Monday, April 5, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 82 காய்சின வேந்தர் திருக்கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 82 🌹🌹🌹

நவதிருப்பதிகளில் புதனுக்குரிய தலமாக வழிபடும் சிறப்பு வாய்ந்த திருத்தலம்.

அருள்மிகு காய்சின வேந்தர் திருக்கோவில்:-

மூலவர்: காய்சின வேந்தர் பூமிபாலர்
தாயார்: மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார்
உற்சவர்: காய்சினவேந்தர்
கோலம்: சயனத் திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: வேதசார விமானம்
தீர்த்தம்: வருண தீர்த்தம், நிருதி தீர்த்தம், இந்திர தீர்த்தம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்

நாமாவளி: ஸ்ரீ மலர்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ காய்சின வேந்தன் ஸ்வாமிநே நமஹ

ஊர்: திருப்புள்ளிங்குடி

🌺🌺 காய்சினவேந்தர்:-

காய்சினம் என்ற பறவையை வாகனமாகக் கொண்டுள்ளதால் இத்தல இறைவனுக்கு "காய்சின வேந்தர்" என்பது திருநாமம். மேலும், பூமிபாலகர் என்ற திருநாமமும் இத்தல இறைவனுக்கு உண்டு. இத்தல இறைவியை இவ்வூரில் உள்ள மக்கள் அனைவரும் புளியங்குடி வள்ளி தாயார் என்ற திருநாமத்தில் வணங்குகின்றனர்.

உற்சவராக அருளும் திருமகள் தாயாருக்கு மலர் மகள் தாயார் என்பது திருநாமம். பூமிபிராட்டிக்கு நிலமகள் தாயார் என்பது திருநாமம்.

🌺🌺 விமோசனமளித்த விமலன்:-

ஒருசமயம் வசிஷ்டரின் மகனான சக்தி முனிவரை "யக்ஞசர்மா" என்பவர் சரியாக மரியாதை கொடுக்காமல் இகழ்ந்ததால் சக்தி முனிவர் அவரை அசுரனாக மாறும்படி சபித்தார்.

பிறகு அவர் தன் தவறை உணர்ந்து வணங்கும் போது சாபவிமோசனம் நீங்க ஒரு வழியும் சொன்னார்.

இந்திரன் இந்த இடத்தில் யாகம் செய்வதற்கு வருவான். அப்போது அதை நீ தடுக்க முற்படுவாய். அப்போது திருமால் தன் கதாயுதத்தால் அடித்து, உனக்கு சாபவிமோசனம் தருவார் என்றார் சக்தி முனிவர்.

சக்தி முனிவர் கூறியவாறே பின்னொரு சமயம் இந்திரன் இங்கு யாகம் செய்ய முற்படும் போது, அசுரனாக மாறியிருந்த யக்ஞசர்மா அதை தடுக்க முற்பட, அப்போது அங்கு தோன்றிய ஸ்ரீமந்நாராயணன் தன் கதையால் அசுரனை அடித்ததாகவும், அதனால் யக்ஞசர்மா சாபத்தில் இருந்து விடுதலை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

🌺🌺 மங்களாசாசனம்:-

இத்தல இறைவனை நம்மாழ்வார் 12 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

"வைத்தமாநிதியாம் மது சூதன னையே யலற்றி
கொத்தவர் பொழில் சூழ்
குருகூர் சடகோபன் சொன்ன பத்து நூற்றுளிப்
பத்து அவன் சேர்
திருக்கோளூர்க்கே சித்தம் வைத்துரைப்பார்
திகழ் பொன்னுலகாள்வாரே!!!"

- நம்மாழ்வார்.

🌺🌺 வழித்தடம்:-

திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி - திருச்செந்தூர் இரயில் மார்க்கத்தில் ஸ்ரீவைகுண்டம் இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு காய்சின வேந்தர் திருவடிகளே சரணம்.
அருள்மிகு மலர்மகள் நாச்சியார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில்:-

அருள்மிகு அரவிந்த லோசனன் திருக்கோவில் - திருத்தலைவில்லி மங்கலம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment