Tuesday, February 4, 2020

நான் சுவாசிக்கும் சிவாஜி

மும்பை நட்சத்திர ஓட்டலின் பெரிய பிரமாண்டமான அறையில், 
(அப்போது அதுதான் பெரிய ஸ்டார் ஓட்டல்) சிம்மாசனம் போன்ற சோபாவில், சிவாஜி உட்கார்ந்திருந்தார்; அருகே, மற்றொரு இருக்கையில், கமலாம்மா. சிவாஜி உட்கார்ந்திருந்த சோபாவுக்கு அருகே, தரையில், கார்ப்பெட்டில், நன்றாக உடை அணிந்திருந்த ஒரு நபர் உட்கார்ந்திருந்தார். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ரங்கநாதனை தெரியுமென்பதால், அவருக்கு வணக்கம் சொன்னேன். அருகே இருந்த சோபாவில், எங்களை உட்கார சொன்னார் சிவாஜி.

தரையில் கார்ப்பெட்டில் அமர்ந்திருப்பவரை காட்டி, 'இவர் யார் தெரியுமா?' என்று, கேட்டார் சிவாஜி.

'தெரியலையே சார். உங்க ரசிகரோ...' என்று, கேட்டேன்.

'ரசிகர் தான். ஆனால், அதை விட, முக்கியமானது, இவர் தான் இந்த லீலா பேலஸ் ஓட்டலுக்கு, சொந்தக்காரர்...' என்றார்.

ஏழு நட்சத்திர ஓட்டல் அதிபர், தரையில் அமர்ந்திருக்க, நாங்கள் சோபாவில் அமர்ந்திருப்பது சங்கடத்தை ஏற்படுத்த, நானும், சுப்புணியும் எழுந்து நின்றோம். நான் ஓட்டல் உரிமையாளரான நாயரைப் பார்த்து, 'சோபாவிலே வந்து உட்காருங்க...' என்றேன். 
மலையாளம் கலந்த தமிழில், 'எனக்கு இந்த இடம் போதும். ஞான் சாரிண்ட பரம ரசிகனானு. கட்டபொம்மன் படம் எத்தர டயம் நோக்கிட்ட உண்டு...' என்றதும், எனக்கு பேச்சே வரவில்லை.
      நன்றி!
  திரு. Y.G.மகேந்திராவின்
  நான் சுவாசிக்கும் சிவாஜி!

No comments:

Post a Comment