கோவிந்தனும், வைஜுவும்-3
வாசகர்கள் ஓரளவுக்கு ஊகித்திருப்பீர்கள்.
போட்டோவில் வைஜூவின் அருகிலிருந்த அவள் கணவன் கோவிந்தன் தான்.Care taker ஐ பார்த்து கோவிந்தனை சுட்டிக்காட்டி "இது"என்று இழுத்தேன்."சார்.இது மேடத்தின் கணவர் கோவிந்தன்.Ex Air Serviceman. ரெண்டு பேரும் ஆதர்ச தம்பதி" என்றார்."கோவிந்தன் இப்போ"என்று நான் ஆரம்பித்ததும் அவர் இடைமறித்து அடுத்த இடியை இறக்கினார்.
" நேத்துதான் அவர் இறந்து சரியாக ஒரு வருஷம் ஆகிறது.எப்படி ஞாபகம் வைத்திருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா. நேற்றுதான் இந்த இல்லத்தின் Founders day" என்றார்.என் தலை சுற்றத்தொடங்கியது. விழாமலிருக்க அருகிலிருந்த சுவற்றை பிடித்துக் கொண்டேன்.
நேற்று வந்து என்னிடம் பேசிய கோவிந்தன் அணிந்திருந்த அதே ஷர்ட்டை போட்டோவிலும் அணிந்திருந்தான்.
நேற்று ட்ரெயினில் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்ததின் அர்த்தம் புரிந்தது.பக்கத்து சீட்டில் ஆள் இல்லாமலேயே, நான் மட்டும் பக்கத்து சீட்டை நோக்கி பேசிக்கொண்டிருந்ததை பார்த்து பலர் எனக்கு எனக்கு மறை கழண்டு விட்டதாக எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள். பல உண்மைகளை புரிய வைப்பதற்காக எனக்கு மட்டும் தெரியும்படி கோவிந்தன் வந்திருக்கிறான்.நம்புவது கஷ்டமாக இருந்தாலும் அதுதான் உண்மை.
"என்ன சார்.திருப்தியா? 2 BHK புக் பண்ணிவிடலாமா"என்றார் Care taker ."யோசித்து சொல்கிறேன்" என்றேன் நான்.
அடுத்த நாள் சதாப்தியில் சென்னைக்கு பயணித்தேன்.திருப்பூரில் எனக்கு அடுத்த சீட்டுக்கு ஆள் வந்தது.கொஞ்ச நேரம் ஆனதும் அவர் தன் கையை நீட்டி "I am Govindan"என்றார்.அவர் கையை குலுக்கி "நான் வாசுதேவ்" என்றேன்.கண்ணை இறுக மூடிக்கொண்டேன்.பிறகு வந்த T.T.R இடம் வேறு சீட் கிடைக்குமா என்று கேட்க நினைத்தேன்(முடிந்தது)
No comments:
Post a Comment