ஒரு குடு குடு கிழவி அவள் பெயர் கோமா பாய் அவளுக்கு யாருமே இல்லை. தள்ளாத வயதிலும் தினமும் கொஞ்சம் கோதுமை வாங்கி ரொட்டி பண்ணி, விற்று அதிலேயே தானும் கொஞ்சம் சாப்பிட்டு காலம் தள்ளி வந்தாள். ரொட்டி வேகும்போது கூட அவள் பாண்டுரங்கன் பஜனை பண்ணிக் கொண்டே சமைப்பாள் அவள் வீடு ஒரு மரத்தடி அவளுக்கு வாழ்க்கையில் ஒரு குறிக்கோள். எப்படியாவது பண்டரிபுரம் போக வேண்டும் ஒரு தரமாவது விட்டலனை தரிசனம் செய்து கண்ணார சேவை பண்ணவேண்டும் என
அந்த நாளும் நெருங்கியது அவளுக்கு ஒரு ஏகாதசி அன்று பண்டரிபுரம் போக முடிவு பண்ணிவிட்டாள். மெதுவாக நடையாய் நடந்து சந்திரபாகா நதிக்கரை வரை சென்று விட்டாள். யாரோ சொன்னார்களே. நதியை கடந்து போனால் அக்கரையில்பாண்டுரங்கன் கோவில் தெரியுமே என்று.
நதியை எப்படி கடப்பது?. அவள் போன சமயம் நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது எப்போது அது வற்றி எப்போது அவள் அக்கரை சேர்ந்து ஏகாதசி தர்சனம் கிடைக்க போகிறது?.
வெகுநேரம் நின்று கொண்டிருந்தாள். நதியில் ஒரு ஓடம் வந்து போய்க் கொண்டிருந்தது. அந்த ஓடக்காரன் ஒரு வாலிபன்.
"என்னை கொஞ்சம் அக்கரை கொண்டு விடுகிறாயா?"
"ஒரு ரூபாய் கொடு"
"என்கிட்டே காசு இல்லையே?"
“நான் சும்மா உன்னை ஓடத்தில் ஏற்றிக்கொள்ள முடியாது. போ " போ அப்படி ஒரமாக என்றான், ஓடக்காரன்
அவள் இருந்த இடம் ஒரு காடு. ஜன சஞ்சாரம் இல்லாத இடம். கொடிய விலங்குகள் இரவில் நடமாடும். நதியில் நீர் குடிக்க வருமே? .நிறைய பேர் அந்த கரைக்கு ஓடத்தில் போனார்கள். அவர்களையும் கெஞ்சி பார்த்தாள்.
ஹும்ஹும் ஒருத்தரும் லட்சியம் பண்ணவில்லை. என்ன செய்வது, இருட்டி விட்டதே?
மறுபடியும் ஒடக்காரனையே கெஞ்சினாள்
“தம்பி நீ கடைசி தடவை அந்த பக்கம் போகும்போதாவது என்னை கூட்டி செல்லேன்? ரொம்ப பயமாக இருக்கிறதே. இங்கு தனியாக இருக்க என்றால் ஓடக்காரனோ பார்க்கலாம். இப்போ பேசாம போ”
நரிகள் ஊளையிட ஆரம்பித்தன. இருட்டு கவ்வியது. சரி நமது கடைசி முடிவு நரி வாயில் தான் போலிருக்கிறது. இங்கு சாவதை விட பண்டரிபுரத்தில் மண்டையை போட்டாலாவது கொஞ்சம் புண்ணியமாச்சே." ஓடக்காரன் வரவில்லை. அங்கேயே தங்கி விட்டானோ?.
“விட்டலா என்ன துர்பாக்கிய சாலி நான். என கண்ணீர் விட்டால் என் இறப்பை கண்டு கலங்கவில்லை உனை காணாமல் கண் மூடி விடுவேனோ என என்னும் போது தான் துயரம் தாளவில்லை என்று தனக்கு தானே புலம்பினால் அப்பாடா அதோ தூரத்தில் வெளிச்சம் தென்படுகிறதே ஓடக்காரன் வருகிறான் பாடிக் கொண்டே வருகிறானே ரொம்ப சந்தோஷம்போல இருக்கிறது நிறைய சம்பாதித்திருப்பான் போல இன்று என என்னினால் அருகே வந்த ஓடக்காரன் "ஏ பாட்டி, சட்டு புட்டுன்னு வா ஓடம் கிளம்ப போகிறது.
“நீ ரொம்ப நல்லவன் பா. பெரிய மனசு பண்ணி காசில்லாத இந்த கிழவியை பண்டரிபுரம் போக உதவுகிறாயே நாளைக்கு பண்டரிபுரம் போய் பிச்சையெடுத்தாவது உனக்கு சேர வேண்டிய கூலி பணத்தை கொடுத்து விடுகிறேன்”. என்றாள். ஓடம் கரை நெருங்கியது ஆனால் தண்ணீர் பெருக்கெடுத்து உடனே ஓடக்காரனோ ஏ பாட்டி நீயோ மாற்று புடவை இல்லாமல் வந்துள்ளாய் இந்த நீரில் இறங்கினால் உன் புடவை நனைந்து விடுமே பிறகு இக்குளுரில் நீ வதங்கி விடுவாய் ஆகையால் என் தோள் மேல் ஏறி கொள் உன்னை பத்திரமாக கரை சேர்க்கிறேன் என அந்த கிழவியை அந்த ஓடக்காரன் தோள் பட்டையில் அமர வைத்து கரையில் இறக்கி விட்டு சென்றான் மறுநாள் காலையில் கோமாபாய் விட்டலனை தரிசித்தாள். ரொம்ப மகிழ்ச்சி அவளுக்கு. அங்கு கோவில் வாசலில் அமர்ந்து விட்டல விட்டல என பஜனை பாடி பிச்சை எடுத்தாள்
நிறையவே காசு சேர்ந்தது. சந்தோஷமாக சந்திரபாகா நதிக்கரை வந்தாள். ஓடக்கார பையன் உட்கார்ந்திருந்தான்.
“தம்பி இந்தா ஒரு ரூபாய்” என்று கொடுத்தவளை ஏற இறங்க பார்த்தான் அவன்.
“நீ எப்படி இங்கு வந்தே?”
“நீ தானே ராத்திரி என்னை ஓடத்தில் கூட்டி வந்தே மறந்து போய் விட்டாயா?”.
“நானா? உன்னை கூட்டி வரவே இல்லையே?”என்ற மாத்திரம்
கோமா பாய்க்கு விட்டலன் தான் ஓடக்காரன் என்று தெரிந்ததும் மீண்டும் கண்ணீர் சிந்த விட்டோபோ விட்டோபா என விம்மி கொண்டே ஓடினாள் பரம பாகவத அடிமையான சாட்சாத் அந்த விட்டலனை தரிசிக்க
இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி
No comments:
Post a Comment