Friday, April 24, 2020

வெற்றிலை: சுபிட்சத்தின்_அடையாளம்

வெற்றிலை: சிறப்பு பதிவு. சுபிட்சத்தின்_அடையாளம்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிப்பது வெற்றிலை. 
அப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச்செய்பவை. 

வெற்றிலையின் காம்பைக் கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பிக்கப் படுகிறது. தேவியின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண்மை இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தியின் வடிவம். பச்சை இலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண்மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாதது போல் வெற்றிலையின்றி வழிபாடு இல்லை.

பூஜையில் வெற்றிலை:

பூஜை செய்யும் போது வெற்றிலை , பாக்கு, பழம் வைத்து நாம் எல்லோருமே பூஜை செய்வோம். அது எதுக்குனு நிறைய பேர்களுக்கு தெரியாது. வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் அம்சம் . வெற்றிலையின் நுனியில் லக்ஷ்மியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் இருக்கிறார்கள். வெற்றிலை, பாக்கு ,பழம் வைத்து இறைவனை வணங்குவது மரபு. வெற்றிலை,பாக்கு வைத்து வணங்கவில்லை எனில், எந்த ஒரு பூஜையும் நிறைவு பெறாது .

வெற்றிலை நோயில்லாமல் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

பாக்கு செல்வம் கிடைக்க வழிவகுக்கிறது .பாக்கு வைத்து இறைவனை வணங்கினால் நமக்கு குறைவற்ற செல்வம் கிடைக்கும். வாழைப்பழம் பாவ புண்ணிய விடுதலையை குறிக்கும் .

தேங்காய் அறிவை தரும் .

தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அர்ச்சனை செய்வது நமக்கு அறிவு, ஆரோக்கியம் ,செல்வம், பாவ-புண்ணிய விடுதலை ஆகியவற்றை தர வேண்டும் என்பதால் தான் .

கருணை கடலான இறைவனை பூஜிக்கும் போது இவற்றை வைத்து பூஜிக்க வேண்டும்.

வடநாட்டவர்கள், தீபாவளியன்று லக்ஷ்மிபூஜை செய்யும் போது மூன்று வெற்றிலையையும், மூன்று பாக்கையும் பூசாரி எடுத்து வைப்பார். லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்காவை இது குறிக்குமாம்.

திருமணத்தில் வெற்றிலை:

திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என்கிறார்கள். வெற்றிலை பாக்கு கொடுத்து விட்டால் அது தாம்பூல சத்தியம். முற்காலத்தில் அதை யாரும் மீறத் துணியமாட்டார்கள், திருமணத்திற்கு அழைக்கும் போது வெத்திலை பாக்கு பழத்துடன் அழைக்க வேண்டும்...

அதுதான் மரியாதைக்குரிய செயல் ஆகும்.
விருந்தினர்களுக்கு சுப காரியத்தின் போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் ஒருபொருளோடு வெற்றிலையும், பாக்கும் சேர்த்து கொடுத்தால் நம் குடும்பம் செழித்தோங்கும். திருமணத்தின் போது கணவன் மனைவி இருவருக்கும் பெண்ணின் சகோதரன் தாம்பூலம் மடித்துக் கொடுப்பது ஒரு சம்பிரதாயம்...

 நலங்கின்போதும், முதல் இரவின் போதும் வெற்றிலை பாக்குக்கு முக்கிய இடம் உண்டு. வெற்றிலை ஒரு கர்ப்ப மூலிகை .இதனுடன் சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட தேவையான உயிர் சத்து கிடைக்கும்.

இலக்கியத்தில் வெற்றிலை:

மகாபாரதத்தில் தருமன் ராஜசூய யாகம் நடத்திய போது முதல் தாம்பூலத்தை கண்ணன் பெற்றுக் கொண்டான் என்று சொல்கிறது. 
திவ்ய பிரபந்தத்தில் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் எம் பெருமான் என்றென்றே கண்களில் நீர் மல்கி என்று மனம் உருகிப்பாடுகிறார் நம்மாழ்வார்.

காளமேகப்புலவர் ஆதி நாளில் திருவானைக்கா கோயிலில் பரிசாரகராக இருந்தாராம். அங்கே தாசியாக இருந்த மோகனாங்கி என்பவளின் அழகில் மயங்கி, ஒருநாள், கோயில் பிரகாரத்திலேயே அவள் வருகைக்காக காத்திருந்த நிலையில் கண்ணயர்ந்தார். நள்ளிரவில் அகிலாண்ட நாயகி அம்மன் அவர்முன் தோன்றி, தன் வாயில் இருந்த தாம்பூலத்தை அவர் வாயில் உமிழ்ந்தாளாம், அவர் அதைச் சுவைக்க, தெய்வப் பிரசாதமான தாம்பூலம் நாவில் பட்டதும் நாவன்மை பெற்ற காளமேகம், ஆசுகவி பாடுவதில் வல்லவர் ஆனாராம்.

இதுபோன்றே, கூத்தனூரில் தேவி சரஸ்வதி தன் வாய்த் தாம்பூலத்தின் சாறை அளித்து ஒட்டக்கூத்தரை கவிவித்தகர் ஆக்கிய தாகவும் ஒரு வரலாறு உண்டு.

அனுமனுக்கு ஏன் வெற்றிலை_மாலை..!!

அசோகவனத்தில் சோகமாக அமர்ந்திருந்த சீதைக்கு புத்துயிர் ஊட்டியவன் அனுமன் என்பதால், ஒரு உயிரைத் தரும் தாய்க்கு சமானம் ஆனான்! எனவே தாயாக அவனைப் பார்த்த சீதைக்கு ஏதாவது மங்களப் பொருளை அவனுக்குத் தரவேண்டுமே என்று சுற்றுமுற்றும் நோக்கி அருகில் படர்ந்திருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து ஐந்து வெற்றிலைகளைப் பறித்து அவன் மேல் கண்ணீர் ததும்பப் போட்டாள்! 

அந்த ஐந்து வெற்றிலைகளை மாலையாகப் போட்டுக் கொண்டான் அனுமன். பின்னர் இராவண வதம் முடிந்த பின்னரும் சீதை, "ராமன் போரில் ராவணனை வென்றான்" என்ற செய்தி கூற, வந்த அனுமனிடம், வெற்றி உண்டாகட்டும் என்று வெற்றிலை மரத்தில் வெற்றிலையை பறித்து ஆசீர்வதித்தாள். ஆகையால் வெற்றிலை மாலை சார்த்தி, அஞ்சநேயரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும் எனபது உறுதி .

வெற்றி இலை.....!! 

வெற்றி தருவது வெற்றிலை!
வெற்றிலையை வாட விடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால் தான் வாங்க வேண்டும். மகிமை மிக்கதும், மங்கள கரமானதுமான வெற்றிலை, சுபிட்சத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

நம்ம மூதாதையர் நமக்கு நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். நாம் தான் அதை பின்பற்ற மறந்து விடுகிறோம். இனிமேலாவது அதைக் கடைபிடிப்போம்...


No comments:

Post a Comment