காமாட்சி விளக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம்:
காமாட்சி அம்மன் தன்னுடைய பிள்ளைகளின் நலனுக்காக தவம் இருந்தவர்.
உலக மக்களின் நன்மைக்காக, அவர் அப்படி தவம் இருந்த போது, சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது.
அதனால் காமாட்சி அம்மனை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் ஒருவருக்கு கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.
தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்கும் போது காமாட்சி அம்மனுடைய அருளும் அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும்.
தங்களுடைய குலதெய்வம் எது என தெரியாமல் தவிப்பவர்கள் காமாட்சி அம்மனையே தங்கள் குலதெய்வமாக நினைத்துக் கொண்டு,
‘நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை தழைக்க காப்பாற்று’
என வணங்கியபடி விளக்கேற்றி வழிபடலாம். அதற்கு ‘காமாட்சி தீபம்’ என்று பெயர்.
காமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற வேண்டி
திருமணங்களில் மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரவும்
புகுந்த வீட்டிற்குச் செல்லும் மணப்பெண் அங்கு முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் சொல்கிறார்கள்.
அதோடு காமாட்சி விளக்கினை ஏற்றுவதால் குலதெய்வத்தின் ஆசியுடன் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பதும் நம்பிக்கை.
கஜலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் காமாட்சி விளக்கு மங்கலப் பொருட்களில் ஒன்று என்பதால் பூவும் பொட்டும் வைத்து மங்கலத்துடன்
தீபம் ஏற்றி தினமும் வழிபட்டு வரும் இல்லத்தில் வறுமை என்பதே இருக்காது.
சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பாதுகாப்பாக வைத்திருப்பதும் உண்டு.
திருமண சீர்வரிசைகளில் மணப்பெண்ணுக்கு காமாட்சி அம்மன் விளக்கும் இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்குவது இன்றும் நடைமுறையில் உள்ளது.
நம்முடைய இல்லத்திலும், உள்ளத்திலும் உள்ள எல்லா இருள்களையும் நீக்கி
இறைவனின் அருள் ஒளியை அருளும் காமாட்சி அம்மன் விளக்கு
நமக்கு அனைத்து செல்வங்களையும் கொடுக்கட்டும்.
ரா ம் கி
9 நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்..!
┈┉┅━❀••❀━┅┉┈*
9 நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்..!
இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாக அமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும். நவக்கிரங்களை தமிழில் ஒன்பான் கோள்கள் என்று அழைக்கின்றனர். சரி இங்கு ஒன்பது நவகிரகங்கள் பற்றிய சில தகவல்களை படித்தறிவோம்.
9 நவகிரகங்கள் பெயர்கள்:
நவக்கிரக கோயில்கள் / Navagraha temples:
சமண சமயம்
இந்து சமயத்தில் வழிபடுவதைப் போன்றே சமண சமயத்திலும் நவக்கிரக வழிபாடு காணப்படுகிறது. சமணர்கள் தங்களுடைய தீர்த்தங்கரர்களின் தன்மைகளோடு நவக்கிரகங்களை ஒப்பிட்டு வகைப் படுத்துகின்றனர்.
ஜோதிடத்தில் நவக்கிரகங்கள்:-
இந்திய ஜோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது ஆகும். அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். தற்கால அறிவியல் அடிப்படையில் இவைகளில் சில மட்டுமே உண்மையான கோள்கள். சூரியன் ஒரு விண்மீன் (நட்சத்திரம்). சந்திரன் பூமியின் துணைக்கோள். இராகு, கேது இரண்டும் விண் பொருட்களே அல்ல. இவை நிழற் கோள்கள் எனப்படுகின்றன அதாவது இல்லாத கிரகங்களாக கருதப்படுகின்றன..
புவி அண்டத்தின் மையத்தில் இருக்க, சூரியன் உட்பட்ட எல்லாக் கோள்களும் அதனைச் சுற்றி வருகின்றன என்ற பழங்கால நம்பிக்கைக்கு ஏற்பவே ஜோதிடத்தில் கோள்களின் இயக்கங்கள் கணிக்கப்படுகின்றன. பண்டைய இந்தியப் பண்பாட்டில் இராகு, கேது தவிர்ந்த ஏழு கோள்களும் தேவர்கள் எனவும், அவர்கள் வெவ்வேறு குண இயல்புகளைக் கொண்டவர்கள் எனவும் கருதினார்கள். இக் கோள்கள், அவரவர் குண இயல்புகளுக்கு ஏற்ப உலகுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் நன்மையையோ தீமையையோ செய்கிறார்கள் எனச் ஜோதிட நூல் கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், புவிக்குச் சார்பாக விண்வெளியில் கோள்கள் இருக்கும் நிலையும், ஒவ்வொரு கோளும் ஏனைய கோள்களின் நிலைகளோடு கொண்டுள்ள தொடர்பும் புவியில் இடம்பெறும் நிகழ்வுகள் மீது அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பாதிக்கின்றன என்று ஜோதிடம் கருதுகிறது.
No comments:
Post a Comment