#ஹரேகிருஷ்ண
#கொஞ்சம்_அரசியல்
திருநெல்வேலி மானூர் பகுதியில் ஒரு சுடலை கோவிலில் ஓவிய பணியில் இருந்தேன் அப்போது திருச்செந்தூருக்கு பாதையாத்திரை செய்துகொண்டு சில பக்தர்கள் வந்துகொண்டிருந்தார்கள்
வெயில் அதிகமாக இருந்ததால் கோவில் அருகில் இருந்த வேப்ப மர நிழலில் ஒரு பத்து பேர் ஓய்வெடுக்க வந்தார்கள்
அப்போது அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான் அவர்களிடம் சென்று உங்களுக்கு யாருக்கேனும் #பகவத்கீதை தேவைப்படுகிறதா என்னிடம் பகவத்கீதை இருக்கிறது என்று கேட்டேன் அதில் 2 பேர் மட்டும் எங்களுக்கு தாருங்கள் என்று கேட்க அவர்களுக்கு பகவத்கீதை கொடுத்தேன்.
அப்போது அந்த பத்து பேர் கூட்டத்தில் உள்ள ஒரு நபர் இதை எழுதியது யார் என்று கேட்டார்கள் இதை மொழிபெயர்த்தவர் எங்களது ஆன்மீக குரு #ஸ்ரீலபிரபுபாதா என்று கூறினேன் உடனே அந்த நபர் சொன்னார் ஒரு வடநாட்டு காரன் தான் வந்து நம்மளுக்கு ஆன்மீகம் சொல்லித் தர வேண்டுமா வட நாட்டுக்காரர்கள் சொல்வதை நாம் கேட்க கூடாது நாம் தமிழர்கள் என்று பேசினார்
நான் உடனே அந்த நபரிடம் நண்பரே ஆன்மீகத்திற்கு எந்த மொழியும் கிடையாது பகவத்கீதையை ஆன்மீக செய்திகளையோ நாம் மொழி இனம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது என்று கூறினேன்.
உடனே சில நிமிடங்கள் அவர் இந்த விஷயத்தை ஒரு விவாதப் பொருளாக மாற்றினார் நானும் அவருக்கு பதில் கூறினேன் உடனே சுற்றி உள்ள அத்தனை பேரும் நான் கூறியது சரிதான் என்று ஏற்றுக்கொண்டார்கள்
என்னிடம் வாதம் செய்த அந்த நபர் மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை இறுதியாக நீங்கள் ஏதும் கட்சியில் இருக்கிறீர்களா என்று கேட்டேன் ஆமாம் #நாம்தமிழர்கட்சியில் இருக்கிறேன் என்றார்
உருப்பட்ட மாதிரி தான் போங்க என்றேன் 😀.
அவருக்கும் கொஞ்சம் விளக்கம் கொடுத்தேன் சரி நண்பரே நீங்கள் எத்தனை ஆண்டுகளாக திருச்செந்தூருக்கு மாலை போட்டு செல்கிறீர்கள் என்றேன் அவர் சில ஆண்டுகளை கூறினார் அப்படியென்றால் முருகர் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று கூறுங்கள் என்றேன் அவர் தெரியாமல் திருதிருவென முழித்தார் உடனே நான் கூறினேன் உங்கள் தலைவர் என்ன சொல்கிறார் தெரியுமா காடுகரை மலைகளில் ஏறி இறங்கியதால் உடல் முறுக்கேறியதால் முருகர் என்கிறார் .
முருகனை முப்பாட்டன் என்று கூறி ஹிந்து மக்களை குழப்புகிறார் அப்படி என்றால் முருகன் முருகன் தெய்வம் இல்லையா முப்பாட்டன் என்றால் யார் உங்களுக்கு எனக்கும் தாத்தா முறையல்லவா வந்துவிடுகிறது தெய்வங்களை எப்படி இவர் தாத்தா என்று கூறி சக இந்துக்களிடம் குழப்பங்களை உண்டாக்குகிறார் என்றேன் .
உடனே இன்னொரு நபர் ஆமாம் தம்பி நீங்க சொல்வது சரிதான் என்றார் உடனே நீங்களும் எதுவும் கட்சியில் இருக்கிறீர்களா என்று கேட்டேன் ஆமாம் நான் #திமுக என்று கூறினார்
ஏன் அண்ணா ராஜபாளையம் போன்ற மிக தள்ளி இருந்து பாதயாத்திரை வருகிறீர்கள் மிக அதிகமான வருடம் பாதயாத்திரை வருகிறேன் என்று கூறுகிறீர்கள் நம் குடும்பங்களில் ஒரு கஷ்டம் என்றால் முருகனை வேண்டிக் கொள்கிறோம் ஆனால் நம் முருகரை #கந்தசஷ்டிகவசத்தை திராவிட கழக பச்சோந்திகளை வைத்து கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கேவலமாக #கருப்பர்கூட்டம் என்ற குழுக்களை வைத்து மிகவும் ஆபாசமாக நம் கந்த சஷ்டி கவசத்தை பேசிய திமுகவுக்கா நீங்கள் ஓட்டு போடப் போகிறீர்கள் என்று கேட்டேன் .
