Tuesday, February 4, 2020

வெங்காயம் இல்லாமல் என்ன சமைக்கலாம்

வெங்காயம் இல்லாமல் என்ன சமைக்கலாம்..! ஒரு வாரத்திற்கான உணவுப் பட்டியல் இதோ..


மோர்க் குழம்பு :  

 மோர்க் குழம்பு வெங்காயமே இல்லாமல் தாளித்து சாப்பிட்டாலும் அற்புத சுவைதான். அதோடு கூடவே தேங்காய், காய்ந்த மிளகாய், உடைத்த கடலை இஞ்சி ஆகியவற்றை வதக்கி அரைத்து மோரில் கலந்து கொதிக்க வைத்து தாளித்து சாப்பிடலாம். வேலையும் சிம்பிளாக முடிந்துவிடும்.

 புளி தொக்கு : 

புளித் தொக்கு என்றாலே புளிதான் மூலதனம் என்பது அறிந்ததே..! இதில் வெங்காயம் மட்டுமல்ல தக்காளி கூட தேவைப்படாது. எனவே புளிக்குழம்பு வைத்து சோற்றில் கிளறி சாப்பிடுவதும் அதற்கு பொருத்தமான சைட்டிஷும் அட்டகாசமாக இருக்கும்.

 வெரைட்டி ரைஸ் :

கேரட் சாதம், பீட்ரூட் சாதம், புதினா சாதம் என கிளரும்போது வெங்காயமும் வதக்குவோம். இனி வெங்காயமே இல்லாமல் சமைக்கலாம். அபடி செய்வதால் உணவின் சுவையும் குறையாது.

 வெஜிடபிள் பிரியாணி :

 தற்போது வெங்காயம் இல்லாமலும் நிறைய வீடுகளில் வெஜிடபிள் பிரியாணி செய்கிறார்கள். யூடியூப்களிலும் அதற்கான வீடியோக்கள் நிறைய கிடைக்கின்றன. அது நிச்சயம் உங்களுக்கு உதவலாம். தக்காளி சாதமும் சமைக்கலாம்.

 கீரைக் குழம்பு : 

கீரைக் குழம்பிலும் வெங்காயம் குறைவாகவே பயன்படுத்துவோம். அது கெட்டியாக இருப்பதால் வெங்காயம் போட்டாலும் தனித்துத் தெரியாது. அதற்கு வெங்காயமே இல்லாமல் கீரைக் குழம்பு வைக்கலாம்

No comments:

Post a Comment