில் சீரணமாகக்கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும்.

 உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும்.

 தினமும் உணவில் கறிவேப்பிலையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

 தினமும் யோகா மற்றும் தியானம்(ஆநனவையவழைn) செய்து வந்தால் இரத்த அழுத்தம் பெருமளவு குறையும்.

 அளவுக்கதிகமாக உள்ள உடற்பருமனைக் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.

 புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை நிறுத்துவதனால் இரத்த அழுத்தம் குறையும்

மரு. ஜெ. வினோத்

Monday, May 30, 2022

திருவல்லிக்கேணி பாட்டி

 மீள்.

ஒரு நாள், பார்த்த சாரதி மீள்.

ஒரு நாள், பார்த்த சாரதி கோவிலுக்கு போனேன்.

பக்தி ரசத்தில் அல்ல; ரசம் வைக்க ஈயச்சொம்பும், வத்தக் குழம்புக்கு கல் சட்டியும் வாங்க

கோவிலை ஒட்டிய ஒரு சிறிய சந்தில், வரிசையான, ஸ்ட்ரீட் ஹவுசஸ். எல்லாம் பழைய வீடுகள்.

அந்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் தான் கல் சட்டி வியாபாரம்.

அந்த தெருவிற்கு போனதும், என்னை முதலில் கவர்ந்தது, ஒரு திண்ணை வைத்த வீடு.

அந்த திண்ணையில் ஒரு மிக வயதான பாட்டி -

உட்கார்ந்த வாக்கில் கை பம்ப் அடிக்கிறார்.

அவர்களை விட சற்றே சிறிய மாமி, குடத்தில் அதை பிடித்து, நாலு படி ஏறி உள்ளே கொண்டு நிரப்புகிறார்.

கல் சட்டி வியாபாரத்தை சட்டென்று முடித்து, சுவாதீன மாக அந்த திண்ணையில் போய் உக்கார்ந்தேன்.

பேச்சுக் கொடுத்தேன்.

இனி எங்கள் உரையாடல் :-

நான்... "பாட்டி, இந்த வயதில், நடமாட்டம் கூட இல்லாத நீங்கள், தண்ணீர் அடிக்கிறீர்கள்?"

பாட்டி : "அதனால் என்னம்மா? நம் வீட்டு வேலை தானே. இதோ எதிர்த்தார்ப் போல் நாராயணன்.. அவன் பார்த்துப்பான். நானா அடிக்கிறேன்; அவன் ன்னா என் கையில் புகுந்து அடிக்கிறான்"

நான் - "பாட்டி, தண்ணீர் பிடித்து நடையாய் நடந்து ரொப்புவது யார்?"

பாட்டி - "அவள் என் சின்ன ஒர்ப்பிடி. அவள் மூலமாகத்தான் நாராயணன் எனக்கு பிடி சாதம் தினமும் தருகிறான்"

நான் - "வேறு யார் யார் இருக்கிறார்கள்?"

பாட்டி - எனக்கு ரொம்ப சின்ன வயதில் கல்யாணமாகி, இந்தாத்துக்கு வந்தேன்.

என் ஆத்துக்காரர், பெருமாளுக்கு சேவை செய்த குருக்கள். இந்த வீடு அப்போ, வாடகை இல்லாமல் கொடுத்தார்கள்.

எனக்கு குழந்தை பிறக்க வில்லை. அதைப் பற்றி எனக்கு வருத்தம் இல்லை.

இவருக்கு கீழ் கடையில் மூன்று தம்பி, மூன்று தங்கைகள்.

எல்லாரும் என் குழந்தைகளாக வளர்த்தேன்.

நிறைய கஷ்டம் தான். ஆனால், அந்த பெருமாள் கோவில் கோபுரத்தை பார்த்தால் எதுவுமே கஷ்டமாக தெரியாது.

எல்லாரும் கல்யாணம் பண்ணி, விட்டுச் சென்றார்கள்.

என் கணவரும் சீக்கிரமே இறக்க, நான் தனித்து விடப்பட்டேன்...

இல்லை இல்லை... நாராயணன் துணை என்னிக்கும் உண்டு.

"எனக்கு இப்போது 87 வயது.

ஒருவருமே என்னை வைத்துக் கொள்ளத பொது, என் கடைசி ஓர்ப்படி, என்னை பார்த்துக் கொள்கிறாள்.

அவளுக்கு ஒரே பெண். காலில் ஊனம். கஷ்டப்பட்டு வேலைக்குப் போய் சம்பாதித்து வருகிறாள்;

கல்யாணம் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறாள்.

என் ஒர்ப்படிக்கு (சுமார் 20 குடம் உள்ளே கொண்டு கொட்டியவருக்கு) 77 வயது.

நான் திண்ணையிலே தான் வாசம்.

என்னால் முடிந்தது, பகவான் தெம்பு கொடுத்திருக்கும் கையால் தண்ணி அடிப்பது.

சமையல் எல்லாம் ஒர்ப்படிதான்.

எனக்கு ஒரே வேளை, 12 மணிக்கு கொஞ்சம் மோர் சாதம். அவ்வளவு தான் என்னால் சாப்பிட முடியும்.

ராத்திரி ஒண்ணும் சாப்பிட மாட்டேன்"

"எனக்கு என்ன குடுப்பினை பாரும்மா...

நாள் முழுதும், கோவில் தரிசனம். அவன் வந்து அழைத்துப் போவான். அது வரை இப்படியே என் காலம் ஓடும்"

நான் ... "பாட்டி, உங்களுக்கு ஒருத்தரும் செய்ய வில்லை என்ற வருத்தம் இல்லையா ?"

பாட்டி... "கண்ணம்மா.. யார் செய்தா, யார் செய்யாட்டா என்ன.

பெருமாள் என்னை இங்கு அனுப்பிய காரணம் இந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கு செய்ய வேண்டும் என்பது.

எல்லாம் செய்து விட்டேன்.

திருப்தி தான்; குறை இல்லை.

அதே பெருமாள், என்னை பாத்துக்க ஒரு ஒர்ப்படியையும், ஒரு பெண்ணையும் கொடுத்திருக்கான்.

நீயும், வாழ்க்கையில் எந்த நேரத்திலும் குறை, கவலை படாதே.

எல்லாம் பெருமாள் பாத்துப்பான்.

நீ செய்யும் செயல் அத்தனையும் நீ செய்ய வில்லை. கோவிந்தன் செய்ய வைக்கிறான்.

இதில் பிற மனுஷாளை எப்படி குத்தம் சொல்ல முடியும்?" நிம்மதியாக இரு.

பாட்டி இன்னும் ஏதேதோ... பாசிடிவாக பேசினாள் -

இத்தனைக்கும் பள்ளிக்குப் போய் படித்தவள் இல்லை. அனுபவப்பாடம்;

புரிந்து கொண்ட வாழ்க்கை தத்துவம்.

கடைசியாக நான், "பாட்டி பணம் தரேன்; வாங்கிக்கறேளா" என்றேன்...

பாட்டி சிரித்தாள். அர்த்தம் பொதிந்த சிரிப்பு.

"பணமா, எனக்கா, எதுக்கு; நான் என்ன பண்ணப் போறேன்"

"பாட்டி, உங்களுக்கு வேண்டியது ஏதாவது, அல்லது சாப்பிட... " என்று இழுத்தேன். அதற்கும் சிரிப்பு.

"கோவிந்தன் என் பெண் மூலமாக என்னை பார்த்துப்பான். இதே திண்ணையில், அவனை பார்த்துக் கொண்டே ஒரு நாள் போய் சேருவேன்.

அந்த நாளைக்காக நான் நொந்து போய் காத்திருக்க வில்லை.

அதுவும் பெருமாளுக்கு தெரியும் என்னும் போது, நான் எதுவுமே யோசனை செய்ய அவசியம் என்ன.

எனக்கு பணமெல்லாம் வேண்டாம்"

என் புத்தி...உள்ளே போய், (ரொம்ப சிறிய போர்ஷன்) ... ஒரே ரூம்; கொஞ்சம் தடுத்து சமையல் அறை.

"மாமி, உங்க கிட்ட பழைய நாள் பாத்திரம் எல்லாம் இருக்கா ? எனக்கு ஆசை " என்றேன்.

மாமி சிரித்துக் கொண்டே, "நானே பாத்திரம் தேய்ப்பதால், அதெல்லாம் கட்டி ஆளமுடியாமல் எல்லா வற்றையும் போட்டு விட்டேன். தேவைக்கு வேண்டியது மட்டும் இருக்கு"

பாட்டியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்; கிளம்ப மனமே வரல்ல;

"பாட்டி, உங்க கிட்ட பேசினா, மனது லேசாகிறது !!"

"முடிந்தால் வாயேன்; எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசு" என்று வழி அனுப்பினாள்.

ஒரு சலிப்பு, அலுப்பு கிடையாது;

ஆசைகள் கிடையாது;

அந்த திண்ணையில் ஒரு தவம் மாதிரி இருக்கிறாள்.🙏🙏🙏

மற்றோரெல்லாம் கொச்சை படுத்தி சொல்கிறார்களே பாப்பாத்தி பார்பான் என்று அவர்கள் ஒதுங்கி வாழ்ந்தாலும் ஒருவருக்கும் பாரமாய் இருக்கவும் மாட்டார்கள். பிச்சை எடுத்தும்  மற்றவர்களை உதாசீனம் செய்து வாழவும் மாட்டார்கள். நக்கலும் நையாண்டியும் செய்து வம்புக்கிழுப்பது சுலபம். அவர்களைபோல் வாழ்வது கஷ்டம். அது ஒரு தவம்.

யார் சொன்னது ரிஷிகள் காட்டில் தான் வாழ்கிறார்கள் என்று. 🙏🙏

இன்று படித்ததில் நெகிழ்ந்ததும் மனம் மோனத்தில் லயித்ததும்!! 🙏🙏🙏 போனேன்.

பக்தி ரசத்தில் அல்ல; ரசம் வைக்க ஈயச்சொம்பும், வத்தக் குழம்புக்கு கல் சட்டியும் வாங்க

கோவிலை ஒட்டிய ஒரு சிறிய சந்தில், வரிசையான, ஸ்ட்ரீட் ஹவுசஸ். எல்லாம் பழைய வீடுகள்.

அந்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் தான் கல் சட்டி வியாபாரம்.

அந்த தெருவிற்கு போனதும், என்னை முதலில் கவர்ந்தது, ஒரு திண்ணை வைத்த வீடு.

அந்த திண்ணையில் ஒரு மிக வயதான பாட்டி -

உட்கார்ந்த வாக்கில் கை பம்ப் அடிக்கிறார்.

அவர்களை விட சற்றே சிறிய மாமி, குடத்தில் அதை பிடித்து, நாலு படி ஏறி உள்ளே கொண்டு நிரப்புகிறார்.

கல் சட்டி வியாபாரத்தை சட்டென்று முடித்து, சுவாதீன மாக அந்த திண்ணையில் போய் உக்கார்ந்தேன்.

பேச்சுக் கொடுத்தேன்.

இனி எங்கள் உரையாடல் :-

நான்... "பாட்டி, இந்த வயதில், நடமாட்டம் கூட இல்லாத நீங்கள், தண்ணீர் அடிக்கிறீர்கள்?"

பாட்டி : "அதனால் என்னம்மா? நம் வீட்டு வேலை தானே. இதோ எதிர்த்தார்ப் போல் நாராயணன்.. அவன் பார்த்துப்பான். நானா அடிக்கிறேன்; அவன் ன்னா என் கையில் புகுந்து அடிக்கிறான்"

நான் - "பாட்டி, தண்ணீர் பிடித்து நடையாய் நடந்து ரொப்புவது யார்?"

பாட்டி - "அவள் என் சின்ன ஒர்ப்பிடி. அவள் மூலமாகத்தான் நாராயணன் எனக்கு பிடி சாதம் தினமும் தருகிறான்"

நான் - "வேறு யார் யார் இருக்கிறார்கள்?"

பாட்டி - எனக்கு ரொம்ப சின்ன வயதில் கல்யாணமாகி, இந்தாத்துக்கு வந்தேன்.

என் ஆத்துக்காரர், பெருமாளுக்கு சேவை செய்த குருக்கள். இந்த வீடு அப்போ, வாடகை இல்லாமல் கொடுத்தார்கள்.

எனக்கு குழந்தை பிறக்க வில்லை. அதைப் பற்றி எனக்கு வருத்தம் இல்லை.

இவருக்கு கீழ் கடையில் மூன்று தம்பி, மூன்று தங்கைகள்.

எல்லாரும் என் குழந்தைகளாக வளர்த்தேன்.

நிறைய கஷ்டம் தான். ஆனால், அந்த பெருமாள் கோவில் கோபுரத்தை பார்த்தால் எதுவுமே கஷ்டமாக தெரியாது.

எல்லாரும் கல்யாணம் பண்ணி, விட்டுச் சென்றார்கள்.

என் கணவரும் சீக்கிரமே இறக்க, நான் தனித்து விடப்பட்டேன்...

இல்லை இல்லை... நாராயணன் துணை என்னிக்கும் உண்டு.

"எனக்கு இப்போது 87 வயது.

ஒருவருமே என்னை வைத்துக்கொள்ளத பொது, என் கடைசி ஓர்ப்படி, என்னை பார்த்துக் கொள்கிறாள்.

அவளுக்கு ஒரே பெண். காலில் ஊனம். கஷ்டப்பட்டு வேலைக்குப் போய் சம்பாதித்து வருகிறாள்;

கல்யாணம் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறாள்.

என் ஒர்ப்படிக்கு (சுமார் 20 குடம் உள்ளே கொண்டு கொட்டியவருக்கு) 77 வயது.

நான் திண்ணையிலே தான் வாசம்.

என்னால் முடிந்தது, பகவான் தெம்பு கொடுத்திருக்கும் கையால் தண்ணி அடிப்பது.

சமையல் எல்லாம் ஒர்ப்படிதான்.

எனக்கு ஒரே வேளை, 12 மணிக்கு கொஞ்சம் மோர் சாதம். அவ்வளவு தான் என்னால் சாப்பிட முடியும்.

ராத்திரி ஒண்ணும் சாப்பிட மாட்டேன்"

"எனக்கு என்ன குடுப்பினை பாரும்மா...

நாள் முழுதும், கோவில் தரிசனம். அவன் வந்து அழைத்துப் போவான். அது வரை இப்படியே என் காலம் ஓடும்"

நான் ... "பாட்டி, உங்களுக்கு ஒருத்தரும் செய்ய வில்லை என்ற வருத்தம் இல்லையா ?"

பாட்டி... "கண்ணம்மா.. யார் செய்தா, யார் செய்யாட்டா என்ன.

பெருமாள் என்னை இங்கு அனுப்பிய காரணம் , இந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கு செய்ய வேண்டும் என்பது.

எல்லாம் செய்து விட்டேன்.

திருப்தி தான்; குறை இல்லை.

அதே பெருமாள், என்னை பாத்துக்க ஒரு ஒர்ப்படியையும், ஒரு பெண்ணையும் கொடுத்திருக்கான்.

நீயும், வாழ்க்கையில் எந்த நேரத்திலும் குறை, கவலை படாதே.

எல்லாம் பெருமாள் பாத்துப்பான்.

நீ செய்யும் செயல் அத்தனையும் நீ செய்ய வில்லை. கோவிந்தன் செய்ய வைக்கிறான்.

இதில் பிற மனுஷாளை எப்படி குத்தம் சொல்ல முடியும்?" நிம்மதியாக இரு.

பாட்டி இன்னும் ஏதேதோ... பாசிடிவாக பேசினாள் -

இத்தனைக்கும் பள்ளிக்குப் போய் படித்தவள் இல்லை. அனுபவப்பாடம்;

புரிந்து கொண்ட வாழ்க்கை தத்துவம்.

கடைசியாக நான், "பாட்டி பணம் தரேன்; வாங்கிக்கறேளா" என்றேன்...

பாட்டி சிரித்தாள். அர்த்தம் பொதிந்த சிரிப்பு.

"பணமா, எனக்கா, எதுக்கு; நான் என்ன பண்ணப் போறேன்"

"பாட்டி, உங்களுக்கு வேண்டியது ஏதாவது, அல்லது சாப்பிட... " என்று இழுத்தேன். அதற்கும் சிரிப்பு.

"கோவிந்தன் என் பெண் மூலமாக என்னை பார்த்துப்பான். இதே திண்ணையில், அவனை பார்த்துக்கொண்டே ஒரு நாள் போய் சேருவேன்.

அந்த நாளைக்காக நான் நொந்து போய் காத்திருக்க வில்லை.

அதுவும் பெருமாளுக்கு தெரியும் என்னும் போது, நான் எதுவுமே யோசனை செய்ய அவசியம் என்ன.

எனக்கு பணமெல்லாம் வேண்டாம்"

என் புத்தி...உள்ளே போய், (ரொம்ப சிறிய போர்ஷன்) ... ஒரே ரூம்; கொஞ்சம் தடுத்து சமையல் அறை.

"மாமி, உங்க கிட்ட பழைய நாள் பாத்திரம் எல்லாம் இருக்கா ? எனக்கு ஆசை " என்றேன்.

மாமி சிரித்துக் கொண்டே, "நானே பாத்திரம் தேய்ப்பதால், அதெல்லாம் கட்டி ஆளமுடியாமல் எல்லா வற்றையும் போட்டு விட்டேன். தேவைக்கு வேண்டியது மட்டும் இருக்கு"

பாட்டியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்; கிளம்ப மனமே வரல்ல;

"பாட்டி, உங்க கிட்ட பேசினா, மனது லேசாகிறது !!"

"முடிந்தால் வாயேன்; எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசு" என்று வழி அனுப்பினாள்.

ஒரு சலிப்பு, அலுப்பு கிடையாது;

ஆசைகள் கிடையாது;

அந்த திண்ணையில் ஒரு தவம் மாதிரி இருக்கிறாள்.🙏🙏🙏

மற்றோரெல்லாம் கொச்சை படுத்தி சொல்கிறார்களே பாப்பாத்தி பார்பான் என்று அவர்கள் ஒதுங்கி வாழ்ந்தாலும் ஒருவருக்கும் பாரமாய் இருக்கவும் மாட்டார்கள். பிச்சை எடுத்தும் மற்றவர்களை உதாசீனம் செய்து வாழவும் மாட்டார்கள். நக்கலும் நையாண்டியும் செய்து வம்புக்கிழுப்பது சுலபம். அவர்களைபோல் வாழ்வது கஷ்டம். அது ஒரு தவம்.

யார் சொன்னது ரிஷிகள் காட்டில் தான் வாழ்கிறார்கள் என்று. 🙏🙏

இன்று படித்ததில் நெகிழ்ந்ததும் மனம் மோனத்தில் லயித்ததும்!! 🙏🙏🙏

Sunday, May 29, 2022

நல்ல குடி நீர்

 நல்ல குடி நீர் என்பதற்கும்,

சுத்தமான குடி நீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்...அவசிய பதிவு.

அவசியம் படியுங்கள்.

குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???.

நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும்
தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு
சாதனங்களை வைத்திருக்கிறோம். 

இந்த R.O சாதனத்தில் மூன்று
மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை
வெளியில் எடுத்துப் பார்த்தால்
வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.

அதை உதறி தட்டினால் அதிலிருந்து

மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.

நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த

வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.

ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே...நிச்சயமாக

அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.

கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து

எடுத்துக் கீழே கொட்டுகிறோமே!. 

அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத்
தேவைப்படும் அத்தியாவசிய
தாதுப் பொருட்கள் ஆகும். 

நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது

ஆர்.ஓ.சாதனத்தை பயன் படுத்தினால் மட்டுமே அந்தத்

தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.

தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத

தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே...ஆனால்

கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச்

சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்.ஓ வில் ஊற்றி வடிக்கச் செய்ய வேண்டும்.

யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம்
செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை.
தண்ணீரில் இருக்கும் அந்தத்
தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது.

தண்ணீரை R.O செய்து குடித்தால்
மனிதனுக்கு நோய் வரும்.வாழ்நாள் முழுவதுமே தீராது.

சரி...

மினரல் பாட்டில் வாட்டர் -ஐ
பயன்படுத்தலாமா?

மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது.

மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing Machine என்று ஒரு மெஷின் இருக்கும். 

இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது. 

எனவே நல்ல தண்ணீரை
ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக
மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை
செய்து அதை பாட்டிலில் அடைத்துப்
பணம் கொடுத்து வாங்கி
குடிக்கிறோம். 

எனவே தயவு செய்து பாட்டிலில்

அடைக்கப் பட்ட மினரல் வாட்டர்

என்று அழைக்கப்படும் தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.

குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைதான் என்ன?...

தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.

ஆர்.ஓ R.O செய்யக் கூடாது.

பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.

வேறு எப்படித்தான் தண்ணீரை

சுத்தப் படுத்துவது என்று கேட்டால்,

சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். 

அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச் சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே. 

யார் ஒருவர் குழாய் தண்ணீரை

நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க் கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக

இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.

குழாயில் வரும் தண்ணீரை எப்படிக்

குடிப்பது?...

தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது.தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது.