அதற்கு அவர் தம்பி நான் பல வருடமாக திமுகவில் இருக்கிறேன் என்று கூறினார் அப்படி என்றால் நீங்கள் மிகவும் தவறு செய்கிறீர்கள் உங்களுக்கு நாம் கும்பிடும் முருகப்பெருமான் வேண்டுமா அல்லது நீங்கள் இருக்கும் கட்சி வேண்டுமா என்றேன் தம்பி எனக்கு முருகர் தான் முக்கியம் என்றார் ஆனால் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் நாம் வணங்கும் தெய்வங்களை கேவலப்படுத்தும் மிகவும் ஆபாசமாக சித்தரிக்கும் வன்மமாக பேசும் திமுக கூட்டங்களுக்கு நாம் வாக்களிக்கக் கூடாது அவர்களை நாம் வளர்த்து விடக்கூடாது .
நாம் இந்துக்கள் எக்காரணத்தைக் கொண்டும் நம் கடவுள் வழிபாட்டை ஏளனம் செய்பவர்களை நாம் மன்னிக்க கூடாது தயவு செய்து உங்களது மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள் நம் கடவுள்களை குறைகூறும் கூட்டங்களுக்கு போட்டு அளிக்காதீர்கள் என்றேன் .
அவர் ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டவராய் பாதி அளவுக்கு தலையை ஆட்டினார் முயற்சி செய்கிறேன் தம்பி என்றார் நிச்சயம் முயற்சி செய்யுங்கள் அண்ணா நம் இந்து மதத்திற்கு எதிரான கூட்டங்கள் எப்பொழுதும் ஜெயித்து விடவே கூடாது அது நம் வருங்கால சந்ததிக்கு மிகப்பெரும் ஆபத்தாக முடிந்துவிடும் நீங்கள் போடும் ஒரு ஓட்டு ஒருவேளை ஒரு தீயவன் ஜெயிப்பதற்காக விழக்கூடாது எக்காரணத்தைக் கொண்டும் நம் மதத்தை எந்த ஒரு கட்சிக்கும் விட்டுக்கொடுக்க கூடாது
அதுவும் நம்மளை மிகவும் இழிவாகப் பேசுகிறார்கள் பெண்களை மிகவும் கேவலப்படுத்துகிறார்கள் அப்படிப்பட்ட ஒருவருக்கு நல்ல ஆன்மீகவாதியாக தெரிகிறீர்கள் நீங்கள் ஓட்டுப் போடலாமா என்று கேட்டேன் .
அவர் அவர் ஓகே தம்பி இந்த முறை நான் திமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன் என்று கூறினார் தவிர அவருக்கும் ஒரு பகவத்கீதை கொடுத்தேன் அவரை போட்டோ எடுப்பதற்கு கேட்டபொழுது அவர் தம்பி தயவு செய்து என்னை போட்டோ எடுக்க வேண்டாம் பகவத்கீதை மட்டும் கொடுங்கள் போதும் என்றார் .
நான் முகநூலில் பதிவிட்டால் அவருக்கு தெரிந்த கட்சிகாரர் யாராவது பார்த்து அவருக்கு கொஞ்சம் தர்மசங்கடமாக ஆகிவிடும் என்று கூறினார் பரவாயில்லை ஓரளவுக்கு மனம் மாறுவார் என்று சந்தோஷப்பட்டு கொண்டேன் .
இருந்தாலும் அங்கிருந்தவர்களிடம் கொஞ்ச நேரம் பகவத் கீதையில் பகவான் கூறியதை கூறினேன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள் பகவத்கீதை பெற்றுக்கொண்ட அவர்களும் நாங்கள் தொடர்ந்து படிக்கிறோம் என்று கூறினார்கள் மிக்க மகிழ்ச்சி ஹரே கிருஷ்ணா என்று அனைவருக்கும் வணக்கம் செய்துகொண்டேன்
அவர்கள் தங்களது பாத யாத்திரையைத் தொடர்ந்து கொண்டார்கள் நாமும் நம் இந்து மதங்களுக்கு எதிரான கட்சிகளுக்கு எதிராக ஓட்டு எண்ணும் பாதயாத்திரையை தொடங்குவோம் .
மந்திரம்
🌺ஹரே கிருஷ்ண
No comments:
Post a Comment