வெயில் காலத்தில் சிறுநீர்ப் பாதையில் எரிச்சலைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக வெயில் காலங்களில் பலரும் சிறுநீர் தொற்றுப் பிரச்சனையால் அவதிப்படுவதுண்டு.
சிறுநீர் குழாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும்போது இந்த தொற்றுக்கள் உண்டாகும்.
சிறுநீர் போகும் போது கடுமையான எரிச்சல், சிறுநீர் முட்டிக்கொண்டு இருப்பது போன்ற உணர்வு, அடிக்கடி சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகள் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட்டால் சிறுநீர் தொற்று உள்ளது என அர்த்தமாம்.
இந்த சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டாகும் பிரச்சனைக்கு, தகுந்த சிகிச்சை அளிக்காமல் போனால் அது உயிருக்கே ஆபத்தை அளிப்பதாக கூட மாறலாம்.
அந்தவகையில் தற்போது இதிலிருந்து விடுபட சில எளிய வீட்டு வைத்திய முறைகளை பற்றி பார்ப்போம்.
சீரகத்தையும் , கற்கண்டையும் சாப்பிடுவது சிறுநீரக எரிச்சலைத் தவிர்க்கலாம்.
வாழைத் தண்டு சிறுநீரகத்திற்கு நல்லது. அது சிறுநீரகத் தொற்றுகளுக்கும் அரு மருந்தாக இருக்கும். எனவே எரிச்சல் இருந்தால் வாழைத்தண்டு சாறு குடியுங்கள்.
மாதுளைப் பழமும் சிறுநீரகப் பாதை தொற்றுக்கு நல்லது. மாதுளைப் பழத்தை அப்படியே கொட்டையோடு மென்று சாப்பிடுங்கள்.
கீரை வகைகளும் சிறுநீரகப் பாதை தொற்றுக்கு நல்லது. குறிப்பாக சிறுநீரகம் முட்டுவது போல் இருந்தால் தண்டுக் கீரை, சிறு கீரை, பருப்புக் கீரை, புதினா, முளைக்கீரை போன்ற கீரை வகைகளை சாப்பிடலாம்.
உளுந்தை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊற வையுங்கள். மறுநாள் காலை அந்த நீரைக் குடியுங்கள். இதனால் உடல் குளிர்ச்சியடைந்து சிறுநீர் எரிச்சல், கடுப்பு நீங்கும்.
சிறுநீரை வெளியேற்றும் போது எரிச்சல் உண்டாகிறது எனில் மேலே கூறியுள்ள குறிப்புகளை செய்வதோடு அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் அவசியம்.
❣❣❣❣❣❣❣❣❣
No comments:
Post a Comment