சாக்கடை நீர் கலந்து வருகிறது

என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.

எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.

உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர்

கெட்டு விட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டிலில்

மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து

பிரச்சாரம் செய்கிறது. 

அப்பொழுதுதானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டிலில்

தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள்

பிரச்சாரம் செய்கிறார்கள்.

மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் R.O பிளான்ட் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.

உண்மையிலேயே குழாய் தண்ணீர்

குடித்தால் ஒன்றும் ஆகாது. 

இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,

தண்ணீர் கெட்டிருக்கிறது என்று

ஒரு வேளை நாங்கள் நினைத்தால் உங்களது மன திருப்திக்காக சில காரியங்களை செய்யலாம். நான் கூறுவது போல உங்கள்

தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில்

இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை

சுத்திகரிக்கும் கருவி.

மண் பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட

பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கிறது. 

எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.

நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து

உங்கள் வீட்டில் ஆர்.ஓ எனும் குப்பை மிஷினை வாங்கி வைத்து இருக்கிறீர்களே நாற்பதாயிரம்

ரூபாய்க்கு மண் பானை வாங்கினால்

எவ்வளவு பானை கிடைக்கும். தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது. 

ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான

இயற்கையான ஒரு Water Filter வாட்டர் பில்டரை யாரும் பயன்படுத்துவதே இல்லை. 

எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்து குடித்தால் கெட்ட பொருள்களும்

அழியும். மண் சக்தியும் கிடைக்கும்,

பிராண சக்தி அதிகரிக்கும்.

வெள்ளை நிற பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டலாம்.

வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டினால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து

நோயை உண்டு செய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல்

பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்

மருத்துவமனைக்குச் செல்லாமல்

வெள்ளைத் துணியில் வடி கட்டிய நீரில் குளிப்பாட்டி குணப் படுத்தி இருக்கிறார்கள். 

எனவே தேவைப் பட்டால் இந்த

முறையில் தண்ணீரைச் சுத்தப் படுத்தலாம்.

செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலமாகவும் தண்ணீரை சுத்தப் படுத்தலாம்

செம்பு என்ற உலோக பாத்திரத்தின்

மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான

சக்தி கிடைக்கிறது. 

அதில் உள்ள கெட்டப்

பொருள் அழிக்கப் படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது.

எனவே செம்பு என்ற தாமிர உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க

பயன் படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை

சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கும்.

பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக்

கொண்டு இருப்பார்கள் என்பதை அறவீர்களா?.

அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால்

அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம்.

செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப் படுத்த முடியும். 

எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,செம்பு என்ற தாமிர உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை

சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள்

இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு R.O. சிஸ்டத்தை உபயோகிக்க வேண்டும்?.

இதுவும் இல்லாமல் பூமியில் உள்ள மண்ணில் உள்ள அடுக்குக்கு எத்தகைய தண்ணீரையும் சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.

அதே போல் மண்ணை சுட்டு கேன்டில் முறையில் எவர்சில்வர் வாட்டர் பில்டர் பாத்திரக் கடைகளில் கிடைக்கும்.அதுவும் இயற்கையான எளிதான முறைதான்.அதில் மூன்று கேன்டில் உள்ள வாட்டர் பில்டர் அனைத்து குடும்பத்துக்கும் உகந்தது.

வடிந்த தண்ணீரை மண் பானையில் ஊற்றி மகிழ்வுடன் அருந்துங்கள்.

என் அருமை மக்களே!... 

நோய் தீர்க்கும் குடி தண்ணீரை உதாசீனம் செய்யாதீர்கள்.

*தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே எனும் முன்னோர் வாக்கை நம்புங்கள்.*

R.O எனும் அமெரிக்க என்சைம் அரக்கனை தூக்கி எறியுங்கள்.

கழுத்தில் டை கட்டி விட்டு வந்தால் உடனே நம்பி மோசம் போகாதீர்கள்.

*நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.*

நாம் சந்தோஷமாக இருந்தால் நம் உடலில் நல்ல ஜெல் சுரக்கும்.

இல்லையேல் அமிலம் போன்ற ஜெல் சுரந்து உடல் கேடாகும்.

நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்....

*பலரை காக்க பகிர்வோம்.*

🙏🙏

புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில்

 *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே..!*

*அருள்மிகு ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை , பாலசுகாம்பிகை உடனுறை ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில்.*

பழமை :1500 ஆண்டுகளுக்கு மேல்.

இக்கோயிலின் இறைவனான சிவபெருமானின் மூலவர் புஷ்பரதேஸ்வரர் என்கிற பெயரிலும், உற்சவர் சோமாஸ்கந்தர் என்கிற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர்.அம்பாள் ஸ்வர்ணாம்பிகை, பாலசுகாம்பிகை ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்

தல விருட்சம் : நாகலிங்க மரம்.

தீர்த்தங்கள் : சந்திர புஷ்கரிணி, சிம்ம தீர்த்தம்.

இக்கோயிலில் மூலஸ்தானத்திற்கு முன்பாக சூரியன், புஷ்பரதேஸ்வரர் சந்நிதியை பார்த்தவாறு இருக்கிறார். இவர் இங்கு சிவபெருமானை எப்போதும் வழிபட்டுக்கொண்டிருப்பதாக ஐதீகம். சித்திரை மாத பிறப்பின் போது முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை ஆகியோர் மீது சூரிய ஒளி படுகிறது. இக்காலத்தில் சூரியன் இவர்கள் இருவருக்கும் பூஜைகள் செய்வதாக ஐதீகம். எனவே அந்த தினத்தில் சிவனுக்கு உச்சி கால பூஜைகள் செய்வதில்லை. சைவ சமய நால்வரில் ஒருவரான சுந்தரரின் மனைவியான சங்கிலி நாச்சியார் இவ்வூரில் பிறந்தவர் ஆவார். இவருக்கும் இங்கு சந்நிதி இருக்கிறது.

ஞாயிறு .

*திருவள்ளூர் மாவட்டம்.*

Saturday, May 28, 2022

மூதாட்டி மேல் உப்பு தண்ணி

 *"உப்புத் தண்ணீரை மூதாட்டிமேல் கொட்டச் சொன்ன மகாபெரியவர்!"*

மகாபெரியவர் திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்த காலகட்டம் அது. யாத்திரைக்கு இடையே வழுவத்தூர் என்ற கிராமத்தில் தமது பக்தரான ராமசுவாமி என்பவர் வீட்டில் தங்கியிருந்தார் மகான்.

ஒரு நாள் மாலை நேரம் தரிசனம் எல்லாம் முடிந்த பிறகு பக்தர் ராமசுவாமியை அழைத்தார் மகான். "பசுக்கொட்டகையில் இருந்து ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் பாதியளவு தண்ணீர் நிரப்பி, இரண்டு கைப்பிடி கல் உப்பைப் போட்டு இங்கே கொண்டு வா!" என்றார். 

அவர் சொன்னபடியே ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி உப்புப்போட்டு எடுத்து வந்தார், தொண்டர். 

கொஞ்சம் உயரமான திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தமது இரு கால்களையும் அந்த உப்புத் தண்ணீருக்குள் வைத்துக் கொண்டார், மகான்.

அவர் அப்படிச் செய்தது, புதுமையாக இருக்கவே, பலரும் அங்கே கூடிவிட்டார்கள். "இன்றைக்கு ரொம்ப நேரம் ஒரே மாதிரி அசையாம உட்கார்ந்திருந்தேனா...அதுல கால் இறுகிக் கொண்டு வலிக்கிறது...அதுக்குதான்!" யாரும் கேட்காமலே சொன்னார் பெரியவர்.

கொஞ்ச நேரம் கழித்து மகான் அந்தப் பாத்திரத்தில் இருந்து தமது திருவடிகளை எடுத்ததுதான் தாமதம். அதற்காகவே காத்திருந்ததுபோல எல்லோரும் நெருங்கி அந்த நீரை தீர்த்தமாக பாவித்து தலையில் தெளித்துக் கொண்டார்கள்.

திடீரென்று மகான், " அந்த ஜலத்தை முழுசா தீர்த்துடாதீங்கோ...ஒரு செம்புல கொஞ்சம் நிறைச்சு வையுங்கோ!" சொல்ல, இப்போது எல்லோர் மனதிலும் ஏன்? எதற்கு? என்ற கேள்வி எழுந்தது. இருந்தாலும் மகான் சொன்னபடி ஒரு செம்பில் அந்த உப்பு நீரை எடுத்து வைத்தார்கள்.

அன்று இரவு நெருங்கும் நேரம். வயதான பாட்டி ஒருவர் வந்து மகாபெரியவர் முன் நின்றார். எதுவும் பேசாமல், மகானையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் இருந்து அருவியாக நீர் பெருகி வழிந்தது.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மகான், "என்ன காசி, ராமேஸ்வரம் போகவேண்டும் என்று ஆசை. ஆனால் கையில் காசு இல்லையே! என்ற ஏக்கத்தோடு என்னிடம் வந்திருக்கிறாயோ!" மென்மையாகக் கேட்டார்.

"ஆமாம் பெரியவா!" தழுதழுப்புக்கு இடையே இந்த இரட்டை வார்த்தைகளை மட்டும் உதிர்த்தார் அந்த மூதாட்டி. 

எதுவும் சொல்லாமல் உள்புறம் திரும்பி, "ராமசுவாமி, அந்த செம்புல நிரப்பி வைத்த ஜலத்தை எடுத்துக் கொண்டு வா!" குரல் கொடுத்தார் மகான்.

மறு நிமிடம் செம்பு நீரை எடுத்துக் கொண்டு அவர் வர, "அதை அப்படியே அந்தப் பாட்டி தலையில் ஊற்று...!"

மகானின் கட்டளை பிறக்க, அதை அப்படியே நிறைவேற்றினார், தொண்டர். அடுத்ததாக, தமது கையில் இருந்த கமண்டல நீரை, காலியான செம்பில் ஊற்றிய மகான், அதையும் அந்தப் பாட்டி தலையில் ஊற்றச் சொன்னார். 

"முதல்ல ராமேஸ்வரம்.. அடுத்தது காசி... ரெண்டு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடின பலன் உனக்குக் கிடைச்சாச்சு. கவலைப்படாமல் போ..எல்லாம் நல்லபடியாக நடக்கும்!" கை உயர்த்தி ஆசிர்வதித்தார் மகான்.

மனம் முழுக்க பரிபூரண திருப்தியுடன் புறப்பட்டார் அந்த மூதாட்டி. இதுவரை நடந்ததெல்லாம் சாதாரணமானதாகவே தோன்றியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு தகவல் வரும் வரை. அந்தச் செய்திதான், மகானின் திருவிளையாடலை உணர்த்தியது அனைவருக்கும்.

மகானை தரிசித்துவிட்டுப் போன அந்த மூதாட்டி, அதற்கு மறுநாளே முக்தி அடைந்திருந்தார். விஷயத்தை மெதுவாக மகாபெரியவரிடம் தெரிவித்தார் அணுக்கத் தொண்டர் ராமசுவாமி.

கொஞ்சமும் பதற்றமில்லாமல் அதைக் கேட்டுக்கொண்ட மகான், "அதனாலதான், நேத்திக்கே உன்னை அவளுக்குப் புண்ணிய தீர்த்த ஸ்நானம் பண்ணிவைக்கச் சொன்னேன்! கஷ்டமே இல்லாம முக்தி கிடைச்சிருக்கும் அவளுக்கு!" சொல்ல திடுக்கிட்டுப் போனார் அந்த பக்தர்.

தன்னை தரிசிக்க வரப்போகிற மூதாட்டிக்கு காசி, ராமேஸ்வர புண்ணிய தீர்த்தத்தில் நீராடும் ஆசை இருப்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, உப்பு நீரை (ராமேஸ்வரம் கடல்நீர்) எடுத்துவைக்கச் சொன்னதும், அதையும், தமது கமண்டல தீர்த்தத்தையும் (சன்யாசிகளின் கமண்டல நீரில் கங்கை வாசம் செய்வதாக ஐதிகம்) அந்த மூதாட்டி மேல் அபிஷேகிக்கச் சொன்னதும் ஆச்சரியம் என்றால், அவளது முக்தியை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, தாமதிக்காமல் அவள் ஆசையைப் பூர்த்தி செய்து புண்ணியம் தேடித் தந்தது எத்தனை பெரிய திருவிளையாடல்!   

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!

திருப்புலியூர்

 கேரளாவில் உள்ள 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றானதும், பீமன் வழிபட்ட தலமான 

#திருப்புலியூர் என்ற #குட்டநாடு #மாயப்பிரான்

திருக்கோயில் வரலாறு:

திருப்புலியூர் அல்லது புலியூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில் (குட்டநாடு) அமைந்துள்ளது. இறைவன் மாயபிரான் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இத்தலம் பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் புதுப்பிக்கப்பட்டது. இவ்விடத்திலிருந்து பீமன் திருமாலைக் குறித்து தவம் புரிந்த்தால் இத்தலம் பீமச் சேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கருவறை வட்டவடிவமான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. 

மூலவர்:மாயப்பிரான்
தாயார்:பொற்கொடி நாச்சியார்
தீர்த்தம்:பிரக்ஞாசரஸ் தீர்த்தம்
புராண பெயர்:குட்டநாடு
ஊர்:திருப்புலியூர்
மாவட்டம்:ஆலப்புழா
மாநிலம்:கேரளா

பாடியவர்கள்:

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்

"அன்றி மற்றோர் உபாயமென் இவளந் தண்துழாய் கமழ்தல் குன்ற மாமணி மாட மாளிகைக் கோலக் குழாங்கல் மல்கி தென்திசைத் திலதம் புரை குட்டநாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே"

-நம்மாழ்வார்

திருவிழா:

மார்கழி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றி, பத்தாம் நாள் ஆறாட்டு நடைபெறுகிறது. தை மாதம் முதல் தேதியில் காவடியாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. கேரள மாநிலத்தில் பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ததாக கூறப்படும் பெருமாள் கோயில்களில் இத்தலம் பீமன் பிரதிஷ்டை செய்தது. இங்குள்ள மிகப்பெரிய “கதாயுதம்’ பீமன் உபயோகித்ததாக கூறுவர். பீமனைப்போன்றே கோயிலும் அகன்று விரிந்து பரந்த கட்டுமான அமைப்பை கொண்டுள்ளது.

பொது தகவல்:

இங்குள்ள கொடிமரம் மற்ற கோயிலை விட மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தலபெருமை:

நம்மாழ்வார் காலத்தில் இப்பகுதியில் ஒரு பெரிய நகரம் இருந்ததாக அவரது பாடலில் அறிய முடிகிறது. பண்டைத்தமிழகத்தில் 12 உட்பிரிவுகள் இருந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது. அதில் ஒரு பிரிவு குட்டநாடு. இத்தலத்தை இப்பகுதி மக்கள் “குட்டநாடு திருப்புலியூர்’ என்று அழைக்கின்றனர். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதிக்கு மேல் உள்ள விமானம் புருஷஸுக்த விமானம் எனப்படுகிறது. இத்தல பெருமாளை சப்த ரிஷிகள் வழிபாடு செய்துள்ளனர்.

தல வரலாறு:

ஒரு முறை சிபிச்சக்கரவர்த்தியின் மகனான விருஷாதர்பி என்பவன் இப்பகுதியை அரசாண்டு வந்தான். அப்போது அவனுக்கு ஏதோ ஒரு சாபத்தினால் கடுமையான நோய் உண்டானது. அத்துடன் அவனது நாட்டில் கொடிய வறுமையும் ஏற்பட்டது. அச்சமயம் இந்த நாட்டிற்கு சப்தரிஷிகள் வருகை புரிந்தனர். அவர்களிடம் மன்னன், தனக்கும் தன் நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை போக்கினால் தான், தன்னால் தானம் ஏதும் கொடுக்க முடியும் என கூறினான். தானம் என்ற சொல்லைக்கேட்ட ரிஷிகள் கோபத்துடன்,””மன்னா! உன் போன்ற மன்னர்களிடம் தானம் பெறுவது மிகப்பெரிய பாவமாகும்,”என மறுத்துவிட்டனர். ஆனாலும் மன்னன் ரிஷிகளுக்கு கொடுப்பதற்காக மந்திரிகள் மூலம் தங்கத்தையும், பழங்களையும் அனுப்பி வைத்தான். இதையும் முனிவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ரிஷிகளின் இந்த செயலால் மன்னன் கோபமடைந்தான். மாபெரும் யாகம் ஒன்றை நடத்தி அதில் தோன்றிய தேவதையை, சப்தரிஷிகளை கொல்வதற்காக அனுப்பி வைத்தான். இதனையறிந்த ரிஷிகள் தங்களை காக்க மகாவிஷ்ணுவை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற விஷ்ணு, இந்திரனை புலியாக மாறும்படி செய்தார். புலி தேவதையை கொன்றது. இதனால் இத்தலம் “திருப்புலியூர்’ ஆனது என்பர். ரிஷிகள் அனைவரும் பெருமாள் ஒருவரே பரம்பொருள். மற்ற அனைத்தும் மாயை என நினைத்து வழிபாடு செய்தனர். இதனால் பெருமாள் இவர்களுக்கு மாயப்பிரானாக காட்சிதந்தார்.

கோயில் அமைப்பு:

இருபத்தோரு படிகள் ஏறி கோயிலுக்குள் நுழைய வேண்டும். இடது பக்கத்தில் பெரியதொரு கதை சிற்பத்தைக் காணலாம். பீமனால் புனருத்தாரணம் செய்யப்பட்டதன் நினைவாகவே அவனது கதை அங்கே சிற்பமாக வைக்கப்பட்டுள்ளது என்றார்கள்.

பீமனைப் போலவே, அழகாக பருத்து உயர்ந்த தூண்கள் கொண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. பிராகாரச் சுற்றில் ஐயப்பன் தனிச் சந்நதி கொண்டிருக்கிறார். அவருக்கு அருகில் இன்னொரு சந்நதியில் சிவபெருமான், லிங்க ரூபமாக. அருகே ஒரு பலா மரம். அதனடியில் ஆதிசேஷ மஹாவிஷ்ணுவையும், வித்தியாசமாக ஆதிசேஷன் குடைபிடிக்க சிவனையும் தரிசிக்கலாம். சற்றுத் தொலைவில் பெரிய அரசமரம் ஒன்றின் அடியில் மேடை கட்டியிருக்கிறார்கள். பக்கத்தில் மிகப் பெரிய அன்னதானக் கூடம். 

இன்னும் கொஞ்சம் நடை பயின்றால், சற்றே பெரியதொரு சந்நதியில் நெற்றிக்கண், கண்கள், மூக்கு பதிக்கப்பட்ட முகத் தோற்றத்துடன் ஒரு லிங்கம் அருள்பாலிக்கிறது. இந்த சந்நதியை இடமாகச் சுற்றிச் சென்று கோமுகியை அடைந்து பிறகு திரும்பி வந்து சந்நதி முன் நின்று ஈசனை வணங்குகிறார்கள். வலம் வருவதில்லை. மூலக்கருவறை மண்டபத்திற்குள் நுழைய மிகச் சிறிய வழி கொண்டு ஒரு தடுப்பு இருக்கிறது. ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே முதலில் ஒரு காலும், அடுத்து இன்னொரு காலுமாக நுழைத்து உள்ளே செல்ல வேண்டும்.

ஆடு, மாடுகள் கோயிலுக்குள் நுழைந்துவிடாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு’ என்றார்கள். கருவறைச் சுற்றில் மிகச் சிறிய சந்நதியில் பகவதியை தரிசிக்கலாம். அடுத்து சிறு அளவில் யாகசாலை. கருவறை, வட்டவடிவமாக, கேரள பாரம்பரியத்தை விளக்குகிறது. இதன் நான்கு ஆரங்களில் நான்கு சாளரங்கள். ஆனால், அவை எப்போதும் சாத்தியே இருக்கும் என்கிறார்கள். நான்கு திக்குகளிலிருந்தும் வெளியேயிருந்து வரும் பக்தர்கள் கருவறைப் பகுதியை அடைய முடிகிறது.

அபிஷேக பொருட்கள் வெளியேறும் கோமுகி வித்தியாசமான அமைப்பாக இருக்கிறது. தென்னாட்டில் இருப்பது போன்ற ஒரு பசுவின் முகமாக இது இல்லாமல், உள்ளிருந்து வரும் சிறு கால்வாய் அமைப்பு, சிற்ப வடிவான ஒரு தேவியின் தலைமீது வந்து முடிகிறது. இதிலிருந்து வரும் அபிஷேக தீர்த்தத்தை பக்தர்கள் கையில் ஏந்தி தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். சிலர் அந்த தேவியின் காதருகே போய் தம் வேண்டுகோளை ரகசியமாகச் சொல்லிவிட்டு வந்ததையும் பார்க்க முடிந்தது - தமிழ்நாட்டில் சிலர் நந்தி காதில் வேண்டுகோள் விடுப்பதுபோல!

