Thursday, April 9, 2020

பரிகாரம் என்றால் என்ன

பரிகாரம் என்றால் என்ன
""""""""""""""""""""""""""

 தோசம் என்றால் குறைபாடு என்று பொருள். குறைபாடுகளை சரி செய்வதே பரிகாரம் ஆகும்.

 இயற்கையில் உருவாகும் எந்த ஒரு பொருளையும் மனிதனால் செயற்கையாக உருவாக்க முடியாது .  காலில்லாதவன் கம்பு ஊன்றி நடக்கலாம் கால்களை முளைக்க வைக்க முடியாது.கம்புகள் கால்களுக்கு ஈடாகாது.

 கண் தெரியவில்லை என்றால் ஒரு அளவுக்கு கண்ணாடி அணிந்து சரி செய்யலாம்,
அறுவை சிகிச்சை செய்தும் கண் பார்வையை சரி செய்யலாம்.
ஆனால் கண்ணின் அசல் தன்மையை திரும்ப கொண்டு வர முடியாது.கண் இல்லாதவர்களுக்கு இன்னொருவரிடமிருந்து கண்ணை பிடுங்கி வைக்கலாம்.ஆனால் செயற்கையாக கண்ணை உருவாக்க முடியாது.

 உடைந்த எலும்பை ஒட்ட வைக்கலாம். ஆனால் புதிய எலும்பை உருவாக்க முடியாது.

 இது போல் பரிகாரம் என்பது ஒரு வகையில் குறைபாட்டு மேலாண்மை தவிர முற்றிலும் எதையும் உருவாக்கவோ மாற்ற முடியாது.இயற்கையில் இல்லாத ஒன்றை மனிதனால் உருவாக்க முடியாது.

மழை வருவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் குடை பிடிப்பது ஒரு பரிகாரம்.ஆனால் முற்றிலும் உடல் மழையில் நனையாது என்று கூற முடியாது.மழையுடன் பலத்த காற்றும் வீசினால் குடை என்ற பரிகாரம் பலன் தராது. குடை காற்றில் பறந்து விடும்.

வறட்சியை போக்க யாராலும் மழையை வரவைக்க முடியாது. குளிரை போக்க யாராலும் வெயிலை வரவைக்க முடியாது

 பஞ்ச பூதங்கள் யாருக்கும் கட்டுப்படாது. நன்றாக புரிந்துகொள்ளுங்கள்

இல்லாததை உருவாக்குவதல்ல பரிகாரம். குறைபாடுகளை சமாளிப்பதுதான் பரிகாரம்.

 பழுதுபட்ட வாகனங்களை பழுது நீக்கி சரி செய்வது போன்றதுதான் பரிகாரம்

"""""""""""""""""'""''''''''"""""""'
 மகான்கள் சித்தர்கள்ஞானிகளால் கர்மா வினைகளை போக்குவது எப்படி
""""""""""""""""""""""""""""""""

பாவ  புண்ணியங்களின் அடிப்படையில் தான் வாழ்வு நடைபெறுகிறது என்பதால் மகான்களை சித்தர்களை தரிசிப்பதால் மட்டும் அது மாறி விடப் போகிறதா என்று பலர் நினைக்கிறார்கள். 

பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்றே வைத்து கொள்வோம். 

ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள் அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும் . அதை சுமப்பது கையாள்வது எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையை தாம் வாங்கிக் கொண்டு புது ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக 5ஐ   தருகிறார் . 
           
இப்போதும்  அதே ஐந்தாயிரம் தான் அவரிடம் இருக்கிறது 
ஆனால் சுமை தெரியவில்லை  பாரம் குறைந்து விட்டது 
இதைத் தான் மகான்கள் சித்தர்கள் செய்கிறார்கள்

கர்மவினை நம்மிடம் தான் உள்ளது ஆனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ  நிலையை ஞானிகள் மாற்றி விடுகிறார்கள். நமது ஆத்ம சக்தியை பலப் படுத்தி விடுகிறார்கள். 

பாவ புண்ணியங்களில் சம நிலை எய்திய மகான்கள் சித்தர்களால்  நமது பாவ வினை ஒழியும் என்பது மற்றுமோர் அசைக்க முடியாத உண்மை அவர்கள் ஜீவ சமாதியிலும் கூட  இன்றும் இது நிகழ்கிறது 

இதை  வார்த்தைகளால் சொன்னால் புரியாது அனுபவத்தில் தான் புரிந்து கொள்ள முடியும் 

""""'""""""''''"""'''''''''''''''''''""''"'""
 கண் திருஷ்டிக்கு பலன் தரும் தாந்திரீக  பரிகாரங்கள்
""""""""""""""""""""
வாழை மரம்

விசேஷங்களின் போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்து கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.

வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்:

 வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். 

மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிவப்பு நிற மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.

 ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

உப்புக்குளியல்:

வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

எலுமிச்சம்பழம்:

 வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். 

இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

கடல் நீர்:

 வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

திதிகள்:

 அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகள் வெளியேறும்.

 ஆன்மீக சேவையில்
ஓம் ஸ்ரீ ரேணுகாம்பாள் அருள்பிரியன்
சர்வ சக்தி உபாசகர்
"அம்மன்அருள்"சக்திபாலா
குருவருள் ஆன்மீக தாந்ரீக பயிற்சி மையம்
தெய்வ பிரஸ்ன தாந்திரீக பரிகார வித்தகர் பிரபஞ்ச சக்தி தியான பயிற்சியாளர்
வாட்ஸ்அப்-9442707274 சுபமஸ்து

No comments:

Post a Comment