Wednesday, April 8, 2020

குருப்புகழ்

பெரியவா சரணம்.

மனமானது எத்தகைய துயரத்தைக் கொண்டாலும் துவள்வது என்பது ஒரு சில நொடிகள் மட்டுமே! காரணம், ஐயனின் ஸ்மரணையான மனதினுள்ளே நிறைந்துவிட்டால் அந்த க்ஷணமே நமக்கு இருக்குன்படியான சிறியதோ, நெடியதோ, எத்தகைய துயரமானாலும், சோகமானாலும், வருத்தமானாகும் துகள் துகளாகச் சிதறி மறைந்து போய், மனதினுள்ளே ஆனந்தம் மட்டுமே நிறைந்துவிடுமாச்சே!

இன்றைய தினம் மனம் சிறிதளவு  தடுமாற்றத்தை உணர்ந்த நொடி அது. என்ன பெரியவா...ந்னு நினைத்து அவரை ஸ்மரித்த மாத்தித்திலே ஒரு தொலைபேசி அழைப்பு. அன்பு பெரியவா குடும்ப உறவு, பெங்களூரூவிலிருந்து Sasikala Nagasundaram அவர்களிடமிருந்து அழைப்பு. நலம் விசாரித்துவிட்டு, அருணகிர்யார் பஅடிய ஒரு திருப்புகழைச் சொல்லி, அதே போலே நமக்கு இருக்குன்படியான நோயகன்று திடகாத்திர தேக ஆரோக்யம் வேண்டி ஒரு குருப்புகழ் எழுதுங்கோ, சாணு, என்றார்கள். அவர்களிடத்திலே அப்படியான குருப்புகழ் ஏற்கனவே ஐயனின் கருணையாலே பிறந்து, அதை அன்புச் செல்வ மகள் பாடியும் பதிந்ததைச் சொன்னதோடு,  நான்கைந்து வரிகளைப் பாவும் செய்தேன். அதனையும் மீள்பதிவு செய்வதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தேன்.

அவ்வளவு தான்.. மனம் ஐயன் ஸ்மரணையிலே திளைக்க, மனதினுள்ளே மஹா ஆனந்தம் நிறையத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களிலே இந் கானத்தைப் பாடி, இப்போது பகிர்ந்து கொண்டிருக்கின்றேன் என்று சொன்னால், அது ஐயனின் மகிமையே தவிர வேறு ஏது இருக்கமுடியும்?!!!

சங்கரம் போற்று!

சபரீ மலை வாஸா என நம் கேரளத்து கான கந்தர்வனின் குரலிலே நாமெல்லாம் கேட்டு மகிழ்ந்திருக்கும்படியான பாடலின் மெட்டிலே வரிகள் பயணிப்பதைப் பாடி.மகிழ்வோமே!

சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.

#ஸ்ரீகுருகானம்
#கானஸ்மரனை

காஞ்சீ புர வாஸா - தேவா
கருணா கர நேசா ஐயா

காஞ்சீ...

நினைவு எல்லாம் ... தேவா
நின் உருவே ... ஸ்வாமீ
நிலைத்திடும் வாழிவிதும் நின் க்ருபையே

காஞ்சீ..

சந்த ஸ்வரங்கள் யாவிலும் நின்னருள்
தங்கிடும் பாக்கியம் வேண்டினேன்

பொற்பதத் தன்னருள் தந்திடும் தேந்தமிழ் சொல்லிலும் நின்புகழ் பாடிவந்தேன் - எந்தச்
சொல்லிலும் நின் புகழ் பாடிவந்தேன்

காஞ்சீ...

ஆதியும் அந்தமும் ஏதுமிலா இறையின்
சோதியில் தோன்றிய ரூபனே

சாதியும் மதமெனும் பேதமில்லாத
சாந்த ஸ்வரூபியை நினைந்திருந்தேன் - எந்தன்
வாழ்வும் வளம்பெற சரண் புகுந்தேன்.

காஞ்சீ...

உம்மாச்சீ காப்பாத்தூன்னு இந்தப் பித்துக்குளி பாட்டௌயும் எழுதி, அதையும் எங்கேயோ கேட்டு இன்புற்ற பாடலின் ராகத்திலே, அந்த ராகத்தைப் படைத்த இசையமைப்பாளருக்கும், பாடிய இசைமேதைக்கும் ஆத்மார்த்தமாக நன்றியும் நமஸ்காரமும் சொல்லி, அதனை ஐயனின் கானமாகப் பாடியும் விட்டேன்.

கேட்க வேண்டியது உறவுகளான உங்களுக்கு தலையெழுத்து தான். இருப்பினும் ஏதேனும் ஒரு உள்ளம் இவ்வரிகளினூடேயும், ஒலியினூடேயும் உருகி ஸ்மரித்து இன்புறுனாயின் அதைவிடவும் ஒரு மஹாபாக்கியம் அடியேனுக்கு கிட்டிடுமோ?

உங்கள் ஒவ்வொருவரின் கருத்துமே ஐயன், சசிசேகர சங்கரானந்த மூர்த்தியின் பிரசாதமாகவல்லவோ ஏற்பேன்.

தொடரட்டும் உறவுகள் ஒவ்வொருவரின் சங்கர கோஷமும். அதன் தாக்கம் அடியேனை சங்கர ஸ்மரணையிலிருந்து சிதறி விடாது காப்பாற்றுமல்லவோ!

சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.

ஆம்! எல்லாம் அவர் அருளாலே. சத்யம். சத்யம். சங்கர சாந்நித்யம்.

குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.

நமஸ்காரங்களுடன்

No comments:

Post a Comment