மூலவர் மாயப்பிரான் சிறு உருவினரானாலும் ஒளிமிகுந்து காணப்படுகிறார். எண்ணெய் தீபத்திலும் அழகுறப் பிரகாசிக்கும் அவர் பக்தர்களின் வாழ்க்கை மாயங்களை விலக்கி, மங்களங்களை அருளும் மாயப்பிரான். அந்தச் சிறு கருவறையிலிருந்து அவர் தீட்சண்யமாக நோக்கி நம் மனவிகாரங்களைப் போக்குவதும் புரிகிறது.

3200 வருடங்கள் புராதனமானது இக்கோயில் என்கிறார்கள். ஒவ்வொரு ஜனவரி மாதமும் மகரசங்கராந்தி தினத்தன்று பக்தர்கள் காவடி எடுக்கிறார்கள். பிறகு ஒரு வாரம் கழித்து கொடியேற்றி விழா கொண்டாடுகிறார்கள். 

நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த திவ்யதேசம் இது. இவர்களில் நம்மாழ்வாரின் பங்கு - 11 பாசுரங்கள்! இந்தத் திருத்தலத்தைதான் நம்மாழ்வார் எப்படி பிரமித்துப் பாராட்டுகிறார்! ‘திடவுசும்பிலமரர் நாட்டை மறைக்கும் தன் திருப்புலியூர், குன்ற மாமணி மாட மாளிகை, சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்.... ’ அமரர் நாடான தேவலோகத்தையே மறைக்கும் அளவு பிரமாண்டமான மாடமாளிகைகள் கொண்டிருந்தது திருப்புலியூர். இப்பதி எத்தகைய வளங்களைக் கொண்டிருந்ததாம்? ஊர்வளம் கிளர் சோலையும், கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து ஏர்வளம் கிளர் தண் பணைக் குட்ட நாட்டுத் திருப்புலியூர் சீர்வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ் தேவபிரான் பேர்வளம் கிளர்ந்து அன்றிப் பேச்சு இலள் இன்றிப் புனை இழையே - சோலைகள் பெருகி, கரும்பு, செந்நெல் பயிர் அபிரிமிதத்தால் வளம் கொழிக்கும் ஊர் இந்தக் குட்டநாடு (எனும் திருப்புலியூர்). 

ஓம் நமோ நாராயணாய 🙏27.5.22.

சமையல் டிப்ஸ் பகுதி 06

 சமையல் டிப்ஸ் பகுதி 06

1) தேங்காய் துருவும் போது, தேங்காய் ஓடும் சேர்ந்து வரும் அளவிற்கு துருவக் கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.

2) துவையல் அரைக்கும் போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது மிளகு.

3) துவரம்பருப்பை வேக வைக் கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

4) காய்கறிகளை நறுக்கிய உடனேயே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல், வெகுநேரம் வைத்திருந்தால், காற்று பட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துக்கள் போன காய்கறிகளை உண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்துவிட வேண்டும்.

5) தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்க, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.

 6) தேங்காய் துருவும் போது, தேங்காய் ஓடும் சேர்ந்து வரும் அளவிற்கு துருவக் கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.

7) துவையல் அரைக்கும் போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது மிளகு.

8) துவரம்பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

9) பெண்கள் மாதவிலக்கு காலத்தில் கோதுமை கஞ்சி உண்டு வந்தால், மாதவிலக்கு ஒழுங் காக நடைபெறும்.

10) பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்.




சமையல் டிப்ஸ் பகுதி 05

 சமையல் டிப்ஸ் பகுதி 05

1) அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்கிறதா? கவலை வேண்டாம். சாதாரணத் துணியாலோ அல்லது டிஷ்யூ பேப்பராலோ துடைத்து எடுங்கள். 

பின்னர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்துப்பாருங்கள். பளிச் சென்று ஆகிவிடும்.

2) கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் கடுகைப் போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவுங்கள். துர்நாற்றம் போய்விடும்.

3) கேரட் அல்வா செய்யும் போது கேரட்டைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த தண்ணீரில் சிறிது நேரம் வைத்துத் தோலைச் சீவினால் மிகச் சுலபமாகத் தோலை நீக்கிவிடலாம்.

4) வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் மாவு இறுகிவிடும்.

5) பஞ்சு போன்ற இட்லிக்குக் கிரைண்டரில் உளுந்தம் பருப்பு, பாதி மசிந்ததும் எட்டு ஜஸ் க்யூப்களைப் போட்டு அரையுங்கள். மாவும் அதிகம் வரும். இட்லியும் பூப்போல மெத்தென்றிருக்கும்.

6) ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, உணவின் சுவையும் சூப்பராக இருக்கும்.

7) முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்களை வாங்கும் போது, அவற்றின் இலைகளோடு சேர்த்து வாங்க வேண்டும். அந்த இலைகளை பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். சூப் தயாரித்தும் சாப்பிடலாம்.

8) அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.

9) பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்.

10) தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.


சமையல் டிப்ஸ் பகுதி 04

 சமையல் டிப்ஸ் பகுதி 04

1) அரிசி உப்புமா செய்யும் போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

2) ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும் போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும் போது தனி மணமும், ருசியும் காணலாம்.

3) பீன்ஸ், பட்டாணி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் நன்றாக குழைய வேக வைக்க வேண்டுமா? முதலில் உப்புப் போடாமல் வேக வைத்து, வெந்தபிறகு உப்பு சேர்க்க வேண்டும்.

4) பனீர் மசாலா செய்யும் போது பனீரை வறுத்த உடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட வேண்டும். பனீர் பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.

5) சப்பாத்திக்காக கோதுமை பிசையும் போது வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொஞ்ச நேரம் ஊறவைத்து பிறகு சப்பாத்தி செய்தால் மென்மையாக பூப்போல இருக்கும் .

6) ரசம், சாம்பார், கீரை மசியலை இறக்கிய பின், பெருங்காயத் தூள் போட்டால் மணம் ஊரைத் தூக்கும்.

7) கொத்தமல்லி, புதினா துவையல்கள் அரைக்கும் போது, தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் சுவை தரும்.

8) கத்திரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும் போது கொஞ்சம் கடலை மாவைத் தூவிப் பாருங்கள். கூட்டு, பொரியல் சுவையாக இருக்கும்.

9) மைக்ரோவேவ் ஒவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஒவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க பளிச் சென்று இருக்கும்.

10) பீட்ரூட் நறுக்கும் போது கைகளில் கறை ஒட்டுவதைத் தடுக்க, பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். 

பின்பு தோலை எடுத்துவிட்டு துண்டுகளாக்கினால் கறை ஒட்டாமல் இருப்பதோடு, காய் நறுக்குவதற்கும் எளிதாக இருக்கும்.


சமையல் டிப்ஸ் பகுதி 03

 சமையல் டிப்ஸ் பகுதி 03

1) வாங்கி சில நாட்கள் ஆகிவிட்ட காலிபிளவர், முள்ளங்கி,முட்டைகோஸ், டர்னிப் ஆகியவை செய்யும் போது மிகவும்சகிக்க முடியாத வாடை ஏற்படும். 

இதை தவிர்க்க, சிறிது எலுமிச்சை சாறும், சர்க்கரையும் கலந்து சமைத்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

2) தயிர் பச்சடி நீர்த்துப் போய்விட்டால், சிறிது நிலக்கடலையை வறுத்து நைசாக பொடி

செய்து கலந்துவிடலாம். இதனால்,பச்சடி கெட்டியாவதோடு சுவையும், சத்தும் கூடும்.

3) கேரட், பீட்ரூட், முள்ளங்கி ஆகியவை உடலுக்கு அதிகம் நன்மை பயப்பவை. இவற்றில் தோலை அரிந்து எறிந்து விடக்கூடாது. தோலுடன் சமைப்பதே சிறந்த முறை.

4) கீரை வகைகள் வேகும் போது அதிலிருந்து ஒரு வித நச்சுக் காற்று வெளியேறும்.எனவே, வேகும் போது மூடி போட்டு மூடக் கூடாது.அவ்வாறு மூடினால் நச்சுக் காற்று கீரையிலேயே தங்கி உடலுக்கு கெடுதியைஉண்டு பண்ணும்.

5) அரிசி, தானிய வகைகளை அதிகளவில் நீரில் கழுவக் கூடாது. அதிலுள்ள தாதுக்கள்,வைட்டமின்கள் தண்ணீரில் கரைந்துவிடும்.

 6) தக்காளி சூப் செய்து நீண்ட நேரம் வைத்திருந்தால், அதுஅமிலத் தன்மை உடையதாக மாறிவிடும். இதை தடுக்க சூப் இளஞ்சூடாக இருக்கும் போதே ஒரு சிட்டிகை சோடாமாவு சேர்க்க வேண்டும்.

7) பருப்புகளை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

8) உருளைக்கிழங்கை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது மஞ்சள்,எண்ணெய் சேர்த்து, வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

9) பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப்பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

10) காய்கறிகள் வாங்கும் போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும். புடலங்காய் கசப்பாக இருந்தால், அவை பாம்பு ஏறிய காய் என்பார்கள். ஆகவே சிறிது கிள்ளி சுவைத்து பார்த்து வாங்க வேண்டும்.


சமையல் டிப்ஸ் பகுதி 02

 சமையல் டிப்ஸ் பகுதி 02

1) பூண்டை எளிதில் உரிக்க இன்னொரு ஐடியா. பூண்டில் தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் அரைத்தால், தோல் அனைத்தும் மேலே எழும்பி, ஜாரின் மேற்புறத்தில் ஒட்டிக் கொள்ளும். கீழேஉரித்த பூண்டு, மையாய் அரைந்திருக்கும். ஒரே நேரத்தில் இரு வேலை.

2) சாம்பார், வற்றல் குழம்பு ஆகியவற்றில் காரம் அதிகமாகிவிட்டால், நல்லெண்ணெயை ஊற்றி கொஞ்சம் கொதிக்க விடுங்கள்.காரம் குறைந்து விடும், குழம்பின் வாசனையும் நன்றாக இருக்கும்

 ஆனால், குருமா போன்ற கிரேவியான ஐட்டங்களில் காரம் கூடினால், ஒரு ஸ்பூன் வெண்ணெய் போட்டு கொதிக்க வையுங்கள். காரம் குறைந்துவிடும்.

3) குழம்பில் புளி அதிகமாகி விட்டால், சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை உடனே சரியாகி விடும்.

4) சாம்பாரில் சில சமயம் பருப்பு சேராமல் நீர்க்க இருக்கும். அப்போது துவரம்பருப்பு சிறிது எடுத்து மிக்சியில் அரைத்து சாம்பாரில் சேர்த்துநன்கு கொதிக்க விடுங்கள். சாம்பார் கெட்டியாகிவிடும்.

