Thursday, April 15, 2021

அரச மரப் பட்டைக் கசாயம் / பித்தக் காய்ச்சலுக்கு

அரச மரப் பட்டைக் கசாயம் 

நரம்பு சுருள் நோய் அதனால் ஏற்படும் புண்கள் 

சர்க்கரை நோயினால் ஏற்படும் ஆறாத புண்கள்

 சொரியாசிஸ் 

உடலில் ஏற்படும் புண்கள் 

தோல் நோய்கள் 

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் கோளாறுகள் 

ஆகியவற்றைக் குணப் படுத்தும் அற்புதமான மருந்து இது 

அரச மரப் பட்டை .......  இரண்டு கிராம் 
ஆல மரப் பட்டை .......  இரண்டு கிராம் 
பூவரசு மரப்பட்டை .......  இரண்டு கிராம் 
அத்தி மரப் பட்டை .......  இரண்டு கிராம் 
இத்தி மரப் பட்டை .......  இரண்டு கிராம் 

ஆகிய ஐந்து பொருட்களையும் சேர்த்து நானூறு மில்லி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி நூறு மில்லி கசாயமாக சுருக்கி இறக்கி வடிகட்டி ஒரு வேளைக்கான மருந்தாகக் குடித்து வர வேண்டும் 

கடுமையான துவர்ப்பு சுவையுடன் இருக்கும் கசாயம் இது 

காலை இரவு என தினமும் இரண்டு வேளைகள் உணவுக்கு அரைமணி நேரம் முன் குடித்து வர நரம்பு சுருள் நோய் குணமாகும் ஆறாத புண்கள் ஆறும் 

இதை உள் மருந்தாக மட்டுமல்ல வெளிப்புறமாகக் காயங்களைக் கழுவவும் பயன் படுத்தலாம் 

இயற்கை மருத்துவத்தில் ஆன்டிசெப்டிக் ஆன்டி பேக்டீரியா மருந்துகள் இல்லை என்று நினைப்பவர்களுக்கு இந்தக் கசாயம் அவற்றையும் கட்டுப்படுத்தி டிரக் ரெசிஸ்டன்ட் பாக்டீரியாக்களையும் சரி செய்யக் கூடியது என்பதை உணர்த்தும் கசாயம் இது 

நரம்பு முடிச்சி நோய் நரம்பு சுருட்டல் நோய் என்ற வெரிகோஸ் வெயின் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது 

கால்களில் ஏற்படும் சிறு ரத்தக் குழாய்களில் ஏற்படும்தேவையற்ற  அழுத்தம் அந்த அழுத்தம் அதிகமாகும்போது 

கால்கள் முழுவதும் பச்சை நிறமான நரம்புகள் வெளியே தெரிந்து அழுத்தம் அதிகமாகும்போது படிப்படியாக கால்களில்  அரிப்பு புண்கள் ஏற்படுகின்றது 

இந்தப் பிரச்சினையை அழகாகக் குணப்படுத்தும் அற்புதமான கசாயம் இது 

---------------------------------------------------------------------------------------------------------------------------

பித்தக் காய்ச்சலுக்கு


சுக்கு – 10 கிராம்
சீரகம் – 10 கிராம்
தும்பைவேர் – 10 கிராம்
பேரீச்சம் – 10 கிராம்
நிலாவிரை – 10 கிராம்
வில்வவேர் – 10 கிராம்
விலாமிச்சம்வேர் – 10 கிராம்
நெல்லிமுள்ளி – 10 கிராம்
அதிமதுரம் – 10 கிராம்
திப்பிலி – 10 கிராம்
மிளகு – 10 கிராம்
கொத்துமல்லி – 10 கிராம்

ஆகியவற்றை நன்கு தூள்செய்து 1 தம்ளர் தண்ணீர்விட்டு, அதில் அரை தேக்கரண்டி அளவு இந்த பொடியை போட்டு, அரை தம்ளர் சுண்டக் காய்ச்சி வடிக்கட்டி அரைத்தேக்கரண்டி தேன் கலந்து அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட பித்தம் சம்பந்தமான காய்ச்சல் குணமாகும்.

No comments:

Post a Comment