Friday, April 24, 2020

பிரம்மாவில் இருந்து விஷ்ணு..

'பிரம்மாவில் இருந்து விஷ்ணு...விஷ்ணுவில் இருந்து பிரம்மா...( சிவரகசியம்)'

சிருஷ்டியின் இறுதியில் ஒரு சாதாரண மனிதனாக இருந்த பிரம்மா,தான் பிரம்மா என்ற நினைவில்லாமல் தொழில் காரியங்களை கவனித்துக்கொண்டே இல்லறத்தையும் பராமரித்து வந்தார். ஆனால்,சிறந்த பக்திமானாக விளங்கினார். இறைவனை அடைவதற்காக தான, தர்மங்கள் செய்பவராய்.. ஏழைகள் மீது இரக்கம் கொண்டவராய் திகழ்ந்தார்.கலியுகம் இறுதியான வேளை ஆதலால், உலகம் இறைவனை பற்றி பல்வேறு கற்பனைகள் கொண்டதாக இருந்தது. பிரம்மாவை பொறுத்தவரை...சாஸ்திரங்கள் தங்க முட்டையை உடைத்து வெளியே வந்தார்.,

பிரம்மா யாராலும் படைக்கப்படவில்லை என்றெல்லாம் புராணங்கள் சொல்லினாலும்,பிரளய காலத்தில் உறங்கிக் கொண்டிருந்த பிரம்மாவை எழுப்பி படைப்பு தொழிலை சிவன் ஆரம்பிக்க சொன்னார் என்றே குறிப்பிடுகின்றது.உறக்கம் என்பது யாருக்கு வரும்,உழைத்து ஓய்ந்தவர்களே தன்னை மறந்து உறங்குவார்கள்.
அவர்களைத்தான் விழித்தெழ செய்யவேண்டும்.இதன் உண்மை அர்த்தம் சிருஷ்டியின் இறுதி நிலையில் வந்து தான் ஒரு ஆன்மா என்ற கண்ணை மறந்து தேகம் என்ற உணர்வோடுவாழ்ந்த பிரம்மாவை தந்தை ஜோதியான சிவபெருமான் ஆன்ம கண்ணை விழிப்படைய வைத்து உறக்கத்தில் இருந்து எழுப்புகின்றார் என்பதாகும். பரப்பிரம்மத்தில்ஜோதியாக இருக்கும் பரமேஸ்வரன் பிரம்மாவின் உடலின் நெற்றியின் மத்தியில் பிரவேசிக்கும்பொழுது, உலகம் பல்வேறு தர்மங்களை கொண்டதாக, சாஸ்திர சம்பிரதாயங்களை கொண்டதாக,ஒரு கடவுளை பற்றி அறியாததாக அஞ்ஞான இருள் சூழ்ந்ததாக இருக்கின்றது, இந்த அஞ்ஞானம் அகற்ற பரம்பொருளானவர் ஜோதிவடிவமாக இருக்கக்கூடிய சிவபெருமான் பிரம்மாவின் நெற்றியில் பிரவேசமாகி அவருக்கு ஆன்ம நிலையை நினைவூட்டி,இப்பூவுலகில் அதர்மங்களை அழித்து ஸ்வர்க்க ஸ்தாபனை செய்ய போவதாக அறிவிக்கின்றார்.அவருக்கு 
உலக விநாசத்தின் காட்சியையும்,ஸ்வர்க்கம் பூமியில் வருவதையும் காண்பித்து, ஸ்வர்க்கத்தின் மகாராஜாவாக நீங்களே இருந்தீர்கள் என்ற காட்சியையும் தந்தை சிவபெருமான் காண்பிக்க, உடல் புல்லரித்துப் போன பிரம்மா,இப்பொழுது இதில் என்னுடைய செயல் எது என்று வினவ?பிறப்பு, இறப்பு என்ற பாகத்தில் வந்து உங்களை மறந்துள்ளீர்கள்.ஸ்ரீ நாராயணராக ஸ்வர்க்கத்தில் ஆரம்பித்த உங்கள் பயணம், சத்யுகம், திரேதாயுகம்,துவாபர யுகம் என்ற யுகங்களை கடந்து இப்பொழுது கலியுக இறுதியை அடைந்துள்ளது.பிறவி,பிறவிகளாக செய்துள்ள பாவங்களின் விளைவு ஆன்மா கீழான நிலையடைந்துள்ளது, எனவே, உங்களை ஆன்மா என புரிந்து என்னை நினைத்து உங்கள் பாவங்களை அழித்துவிட வேண்டும், அப்பொழுது மீண்டும் ஸ்ரீ நாராயண நிலையை அடைவீர்கள்.இதே மந்திரத்தை உலகினர் அனைவருக்கும் வழங்க வேண்டும். அதை உங்கள் மூலம் வழங்க போகின்றேன் என்றும் அருளுகின்றார். ஏறக் குறைய அறுபது வயதை எட்டியிருந்த பிரம்மா தன்னுடைய ஆஸ்திகள் அனைத்தும் இறைவனுடைய தர்ம காரியத்தில் மனதார ஈடுபடுத்தினார்.இதன் காரணமாகவே பிரம்மாவின் எதிர்கால சொரூபமான ஸ்ரீ நாராயணன் கோவிலில் இன்றும்செல்வம் மலைபோல காணிக்கையாக கொட்டுகின்றது. ஜோதியான சிவபெருமானை தனது வாரிசாக்கி தன்னுடைய ஆஸ்திகளை சனாதன தர்மத்தின் காரியத்தில் பிரம்மா பயன்படுத்திய காரணத்தால், பிரம்மாவை ஈசனே தனது தந்தை என பக்தியில் அறிவித்தது இக் காரணத்தால் தான், பிரம்மாவே தனது மகன்,அவருக்கு நானும் குழந்தையாக இருக்கின்றேன் என தந்தை சிவனார் திருவாய் மலர்ந்தருளினார்.இந்த உலகம் ஆரம்பத்திலிருந்து எப்படி இருந்தது. மத்தியில் மற்றும் இறுதியில் எப்படி ஆனது என்ற ஞானத்தை பிரம்மாவின் வாய் மூலம் இறைவன் உலகிற்கு வழங்கினார்.இதுவே, 
