Tuesday, February 4, 2020

மழைக்காலக் காய்ச்சல்களும் அதன் அறிகுறிகளும்

 மழைக்காலக் காய்ச்சல்களும் அதன் அறிகுறிகளும்@@  

#காய்ச்சல்களின் காலம் பதற்றம் வேண்டாம் கவனம் போதும்!  @@ 

#அட்டென்ஷன் ப்ளீஸ்..@@      _

பொதுநல மருத்துவர் சுகுநாதன்  காய்ச்சல் என்ற ஒற்றை வார்த்தை ஊரெல்லாம் ஒரே பேச்சாக பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என்ற விதவிதமான பெயர்களும், உயிரிழப்புகள் தொடர்பாக பரவக்கூடிய தகவல்களும் பதற வைப்பதாக இருக்கிறது. ஆனால், காய்ச்சல் குறித்து எந்த அச்சமும் தேவையில்லை. சில எளிய முறைகளைப் பின்பற்றினால் போதும் என்கிற பொதுநல மருத்துவர் சுகுநாதன், அதற்கான ஆலோசனைகளை இங்கே முன் வைக்கிறார்.  

‘‘காய்ச்சல் என்பது எல்லோருக்கும் வரக்கூடியது. அது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கிறது. காய்ச்சல் வருவது ஒருவகையில் நல்லதும் கூட. ஏனெனில் உங்கள் கவனம் உங்கள் மீது தேவை என்கிற அலாரம் ஒலியை போல எச்சரிக்கையை தருகிறது காய்ச்சல். காய்ச்சலுடைய தாக்கம் அதிகமாகும்போதுதான் அது கவனிக்கப்படக் கூடியதாக இருக்கிறது. உடனடியாகப் பரிசோதித்து சிகிச்சை அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.   சாதாரணமாக ஒருவருக்கு காய்ச்சல் மூன்று நாட்களுக்கும் மேல் அதிகம் இருந்தாலோ அல்லது உடலின் வெப்பநிலை 98 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருந்தாலோ உடனே கவனிக்கப்பட வேண்டும். உடலில் பொதுவாக பல்வேறு காய்ச்சல்கள் மனிதர்களை தாக்குகிறது. காய்ச்சல் ஒரு வைரஸ் தாக்கத்தின் அறிகுறியாக இருக்கிறது.

   வைரஸ் காய்ச்சல், டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், நிஃபா வைரஸ் காய்ச்சல், டைபாய்டு, பறவைக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல்கள் இருக்கிறது. குறிப்பாக, மழைக்காலங்களைப் பொறுத்தளவு கொசுக்களால் பரவக்கூடிய காய்ச்சல்கள் அல்லது சுகாதாரமற்ற நீர், உணவால் ஏற்படக் கூடிய காய்ச்சல்கள் என இரண்டு வகைகளாக இருக்கிறது.   அதில் கொசுக்கள் மூலம் பரவக்கூடிய காய்ச்சலாக டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய், சிகா வைரஸ் நோய் போன்ற காய்ச்சல்கள் அதிகம் ஏற்படும். குறிப்பாக, மலேரியா Anopheles gambiae எனும் வகையைச் சேர்ந்த கொசுவால் பரப்பப்படுகிறது

No comments:

Post a Comment