மாங்காய் பருப்பு கடையல் -
இது மிகவும் சுவையாக இருப்பதால், தயிர் சாதம், ரசம், வெள்ளை சாதம் என அனைத்துக்கும் அட்டகாசமாக இருக்கும்.
*தேவையான பொருட்கள் :* 👇
*செய்முறை* :👇
முதலில், மாங்காய் பருப்பு செய்வதற்கு எடுத்து வைத்துள்ள மாங்காயை சுத்தம் செய்து, தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை எடுத்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
இப்போது ஊற வைத்த பருப்பு மற்றும் அதன் தண்ணீர் இரண்டையும் குக்கரில் போட்டு, நறுக்கிய மாங்காய் துண்டுகள், பச்சை மிளகாய் சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
பருப்பு நன்றாக வெந்ததும் அதில், மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
மசாலா வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்க விடவும்.
இப்போது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைக்கவும்.
அதில், நெய் சேர்த்து சூடாக்கவும். பின்னர், அதில், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்க்கவும்.
கடுகு பொரிந்ததும் சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காய தூள் கறிவேப்பிலை சேர்த்து, அந்த தாளிப்பை கலவையில் சேர்த்தால் சுவையான மாங்காய் பருப்பு தயார்.
No comments:
Post a Comment