அரிசி மாவு கரைத்து விடுவதை விட, இவ்வாறு செய்வதுசாம்பாரின் ருசியை அதிகரிக்கும்.

5) ரோஸ்ட் செய்யும் கறிகளில், எண்ணெய் அதிகமாகிவிட்டால்,கறிகளின் மேல் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை தூவினால், கறியின் எண்ணெயை அரிசிமாவு உறிஞ்சிக் கொண்டு விடும்; கறியும் மொறு மொறுப்பாக இருக்கும். கடலை மாவும் தூவலாம். 

ஆனால், கடலை மாவு சுவையை கூட்டினாலும் கறிகளுக்குமொறுமொறுப்பை தராது.

6) பாயசம் நீர்த்துவிட்டால் எந்த பாயசமாக இருந்தாலும் சரி இரண்டு டீஸ்பூன் சோளமாவு அல்லது பால் பவுடர் கரைத்து பாயசத்தில் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டால் பாயசம் கெட்டியாகிவிடும்.

7) சாதம் வேகாமல் நறுக்கரிசியாக இருந்தால், சாதத்தின் மேல் சிறிது தண்ணீரை தெளித்து குக்கரில் வைக்கவும். 

ஆவி வந்ததும்,”வெயிட்’ போட்டு உடன் அணைத்து விடவும். 

சத்தம் அடங்கியவுடன் குக்கரை திறந்தால் சாதம் பூவாக வெந்து இருக்கும்.

8) சில சமயங்களில் தண்ணீர் நன்றாக இல்லாவிட்டால், சாதம் நிறம் சற்று மங்கலாக இருக்கும். 

அப்போது அரிசி களைந்து குக்கரில் வைக்கும் போது சில சொட்டு எலுமிச்சை சாறு விட்டு வைத்தால், சாதம்பொலபொலவென்றும் வெண்மையாகவும் இருக்கும்.

9) ரசத்தில் புளி குறைந்துவிட்டால், கைவசம் மாங்காய் பொடி இருந்தால் போதும். 1/4 டீஸ்பூன் பொடி தேவையான புளிப்பை தந்துவிடும்.

10) தோசைமாவு, இட்லி மாவு மிகவும் புளித்துவிட்டால்,ஒரு டம்ளர் பால் ஊற்றினால் போதும் புளிப்பை போக்கிவிடும்.




சமையல் டிப்ஸ் பகுதி 01

சமையல் டிப்ஸ் பகுதி 01

1) இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது ஃபிரிட்ஜ் வாட்டர் ஊத்தி அரைங்க. மாவு நல்லா பொங்கி வரும்.

 இட்லிமாவு புளிச்சு போச்சுன்னா மாவுல ஒரு ரெண்டு சொம்பு தண்ணி ஊத்தி நல்லா கலக்குங்க. அந்த பாத்திரத்தை அப்படியேவெச்சு இருந்து ஒரு பத்து பதினைஞ்சு நிமிசம் கழிச்சு மேல நிக்கற தண்ணிய மட்டும் வடிச்சுட்டுதோசை ஊத்தினா நமக்கு புளிக்காத தோசை ரெடி. இல்லை என்னால அத்தனைநேரம் வெயிட் செய்யமுடியாதுன்னு சொல்ற அவசர பார்ட்டியா? ..

ஒரு அரைடம்ளர் பாலு சேர்த்து கலக்கி ஊத்துங்க. இப்ப புளிப்பு கம்மியாகி வாயில வெக்கலாம் ரேஞ்சுக்கு இருக்கும்.

2) சப்பாத்திமிருதுவா இருக்கணுமா? சூடு தண்ணியும் பாலும் ஊத்தி பிசைய

சொல்லுங்க. சப்பாத்திநிறைய மீதியாகி போச்சா. மொட்டை மாடில கொண்டு போயி அதை காய வைங்க. 

அது காஞ்சுஉடையற மாதிரி ஆனவுடன் எண்ணெய்ல பொரிச்சுசாப்பிட்டு பாருங்க. தோசையையும் இதே மாதிரி உபயோக படுத்தலாம்.

3) கஷ்டப்பட்டு நாம வெண்பொங்கல் செஞ்சு தருவோம். 

நம்ம குழந்தைங்க அதுல இருக்கற மிளகை மட்டும் தனியா எடுத்து வெச்சு இருப்பாங்க. மிளகு உடம்புக்கு ரொம்பநல்லதாச்சே. 

அதனால பொங்கல் செய்யும் போது மிளகை லேசா வறுத்துபொடி செஞ்சு போடுங்க.

4) பிஸ்கட்டுகள் நமுத்துப் போகாமல் இருக்க, மெல்லிய துணியில்சிறிது சர்க்கரை போட்டு, மூட்டை போல் கட்டி, பிஸ்கட் டப்பாவில் போட்டு விடுங்கள்.

5) பேகான் ஸ்பிரே பாட்டிலுக்குள், ஊதுபத்தியை போட்டு எடுத்து,ஏற்றி வைத்தால், கொசுக்கள், பூச்சிகள் அண்டாது.

6) சர்க்கரையுடன் ஒன்றிரண்டு கிராம்புத் துண்டுகள் போட்டால், எறும்பு வராது.

7) கறிவேப்பிலை இலைகளை அரிசியுடன் போட்டு வைத்தால், பூச்சிகள்,வண்டுகள் எட்டிக் கூட பார்க்காது.

8) வெயில் காலத்தில் பால் திரிந்து போகாமல் இருக்க, பாலுடன் நான்கைந்து நெல் விதைகளைப் போட்டு வைக்கலாம்.

9) வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால், கண் எரிச்சல் ஏற்படாது.

10) பூண்டை வெயிலில் வைத்து எடுத்தால், தோலை எளிதில் உரிக்கலாம்.


வெந்தய குழம்பு

 சைவ சமையல்  வாட்சப் குழு

நோய்களை தீர்க்கும் வெந்தய குழம்பு செய்யும் முறை

பொதுவாக காரக்குழம்பு வகைகளை நாம் அடிக்கடி உண்பதால் பலருக்கும் அல்சர் போன்ற பல பிரச்சனைகள் நம் வயிற்றில் ஏற்படும்.வெந்தயத்தினை வெறும் வயிற்றில் உட்கொண்டால் வயிறு குளிரும் பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வெந்தய குழம்பு உதவும்.

வெந்தய குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
கடலை எண்ணெய் – தேவையான அளவு
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
கடுகு – 1ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – 10 பல்
கருவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – 1
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் – 3/4 ஸ்பூன்
சீரகப்பொடி – 1/4 ஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
புளி – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு

வெந்தய குழம்பு செய்முறை:

முதலில் கடாயில் நல்லெண்ணெய் விட்டு பிறகு அதனுடன் கடலை எண்ணையை சேர்த்து நன்றாக சூடாக்கவும். அதன்பிறகு அதில் வெந்தயம் மற்றும் கடுகு போட்டு நன்றாக தாளிக்கவும். வெந்தயம் கருகாமல் இருக்கவேண்டும்.

பிறகு அதனுடன் சாம்பார் வெங்காயம் சேர்க்கவேண்டும். வெங்காயத்தினை பொடியாக அறியாமல் பாதியாக போடவேண்டும். பிறகு பூண்டு மற்றும் தக்காளி அறிந்து போடவேண்டும். பிறகு அதனுடன் மிளகாய்த்தூள்,தனியாதூள் மற்றும் சீரகப்பொடி போட்டு நன்றாக கலக்கவும்.

பிறகு அதனுடன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஊறவைத்த புளிக்கரைசல் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு கொதித்ததும் சிறிதளவு கறிவேப்பிலை


போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி எடுத்தால் சுவையான வெந்தய குழம்பு தயார்.


தவலை அடை

 அம்மா சமையல் 🥗 தவலை அடை 😋

தஞ்சாவூர் ஸ்பெஷல் 😍

🥗அம்மா சமையல் 🥗:

🍱 தேவையான பொருட்கள்: 

 பச்சரிசி - 1/2 கப்

துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன் * கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் * உப்பு - 3/4 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன் * மிளகு - 3/4 டீஸ்பூன் * துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் * கடுகு - 3/4 டீஸ்பூன் * உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் * பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை * கறிவேப்பிலை - சிறிது * எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன் 

🍴 செய்முறை: 👇

முதலில் அரிசி மற்றும் பருப்பை நீரில் 2 முறை கழுவி, நீரில் குறைந்தது 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் பருப்பு மற்றும் அரிசியில் உள்ள நீரை முற்றிலும் வற்றிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சீரகம், உப்பு மற்றும் மிளகு சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, துருவிய தேங்காயை போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, நீர் முற்றிலும் வற்றும் வரை வேக வைத்து இறக்கி, 2-3 நிமிடம் குளிர வைக்க வேண்டும்

மாவானது வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது, தயாரித்து வைத்துள்ள மாவை சிறு எலுமிச்சை உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் எண்ணெய் தடவிய வாழை இலையில் ஒவ்வொரு உருண்டைகளையும் வைத்து, தட்டையாக தட்டிக் கொண்டு, நடுவே ஒரு ஓட்டையை போட வேண்டும்

பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் தட்டி வைத்துள்ளதைப் போட்டு, அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும், பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தட்டி தோசைக் கல்லில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான தஞ்சாவூர் தவலை அடை தயார்.

தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்👍🌷

என்றென்றும் அன்புடன்

🥗அம்மா சமையல் 🥗



உருளைக்கிழங்கு ஸ்பெஷல்

 🥔உருளைக்கிழங்கு ஸ்பெஷல்🔥

7 வகையான உருளைக்கிழங்கு ரெசிபி ஓரே பதிலில்

🥔உருளை‌க் ‌கிழ‌ங்கு சாத‌‌ம்🥔 

🪀தேவையானவை

உருளைக்கிழங்கு - 100 கிராம்
அரிசி - 50 கிராம்
உப்பு - சிறிதளவு
எ‌ண்ணெ‌ய் - 1 தே‌க்கர‌ண்டி
சோ‌ம்பு, ப‌ட்டை - ‌சி‌றிதளவு

🪀ச‌ெ‌ய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு தேவையான அளவு ‌நீ‌ர் ‌வி‌ட்டு, உ‌ப்பு சே‌ர்‌த்து வேக வை‌க்க வே‌ண்டு‌ம்.

சாத‌ம் வெ‌ந்து வரு‌‌ம்போது, வெந்த உருளைக்கிழங்கை பிசைந்து சாத‌த்‌தி‌ல் போ‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் வேக ‌வி‌ட்டு எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி சோ‌ம்பு, ப‌ட்டை போ‌ட்டு தா‌ளி‌த்து அ‌தி‌ல் இ‌ந்த சாத‌த்தை‌ப் போ‌ட்டு வத‌க்‌கி சா‌ப்‌பிடவு‌ம்.

