(தெரிந்து கொள்ளலாமா?..)
தர்ம சாஸ்திரம் பகுதி −30
(ஆசிரியர் −திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)
431. வீட்டில் பெண்ணுக்கோ பிள்ளைக்கோ திருமணம் நிச்சயமாகிவிட்டால்,
அந்தத் திருமணம் நடந்தேறும் வரை, மரணம் நிகழ்ந்துள்ள வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரிக்கக்கூடாது.
432. கணவன்மனைவி, குருசிஷ்யன் ஆகியோர்கிடையே அன்றி, மற்றவர் அணிந்த மாலைகளை அணிதல்கூடாது.
433. வெள்ளிநகைகளை மட்டும் தனியே அணியாமல், தங்கத்தோடு சேர்த்தே அணிய வேண்டும்.
434. ஆட்டுக்கல், அம்மி, விளக்குமாறு ஆகியவற்றை மிதிப்பதும், தாண்டுவதும் கூடாது.
435. சுத்திகரிக்கப்பட்டதாகவே இருந்தாலும், கடல்நீரை அபிஷேக, ஆராதனைகளுக்கு உபயோகிக்கக்கூடாது.
436. பிணம் எரிகின்ற புகை நம்மைத் தீண்டக்கூடாது. அப்படித் தீண்டினால், நமது புண்ணிய பலன்கள் நம்மைவிட்டு நீங்கும்.
437. பூஜை, ஹோமம் ஆகியவற்றைச் செய்துவிட்டோ, அல்லது கோயிலிலிருந்து திரும்பியவுடனோ, நீராடக் கூடாது. அப்படிசெய்தால் பலன் கிட்டாமல் போய்விடும்.
438. ஆறு, நதிகளில் குளித்துவிட்டு வந்து தலையில் தங்கியுள்ள நீரை எடுப்பதற்காக, தலையை உதறக்கூடாது. அப்படிச்செய்தால், அந்த நீர் யார்மீது தெளிக்கிறதோ, அவருடைய பாவங்கள் நம்மை வந்தடையும்.
439. ஒரு நதியில் குளித்துக் கொண்டிருக்கும்பொழுது, வேறு நதியை ஸ்லாகித்துப் பேசக்கூடாது.
440. புண்ணிய நதிகளான கங்கை, காவிரி இவற்றில் நீராடும்பொழுது, அவரவரின் பாரம்பரிய உடைகளையே அணிய வேண்டும்.
441. பிறப்பு, இறப்பு தீட்டுகள், மாதவிடாய் தீட்டுகள் ஆகியவை முடிந்து, தீட்டு விலகுவதற்காக நீராடும்போது குளிர்நீரிலேயே நீராட வேண்டும். வெந்நீரை உபயோகிக்கக்கூடாது.
442. கடல் நீரைத் தீண்டுவது, கடல் நீராடுவது ஆகியவற்றை அமாவாசை, பௌர்ணமி தினங்களிலேயே செய்ய வேண்டும். மீதி நாட்கள் செய்வது தகாத செயலாகும்.
443. கட்டம்போட்ட வேட்டிகளையும், டிஸைன் வேட்டிகளையும் பிராமணர்கள் உபயோகிக்கக் கூடாது.
444. பெற்றோர்கள், மாமியார் மாமனார் இறந்து ஒரு வருடம் முடியும் வரை, பிள்ளை, பெண், நாட்டுப்பெண் ஆகியோர் புது நகைகளையும், புது வஸ்திரங்களையும் அணியக்கூடாது.
445. வண்ணான் வெளுத்த துணிகளை அணிந்து பூஜை, ஜபம் ஹோமங்களைச் செய்யக்கூடாது.
அவற்றை மீண்டும் நனைத்து, பின் உலரவைத்தே பயன்படுத்த வேண்டும்.
(வளரும்..)
No comments:
Post a Comment