* குருவும் குளவியும் *
குளவி ஏன் ஒரு புழுவை தூக்கிச் செல்கிறது, சாமானியனின் பதில் உணவுக்காக என்பான், அறிவுள்ளவன் சிந்திப்பான், ஆராய்வான்.
குளவியிடம் சிக்கிய புழு விரைவில் குளவியாக அவதரித்து ஆகாயத்தில் பறக்கும், மீண்டும் சில புழுக்களை கொண்டு வந்து தான் கட்டிய மண்கூட்டில் அடைத்து முன்னும் பின்னும் துவாரமிட்டு ரீங்கார ஓசையோடு இருபுறமும் தன் கொடுக்கால் கொத்திக் கொண்டும், வெளியிலும் செல்லாமல் குளவியின் ரீங்கார ஓசையில் தன்னை மறந்து குளவியையே நினைத்து குளவியாக மாறும்.
புழுவை வேதியியல் மாற்றம் செய்து உயர் பிறப்பு அடைய குளவியும் கஷ்டப் படுகிறது.
சிற்றின்பத்தில் சிக்கி மும்மலத்தில் அகப்பட்டு ஐம்புலன்கள் வழிச் செல்லும் சாமானியன் அறியமாட்டான் குருவின் மகிமையையும் மகத்துவத்தையும்.
ஞானம் பயில்வது ஞானி ஆவதற்கல்ல, மனிதனாக வாழ்வதற்கு!! ஞானம் பெறுவது என்றால் ஏதோ உலக இன்பங்களைத் துறந்து சந்நியாசியாக ஆவதல்ல. மேன்மையான குணநலன்களைப் பெற்று உலக நன்மைக்காக உழைத்து வாழ்வதே!
ஒரு மனிதன் ஞானம் அடைவதற்கு ஒரு குருவின் துணை இன்றியமையாதது. அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஞானமாகிய ஒளியைத் தருபவரே குரு . தனியாக ஒரு மனிதன் சிந்தித்து, பரம் பொருளை உணர்ந்து, ஞானம் அடைவது கடினம். குரு தான் பெற்ற அனுபவங்களிலிலிருந்து ஞானம் பெறுவதை எளிமையாக்கி தன் சீடனுக்கு அருள்கிறார். அதனால் சீடன் விரைவில் ஞானம் பெறுகிறான். ஆனால் குருவின் ஞான உபதேசம் ஞான வேட்கை உள்ளவர்களுக்கே கிடைக்கும். அவர்களாலேயே அந்த உபதேசத்தை புரிந்துகொள்ளவும் முடியும்.
"'குருவே சிவன், குருவே தெய்வம், குருவே பந்தம், குருவே உயிர், குருவிற்கு நிகராக எதுவுமில்லை. குரு சச்சிதானந்த ரூபமானவர், பரிபூரணமாக திகழ்பவர், எங்கும் இருப்பவர், குருவின் பாதச் சுவடுகளை வணங்கினாலே கடவுளின் பரிபூரண ஆசியைப் பெறலாம். குருவின் பாதத் தீர்த்தமே கங்கை. மொத்தத்தில் குருவானவர் மனிதனை பாவங்களில் இருந்து மீட்டு நல்வழிப் படுத்தி அவன் மனதில் ஞான ஒளியை ஏற்றுபவர்'' என்ற எண்ணமுடைய சீடன் விரைவில் ஞானம் பெறுகிறான்.
அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. இதன் பொருள்.
கல்வி மூலம் உயர்த்தோர் எல்லாம் தன் தன் சுயநல வாழ்கையை நகர்த்தவே, மாறாக சமுதாயம் என்று சொல்வது ஊர்வன பறப்பன என்று எல்லா உயிர்களும் பாடுபடுவோர் ஞானியர் மட்டுமே. நாளை நீங்க கூட மாண்புமிகு சித்தராக மாறலாம்.
அதற்கு, புழு எப்படி குளவி வாயில் அகப்பட புண்ணியம் செய்ததோ அது போல நீங்களும் உண்மையான மெய்குருவின் கருணைக்கு ஆளாகவேண்டும்.
உங்கள் நலங் கருதி.
குறிப்பு: காலை ஒரு பதிவு போட்டேன், பல நண்பர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வருத்தப்பட்டனர், முகநூல் மூலமும் நல்ல உள்ளங்களை இனங்காண முடிகிறது.
எனக்கு பெரியாரும் ஒன்று தான், வாரியாரும் ஒன்று தான். நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை தூரவீசுவோம், வாழ்வில் வெற்றி பெறுவோம்.
No comments:
Post a Comment