குழ‌ந்தைகளு‌க்கு இ‌ந்த ம‌சி‌த்த உணவு ‌மிகவு‌ம் ‌பிடி‌க்கு‌ம்.

🥔ப்ரோக்கலி🥦 உருளைக்கிழங்கு மசாலா🥔

🪀தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
உருளைக் கிழங்குகால் கிலோ
ப்ரோக்கலி 100 கிராம்
பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள் 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா அரை டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி கீரை 1 கைப்பிடி அளவு
உப்புதேவைக்கேற்ப
தாளிக்க
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து 

🪀செய்முறை :

உருளைக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிவிட்டு அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். 

தக்காளி குழைய வதங்கியதும், அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து வேக வைக்கவும். உருளைக்கிழங்கு பாதி வெந்ததும் மசாலா தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். 

பின்னர் அதனுடன் நறுக்கிய ப்ரோக்கலி பூக்களை சேர்த்து 10 நிமிடங்கள் வேகவைத்து, கொத்தமல்லி கீரையை தூவி இறக்கவும். சுவையான ப்ரோக்கலி உருளைக்கிழங்கு மசாலா தயார். 

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சப்பாத்தி, சாம்பார் மற்றும் சாத வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

🥔உருளைக்கிழங்கு பர்ஃபி🥔

🪀தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
உருளைக்கிழங்குகால் கிலோ
சர்க்கரை கால் கிலோ
ரவை 100 கிராம்
நெய் 3 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் 4 (பொடியாக்கியது)

🪀செய்முறை :

ரவையை மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவும். 

உருளைக்கிழங்கை வேக வைத்து கட்டிகளில்லாமல் நன்கு மசித்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும். 

ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அதில் மசித்து வைத்துள்ள கிழங்கையும், சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் வைத்து அடிபிடிக்க விடாமல் நன்றாக கிளறவும். 

உருளைக்கிழங்கு கலவை நன்கு கொதித்து வரும் போது வறுத்து வைத்த ரவையை சிறிது சிறிதாக மேலே தூவி கட்டிகள் விழாமல் நன்கு கிளறவும். 

கலவை நன்கு திரண்டு வரும் போது ஏலக்காய் தூள் மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும், துண்டுகளாக வெட்டவும். இப்போது சுவையான உருளை பர்ஃபி தயார். 

🥔உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🥔

🪀தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
உருளைக்கிழங்குகால் கிலோ
பெரிய வெங்காயம் 2
கேரட் 100 கிராம்
சீஸ்கால் கப் 
கார்ன்கால் கப்
மிளகாய்த் தூள் அரை டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா 1 டேபிள் ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் அரை கப்
எண்ணெய் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை1 கைப்பிடி
கறிவேப்பிலை1 கொத்து
ப்ரெட் தூள் அரை கப்

🪀செய்முறை :

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். 

நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்தமல்லி தழை, மிளகாய்த்; தூள், கரம் மசாலா, உருளைக் கிழங்கு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். 

பிசைந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். 

பின்னர் கார்ன் ப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளை பிரட்டி எடுத்து, பின்னர் ப்ரெட் தூளில் பிரட்டவும். 

இந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை தக்காளி சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

🥔உருளைக்கிழங்கு கட்லெட்🥔 

🪀தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
உருளைக்கிழங்கு கால் கிலோ
மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
கரம் மசாலா 1 டேபிள் ஸ்பூன்
முட்டை 2
பிரட் துண்டுகள் 3
பொpய வெங்காயம் 1
எண்ணெய்தேவைக்கேற்ப
உப்புதேவைக்கேற்ப

🪀செய்முறை :

குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். நன்கு ஆறிய பின் தோலுரித்து மசித்து வைக்கவும். 

பிரட் துண்டுகளின் ஓரங்களை எடுத்து விட்டு வெள்ளைப் பகுதியை மிக்ஸியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும். முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கலக்கி வைக்கவும். 

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். 

பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு கரம் மசாலா சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். 

ஆறியதும் மசாலாவை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டையாக உருட்டி பிரட் தூளில் பிரட்டி தட்டி வைத்துக் கொள்ளவும். மேலும் இந்த உருண்டையை முட்டை கலவையில் பிரட்டி எடுக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான சூட்டில் உருண்டைகளைப் போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். சுவையான கட்லெட் ரெடி. 

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை தக்காளி சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

🥔உருளைக்கிழங்கு சில்லி🥔

🪀தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
உருளைக்கிழங்குகால் கிலோ
கடலை மாவு1 கப்
பெரிய  வெங்காயம்2
குடைமிளகாய் 1
இஞ்சி பூண்டு பேஸ்ட்1 டீஸ்பூன்
அஜினமோட்டோகால் சிட்டிகை
உப்புதேவைக்கேற்ப
சில்லி பவுடர்2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
பச்சை மிளகாய்1
தக்காளி சாஸ்1 டேபிள் ஸ்பூன்

🪀செய்முறை :

முதலில் உருளைக்கிழங்கை தோலுரித்து, நீளமாக நறுக்கி, உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, சில்லி பவுடர், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை தண்ணீரில் இருந்து எடுத்து, ஒவ்வொன்றாக கடலை மாவு பேஸ்ட்டில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அஜினமோட்டோ, உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

அடுத்து தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு சில்லி ரெடி.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை தயிர், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

🥔உருளைக்கிழங்கு 🫑குடைமிளகாய் சப்ஜி🥭

🪀தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
உருளைக்கிழங்குகால் கிலோ
குடைமிளகாய் 100 கிராம்
பெரிய வெங்காயம் 1
சீரகத் தூள் அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள் அரை டேபிள் ஸ்பூன்
தனியாத் தூள் 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் அரை டேபிள் ஸ்பூன்
தக்காளி 1
உப்புதேவைக்கேற்ப
தாளிக்க
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து 

🪀செய்முறை :

குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

தக்காளியை அரைத்துக் கொள்ளவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் 

பிறகு குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். காய்கள் பாதி அளவு வெந்ததும் தூள் வகைகளை சேர்த்து வதக்கவும். 

எல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்கு வதங்கியதும் அரைத்த தக்காளி சேர்த்து பிரட்டி விடவும். கலவை கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சப்பாத்தி, தோசை வகைகள் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.



சன்னா மசாலா கிரேவி

 🥘சன்னா மசாலா கிரேவி🥘

🥘தேவையானவை 

சன்னா – 1 கப்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி-3
மிளகாய்த் தூள் -2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் அரைத்தது – 1 கப்
சீரகம் – அரை டீஸ்பூன்
பட்டை – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

golden🥘செய்முறை

சன்னாவை 7 மணி நேரம் நன்கு ஊறவிட்டு குக்கரில் வேகவையுங்கள். 

5 விசில் வரை விடவும்.

சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். 

கடாயில் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். 

இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வதக்குங்கள். தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். 

இத்துடன் சன்னா சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள தேங்காயை ஊற்றி ஸ்டவ்வை மிதமாக எரிய விடவும். 

மற்றொரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை,பட்டை,சீரகம் சேர்த்து தாளித்து மசாலாவில் சேர்க்கவும். 

சுவையான சன்னா மசாலா ரெடி. இட்லி, பிரெட், சப்பாத்தி, பூரிக்கு சத்தான சைட் டிஷ் இது



பருப்பு வடை மோர் குழம்பு

 ♨️பருப்பு வடை மோர் குழம்பு♨️

🥘தேவையானவை 

300mlஓரளவு புளித்த தயிர்
50 கிராம்துவரம் பருப்பு
50 கிராம்கடலைப் பருப்பு
4 ஸ்பூன்பச்சை மிளகாய் 5 தேங்காய்த்துருவல்
ஒரு ஸ்பூன்சோம்பு
ஒரு ஸ்பூன்சீரகம்
அரை ஸ்பூன்கடுகு
அரை ஸ்பூன்மஞ்சள் பொடி
தேவைக்குஎண்ணெய்
4 பல்பூண்டு
தேவைக்குஉப்பு
சிறிதுவெங்காயம்
ஒரு துண்டுஇஞ்சி
சிறிதுகருவேப்பிலை மல்லி

🥘செய்முறை

முதலில் துவரம் பருப்பு கடலை பருப்பு ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும். தயிரை உப்பு சேர்த்து நன்றாகக் கடைந்து வைக்கவும். பச்சை மிளகாய் தேங்காய் துருவல் இஞ்சி இரண்டு பல் பூண்டு வெங்காயம் சிறிது, சோம்பு ஒரு ஸ்பூன். சீரகம் அரை ஸ்பூன்,மஞ்சள் பொடி சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

தாளிப்பில் பாதியை எடுத்து வைத்துக்கொண்டு மீதமுள்ள தாளிப்பில் அரைத்து வைத்த கலவையை ஊற்றி தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். மிக்ஸியில் பருப்பு வகைகளை சேர்த்து உப்பு சோம்புத்தூள் சேர்த்து அரைத்து சிறிது வெங்காயம் இரண்டு பல் பூண்டு மல்லி கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது சேர்த்து கலந்து வடைகளாகத் தட்டவும். கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பு கலவையில் வடைகளை போடவும்

இப்பொழுது கடைந்து வைத்துள்ள தயிரை குழம்புடன் கலந்து 2 நிமிடத்தில் நுரை கூடி வரும் பொழுது அடுப்பைஅணைத்துவிட்டு மீதமுள்ள தாளிப்பு சேர்த்து சிறிது உப்பு சேர்த்து கலந்துஇறக்கவும். இப்பொழுது சுவையான வடை மோர் குழம்பு தயார்.

பருப்பு வடை மோர் குழம்பை வேறு பவுலுக்கு மாற்றி மல்லி இலை தூவி சாதத்துடன் பரிமாறவும். குறிப்பு. தயிர் கெட்டியாகவும் நன்கு ஆடையுடன் இருந்தால் மோர் குழம்பு சுவையாக இருக்கும்.மோர்க் குழம்பு புளிப்பாக இருந்தால் பால் சேர்த்து சரிசெய்யலாம். குழம்பு..அதிக நேரம் கொதிக்க விட்டா நீர்த்துவிடும்.




