Tuesday, February 4, 2020

வேதம் தமிழ் செய்த மாறன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

"ஆச்சார்ய அபிமாநமே உத்தாரகம்"

"கோயில் செல்வ மணவாள மாமுனிகள்' ... 

அவருடைய திருநட்சத்ர மஹோத்ஸவம் ... 

ஆறாம் திருநாள் ...டோலையில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார் ...

அருளிச்செயல்  ... திருவாய்மொழி தொடக்கம் ...

வேதம் தமிழ் செய்த மாறன் ...

நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்கள் நான்கு ...

1. திருவிருத்தம்
2. திருவாசிரியம்
3. பெரிய திருவந்தாதி
4. திருவாய்மொழி

இதில் பிராதானமான திருவாய்மொழிக்கும் அதன் வ்யாக்யானங்களுக்கும், தொன்று தொட்டு வழங்கி வரும் பெயர் "பகவத் விஷயம்"
பகவானையே விஷயமாக கொண்டுள்ளதால்  இந்நூலுக்கு, இந்த திவ்யப்ரபந்தத்திற்கு  "பகவத் விஷயம்" என்று பெயர் ...

வேதம் மற்றும் இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம்  ஸ்ரீமந்நாராயணனை மட்டும் சொல்லாமல் மற்ற  விஷயங்களை (யாகங்கள், ஹோமங்கள், கங்கா காங்கேய சம்பவாதிகள், மந்த்ரங்கள்,அரச சரித்திரங்கள் மற்ற வேறு விஷயங்கள்) சொல்லுகிறபடியால், பகவத் விஷயம் என்று பெயர் கூறலாகாது ... 

திருவாய்மொழியில் சொல்லப்படாத அர்த்தங்களே கிடையாது.  சில விஷயங்கள் சுருக்கமாகவும் (மற்ற  திவ்யப்ரபந்தங்களில் விரிவாகவும்), சில விஷயங்கள் விரிவாகவும், தெளிவாகவும், ஆழமாகவும் சொல்லப்பட்டுள்ளது ...

மற்ற 23 திவ்யப்ரபந்தங்களில், சில விஷயங்கள் சுருக்கமாகவும், சில விஷயங்கள் விரிவாகவும் சொல்லப்பட்டுள்ளது ..... 

தாமரை மலரருக்கே பங்கஜம் என்று பெயர் உண்டு.  இந்த பெயர் மற்ற மலர்களுக்கு  கிடையாது மட்டுமின்றி பொருந்தாது  ...

தாமரை மலர்க்கே பெயராகிய பங்கஜம் என்ற சொல்லை ... காரணப்பெயராக மட்டும் கொண்டால், இதற்கு மட்டுமல்லாமல் சேற்றில் முளைக்கக்கூடிய அல்லி, மற்ற மலர்களுக்கும் சொல்ல வேண்டும் ...

ஆனால், இந்த பங்கஜம் என்ற சொல் தாமரை மலருக்கே தொன்று தொட்டு வழங்கி வருவதால், இது தன்னை இடுகுறிப்பெயராக கொண்டுள்ளபடியால் வேற மலர்களுக்கு பெயராகாது ...

"இந்த பகவத் விஷயம் என்ற சொல் பங்கஜம் என்ற சொல் போலே"  ... !!!

அருளிச்செயல் கோஷ்டி ... சேவை  ... இன்று ...  திருவாய்மொழி தொடக்கம் ...

முதல் பத்து மற்றும் இரண்டாம் பத்து ....

சுருக்கமாக ...

எம்பெருமான்,

* உயர்வர உயர்நலம் உடையவன்  ...

* அவன் மயர்வர மதிநலம் அருளினன்  ...

*அவன் அயர்வரும் அமரர்கள் அதிபதி ...

*அவன் துயரறு சுடரடி தொழுதெழு ...என்மனமே ...

முதல் பத்தில், "பரத்வம்" (எம்பெருமானுடைய மேன்மை) சொல்லப்பட்டுள்ளது ... 

இரண்டாம் பத்தில்,  "காரணத்வம்" (எம்பெருமான் எல்லாவற்றிற்க்கும் காரணமாக இருக்கிறான்) சொல்லப்பட்டுள்ளது ...

இனிது திருவரங்கத்தில் நடைபெற்றது ...

"தென்னரங்கர் சீர் ... கோயில் செல்வ மணவாள மாமுனிகள் அருளுக்கு இலக்காக பெற்றோம்' ...

No comments:

Post a Comment