சுதர்சன சக்கரம் ஆனது, பிறகு தாமரை மலர் போல பற்றற்றும், அன்புடனும் இவ்வுலகில் வாழ்ந்திருந்தாலும் விலகியிருந்தது ஜோதியாக என்னைநினைவு செய்யவேண்டும் என்பதே யோகம் எனும் தவம் ஆகியது. நினைவின் மூலம் சக்திசாலியாகி தீய குணங்களுக்கு ஆட்படாமல் உறுதியாக நெறி தவறாமல் வாழவேண்டும் என்பது கதாயுதம் ஆகியது.இவற்றையெல்லாம் வாழ்வில் கடை பிடித்து பிறருக்கு ஞானத்தை அளிப்பதே சேவை எனும் சங்கு ஆனது. இவற்றை பிரம்மாவிற்கு சிருஷ்டியில் இறுதியில் கொடுத்தால் அழகாக இருக்காது என அவரது ஸ்ரீ நாராயண சொரூபத்துக்கு கொடுக்கப்பட்டு மகா விஷ்ணுவாக அழைக்கப்பட்டார். உண்மையில் பிரம்மாவின் மூலம் ஞானம் கேட்பவர் ஒவ்வொருவருக்கும் இந்த அடையாளங்கள் பொருந்தும். அனைத்துக்கும் ஒருவரை உதாரணமாக காண்பிக்கவேண்டும் என்பதற்காக எந்த பிரம்மா ஸ்ரீ நாராயணன் ஆனாரோ, அவரது உடலே கீதையில் ரதமாக்கப்பட்டது. அதனால்தான் உலகில் பிரம்மாவின் உடலே கோவில் என்றழைக்கப் பட்டது.ஜோதியான தந்தை சிவபெருமானை அறியாத காரணத்தால் பிரம்மாவின் எதிர்கால ஸ்ரீ நாராயணசொரூபத்தின் பால்ய பருவமான ஸ்ரீ கிருஷ்ணரே பரமாத்மா என்று அழைக்கப்பட்டார்.பிறவியின் இறுதியில் 
பூமியில் சிருஷ்டியின் இறுதியை அடைந்த பிரம்மாவின் சொரூபமே அர்ஜுனன் என்று அழைக்கப்பட்டது.பிரம்மாவின் உடலை தனது உடலாக சிவபரமாத்மா பயன்படுத்தியதால்,
பிரம்மா மேலும் சிவனின் வேற்றுமையை அறியமுடியாத காரணத்தால், அனைத்து பிரம்மா மேலும் சிவனின் பல்வேறு சொரூபங்கள் புரிந்து கொள்ளமுடியாமல் பக்தியில் மாற்றப்பட்டு விட்டன,இதற்கெல்லாம் காரணம்,ஒரே உடம்பில் இரு ஆத்மாக்களின் டபுள் ஆக்ட், அதாவது ஒன்று பிரம்மாவின் ஆத்மா, மற்றொன்று பிறப்பு, இறப்பில் வராத ஜோதியான சிவபரமாத்மாவின் ஆத்மா, இதைத்தான் பக்தியில் ஹரியும் சிவனும் ஒன்னு, அறியாதவர் வாயில் மண்ணு என்று சொல்லிவைத்தனர்.சிவபெருமானை ஒரு உடல் இருப்பவராக பார்த்தால்,இந்த பூமியில் பிரம்மாவின் உடல் ரூபத்திலேயே பார்க்க முடியும்.எனவேதான், பரமாத்மாவின் உண்மை
ரூபம் மறைக்கப்பட்டுவிட்டது.சிருஷ்டியின் ஆரம்பத்தில் பெருமாள் வராக அவதாரம் எடுத்து கீழே இறங்குவதற்கும், ஞானம் கேட்ட பிரம்மா ஜோதியான ஈசனை நோக்கி மேலே செல்வதற்கும் இதுவே உதாரணம்.
சிவன்கோவிலில் உட்கார்ந்துசெல்லவேண்டும் என்பது சிருஷ்டி இறுதியில் அதர்ம அழிவிற்கு பின் உடலை விட்டுச்செல்லும் ஆன்மாக்கள் ஜோதியான தந்தை ஈசன் இருக்குமிடமான பிரம்மதத்துவத்தில் சிறிதுகாலம் இருந்தே பூமிக்கு வரவேண்டும் என்பதையும்...
ஸ்ரீ நாராயண ராஜ்யத்திலிருந்து வரும் ஆன்மாக்கள் பிறவி பயணத்தை தொடர்கின்றன என்பதற்காக பெருமாள் கோவிலில் அவரை வணங்குபவர் நேரடியாக உட்காராமல் செல்ல வேண்டும் என ஐதீகத்தை குறிப்பிடுகின்றனர். நல்லது ,உண்மையை அறிவோம், பூமியில் வரும் ஸ்ரீ நாராயண ராஜ்யத்திற்கு செல்ல இப்பொழுது தந்தை ஜோதியான சிவ பரமாத்மாவை நினைத்து தயாராவோம்.

No comments:

Post a Comment