,ஸ்ரீ பெரியவா திருப்பணியே தினப்பணி.
ஸ்ரீ பெரியவா இல்லம் என்று பெயர் கொண்ட சென்னை மாடம்பாக்கம் வேதபாடசாலை.
மகா பெரியவா வாக்கை வேதவாக்காக கொண்டு பக்தியின் இலக்கணத்திற்கு உதாரணமாக நின்று இந்தப் பாடசாலையை நடத்துபவர் பிரகாஷ் அண்ணா அவர்கள்.
அன்று, பாடசாலை குழந்தைகளுக்கு முருகர் மேல் பக்திக் பாடலை பாடி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
குழந்தைகளும் நித்திய அனுஷ்டானங்கள், பூஜை, ஹோமம்,, வேதம், சாத்வீகமான உணவு என்று பழகியதும் கல்மிஷம் இல்லாத அவர்களது மனமும் பக்தியின் ஊற்றுப் பெருக்கோடு முருகனின் மேல் பாடலை மனம் உருகி பாடினார்கள்.
எந்த ஒரு பிரார்த்தனையும் இன்றி பக்தியில் கரைந்த அந்தக் குழந்தைகளின் குரலுக்கு முருகன் வந்தானா....
பாட்டு முடிந்ததும் பிரகாஷ் அண்ணா பாடசாலைக்கு எதிர்ப்பக்கத்தில் நிறுத்தி இருந்த காரை பின்பக்கமாக ஓட்டிக்கொண்டு வந்து வீட்டிற்குள் நிறுத்தினார். காரின் கதவை பூட்டிவிட்டு பார்த்தால் காரின் மேல் வெட்டிவேர் ஆல் செய்யப்பட்ட ஒரு வேல் இருந்தது.
என்ன ஆச்சரியம்.,... யார் வைத்தது... அதுவும் காரை உள்ளே கொண்டு வரும்வரை எப்படி கீழே விழாமல் இருந்தது....
குழந்தைகளை விசாரித்தார், சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆராய்ந்தார். ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மறுநாள் காலை.
பழனி முருகன் கோயில் பிரசாதம் என்று ஒருவர் கொண்டு வந்தார்.
மதியம். வடபழனி முருகன் கோயில் பிரசாதம் என்று மற்றொருவர் கொண்டு வந்தார்.
இரவு, திருச்செந்தூர் முருகன் பிரசாதம் என்று இன்னொருவர் எடுத்து வந்தார்.
பிரகாஷ் அண்ணாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. காரின் மீது இருந்த அந்த 'வேல்' ஐ எடுத்துக்கொண்டு வந்து பெரியவாளின் சிலையின் மீது சாத்தி வைத்துவிட்டார்.
இந்த நிகழ்வை பிரகாஷ் அண்ணாவும் , நாமும் பதிவுகளின் மூலமாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தோம்.
நம்முடைய ஸ்ரீ பெரியவா திருப்பணியில் நம்மில் ஒருவர் நமக்குள் ஒருவராக விளங்கும் சகோதரி ஸ்ரீவித்யா அவர்கள் நெடுங்காலமாக தனக்கு, மகா பெரியவாளுக்கு வெள்ளியினால் வேல் ஒன்று செய்து தரவேண்டும் என்ற உணர்வு மனதை எப்பொழுதும் ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது என்று கூறி ஏதாவது ஒருவிதத்தில் தனக்கு உதவி செய்யுமாறு அடியேனை கேட்டுக்கொண்டார்.
நான் மாடம்பாக்கம் பாடசாலையில் நடந்த நிகழ்ச்சியை விவரிக்க உடனடியாக பிரகாஷ் அண்ணாவுடன் தொடர்புகொண்டு ஒரே வாரத்தில் வெள்ளியில் ஆன வேல் ஒன்றை கொண்டுவந்து பெரியவாளுக்கு சமர்ப்பித்து வேல்மாறல் பூஜையையும் நடத்தி விட்டார்..
படத்தில் 'வேல்' உடன் ஸ்ரீ பெரியவா
பெரியவா இல்லத்து பாடசாலையில் இருப்பது 'வேல்' ஐ கொண்டிருக்கும் முருகனா அல்லது 'வேல்' ஐ தன்னுடைய தாக்கி கொண்டிருக்கும் மகா பெரியவாளா..... என்று பார்த்தால்...
மௌனமாக அர்த்த புஷ்டியுடன் அத்வைத தத்துவத்தை நமக்கெல்லாம் உணர்த்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ மகா பெரியவாள் தான் நம் கண்ணுக்கு தெரிகிறார்.
பாடசாலை குழந்தைகள் பாடும் முருகனின் பாட்டில் நாம் பக்தியில் நனைந்து வெளியில் வருகிறோம்.
பெரியவா இல்லம்.
பாக்கியலக்ஷ்மி நகர்
மாடம்பாக்கம்
92831 70890.
94453 19632.

No comments:
Post a Comment