வெங்காய காரச் சட்னி

 வெங்காய காரச் சட்னி

தேவையான பொருட்கள்:

 பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டு பல் – 3, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, வர மிளகாய் – 3, காஷ்மீரி மிளகாய் – 3, தேங்காய் துண்டுகள் – கால் கப், வெல்லம் – ஒரு சிறு துண்டு, உப்பு – தேவையான அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன். சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு. -

 செய்முறை 

 முதலில் வெங்காய கார சட்னி செய்வதற்கு ஒரு பெரிய வெங்காயம் ஒன்றை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் உங்கள் விருப்பம் போல வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கார சட்னி நல்ல நிறம் கொடுக்க காஷ்மீரி மிளகாய் கண்டிப்பாக தேவை. காஷ்மீரி மிளகாய் காரம் கொடுக்கா விட்டாலும் நல்ல நிறம் கொடுக்கும். பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் அருமையாக இருக்கும் எனவே அதை டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். மேற்கூறிய எல்லா பொருட்களையும் நாம் அப்படியே பச்சையாக தான் அரைக்க போகிறோம். பிறகு தான் தாளிக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் நீங்கள் துண்டுகளாக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து கொள்ளுங்கள். காரத்திற்கு வரமிளகாய் மற்றும் நிறத்திற்கு காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றை மேற்கூறிய அளவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

பின்னர் இதனுடன் ஒரு சிறு கோலிகுண்டு அளவிற்கு புளியை உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி எதுவும் சேர்க்காததால் புளி உங்களுடைய சுவைக்கு ஏற்ப நீங்கள் சேர்த்துக் கொள்வது நல்லது. -பிறகு மூன்று பற்கள் பூண்டு உரித்து சேருங்கள். இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், மற்றும் கால் கப் அளவிற்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள தேங்காய் சில்லுகள் மற்றும் அதனுடன் சுவைக்கு ஒரு துண்டு வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு மிக்ஸியை இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த பின்பு இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

 பின்னர் ஒரு இணுக்கு கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து இரண்டு நிமிடம் லேசாக வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த வெங்காய சட்னி நல்ல நிறம் மற்றும் மணமுடன் சுவையானதாக இருக்கும். 



புடலங்காய் கூட்டு

 புடலங்காய் கூட்டு

 தேவையான பொருட்கள்: 

புடலங்காய் – இரண்டு, தேங்காய் – கால் மூடி, கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், பாசிப்பருப்பு – கால் கப், அரிசி மாவு – ஒரு ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 3, சீரகம் – ஒரு ஸ்பூன், சீரக தூள் – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து. -

 செய்முறை:

முதலில் புடலங்காய், சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கால் மூடி தேங்காயை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை ஒரு கிண்ணத்தில் சேர்த்து இரண்டு முறை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.

 பின்னர் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பு, பாசிப் பருப்பை சுத்தம் செய்து, ஒரு குக்கரில் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு அதில் கடலைப் பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும் 

.பின்னர் இவற்றுடன் சீரகத்தூள், மஞ்சள்தூள் உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள புடலங்காய் சேர்த்து கலந்து விட்டு, மூடி போட்டு அடுப்பின் மீது வைத்து, ஒரு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். - அதே சமயம் ஒரு மிக்ஸி ஜாரில் துருவி வைத்துள்ள தேங்காய் துருவல், சிறிதளவு வெங்காயம், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, பச்சை மிளகாய் ,சீரகம் மற்றும் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு குக்கரை திறந்து அதனுடன் இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்க வேண்டும். 

பின்னர் இவற்றை ஐந்து நிமிடத்திற்கு நன்றாக கொதிக்கவிட வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அதனுடன் சிறிதளவு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இந்த கலவையை புடலங்காய் கூட்டுடன் சேர்த்து கலந்துவிட்டு, இறுதியாக கொத்தமல்லி தழை சேர்க்க வேண்டும். -



புளி சக்கை

சமையலுக்கு புளியை பயன்படுத்திவிட்டு இனி சக்கையை தூக்கி போடாதீர்கள்! இப்படி செஞ்சு வெச்சா உங்க வேலை மிச்சம் ஆயிடும். சமையலுக்கு எப்படியும் அடிக்கடி புளியை பயன்படுத்துவது வழக்கம். சமையல் செய்யும் இந்த புளியில் இருக்கும் வீரியம் இந்த பொருட்களை ரொம்பவே கஷ்டப்படாமல் சுலபமாக சுத்தம் செய்து தரக்கூடிய சக்தி கொண்டுள்ளது. இது மட்டும் தெரிஞ்சா இனி சமையல் செய்யும் பொழுது சக்கையை கண்டிப்பாக குப்பையில் தூக்கி எறிய மாட்டீர்கள். புளிச் சக்கையை வைத்து உபயோகமாக என்ன செய்ய முடியும்?. புளியில் இருந்து கிடைக்கக் கூடிய இந்த புளி சக்கை கொஞ்சம் மீதி இருந்தால் கூட அதை தூக்கி எறிய வேண்டாம். சிலர் அதிகமான புளியை எடுத்து கரைத்து மீதமிருக்கும் புளி சக்கையை பிரிட்ஜில் எடுத்து வைத்து விடுவார்கள். புளி ஒரு கெட்டுப் போகாத ஒரு பொருள் என்பதால் இவ்வாறு செய்வதில் எந்தத் தவறும் இல்லை, அதை மீண்டும் எடுத்து தேவையான பொழுது தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சந்தேகம் நிச்சயம் பலருக்கும் இருந்திருக்கும். சக்கையை ஒரு ஏர் டைட் கண்டைனைர் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு நாட்களுக்கு மேல் அதையும் நாம் பயன்படுத்தக் கூடாது. - புளி சக்கையை கொண்டு பொதுவாக பூஜை பொருட்களை சுத்தம் செய்வது வழக்கம். பித்தளை பாத்திரங்களை பளிச்சிடக் கூடிய இந்த புளி சக்கை பித்தளை பொருட்களை எப்படி கை வைக்காமல் சுத்தம் செய்கிறது? புளி சக்கையில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் பித்தளைப் பாத்திரங்கள், பித்தளை பூஜை பொருட்கள் அல்லது கேஸ் ஸ்டவ்வில் இருக்கும் பர்னர் போன்றவற்றை முழுமையாக மூழ்கும்படி அழுத்தி வையுங்கள். 24 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள், 8 மணி நேரம் கழித்து பார்த்தாலே அது முழுமையாக கருமை நீங்கி பித்தளை பாத்திரம் பளபளக்கும். ஆனால் அதை விட இருபத்தி நான்கு மணிநேரம் நன்கு ஊற விட்டு விட்டால் நீங்கள் கையை கூட வைத்து தேய்க்க வேண்டிய அவசியமே இல்லை, அவ்வளவு புதியது போல பித்தளை பாத்திரங்கள் அனைத்தும் மின்னும். -பூஜை பாத்திரங்களை இது போல் செய்யாவிட்டாலும் கேஸ் பர்னர் சுத்தம் செய்வதற்கு இதுவே ரொம்ப உபயோகமான ஒரு குறிப்பாக இருக்கும். பர்னரை சுத்தம் செய்வதில் இருக்கும் சிரமத்தை இந்த புளி சக்கை இவ்வளவு சுலபமாக நீக்க செய்யும் என்றால் ஏன் இதை நாம் குப்பையில் இனி எறிய வேண்டும்? புளியில் தண்ணீர் விட்டு பர்னரை போட்டு மூடி வைத்து விடுங்கள். இரவு முழுவதும் ஊறவிட்டு மறுநாள் அடுப்பை பற்ற வைக்கும் பொழுது எடுத்து நன்கு துடைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய பர்னரின் ஆயுள் நீடிக்கும். கியாஸ் செலவும் மிச்சமாகும். ஓட்டைக்குள் இருக்கும் அடைசல் கூட எளிதாக நீக்கக் கூடிய சக்தி இந்த புளிக்கு உண்டு. எனவே இனி கியாஸ் பர்னர் கிளீன் செய்வதற்கு இந்த முறையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். புளி சக்கையை தூக்கி போட வேண்டிய அவசியம் இனி இல்லாமல் போய்விடும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க உபயோகமாக இருக்கும். -



மசாலா கொழுக்கட்டை

 பகிர்வு


⫷⫸⫷⫸🅜🅐🅛🅛🅘🅚🅐⫷⫸⫷⫸


மசாலா கொழுக்கட்டை

வையான பொருட்கள்: 

அரிசி மாவு – ஒரு கப், பெரிய வெங்காயம் – 3, பழுத்த தக்காளி – 3, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, கரம் மசாலாத்தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன். 

  செய்முறை: 

முதலில் ஒரு கிண்ணத்தில் 2 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதனை அடுப்பின் மீது வைத்து கொதிக்க விட வேண்டும். பிறகு தண்ணீர் கொதிக்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு கப் அரிசி மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும். 

பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு, அரிசி மாவை ஆற வைக்க வேண்டும். பிறகு அரிசி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதன் மீது ஒரு இட்லி தட்டை வைத்து, அதில் லேசாக எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள அரிசி மாவு உருண்டைகளை அதில் வைத்து, மூடி போட்டு மூடி, பத்து நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும். - - பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மூன்று தக்காளிப் பழங்களைப் பொடியாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து, அதில் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.   பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி, இதனுடன் தக்காளி சாறையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, கெட்டியானதும் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் இவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் வேக வைத்துள்ள அரிசி மாவு உருண்டைகளை சேர்த்து கலந்துவிட்டு, இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்தால் போதும், சுவையான மசாலா கொழுக்கட்டை தயாராகிவிடும்



முருங்கைக்காய் மசாலா குழம்பு

கமகம வாசனையுடன் இப்படி முருங்கைக்காய் மசாலா குழம்பு 

 தேவையான பொருட்கள்:

 வெங்காயம் – 1, தக்காளி – 1, முருங்கைக்காய் – 2, தேங்காய் – 3 சில்லு, வெள்ளை எள் – 2 ஸ்பூன், வேர்க்கடலை – 2 ஸ்பூன், கசகசா – 2 ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், தனி மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து. - 

 செய்முறை: 

முதலில் மூன்று சில்லு தேங்காயை பொடியாக நறுக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் வெள்ளை எள், 2 ஸ்பூன் வேர்க்கடலை, நறுக்கிய தேங்காய் மற்றும் 2 ஸ்பூன் கசகசா இவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும். 

பின்னர் இவற்றை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், தக்காளி முருங்கை காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

 பின்னர் இவற்றுடன் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். -  பிறகு இதனுடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் வதக்கவும். பிறகு இவற்றுடன் தக்காளி மற்றும் முருங்கைக்காயை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, கடையின் மீது ஒரு தட்டு போட்டு மூடி, முருங்கைக்காயை வேக விட வேண்டும். அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதையும் சேர்த்து கலந்து விட வேண்டும்.

 பின்னர் இவை அனைத்தையும் சேர்த்து பத்து நிமிடத்திற்கு நன்றாக கொதிக்கவிட வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலந்து விடவும்

பகிர்வு