பத்திய ரசம்.:
தேவையான பொருட்கள்.:
புளி – நெல்லிக்காய் அளவு,
மிளகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை.:
புளியை நேரடியாக அடுப்பு தணலில் காட்டி திருப்பி, திருப்பி சுட்டு அதை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, பிழிந்து, புளிக்கரைசல் தயார் செய்யவும்.
மிளகு, சீரகத்தை நெய்யில் வறுத்து பொடித்துக்கொள்ளவும்.
கடாயில் புளிக்கரைசல் விட்டு உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகு – சீரகப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
குறிப்பு.:
சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்த ரசத்தை ஊற்றிக் கலந்து சாப்பிடலாம். இதை பிரசவித்த பெண்களுக்குத் தருவார்கள். இதற்கு தாளிக்கக் கூடாது.
No comments:
Post a Comment