*சேலம் பீன்ஸ் சுக்கா*👇👇 |
இந்த வாரம் உங்கள் வீட்டில் பீன்ஸ் செய்ய திட்டமிட்டு உள்ளீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான உங்கள் பீன்ஸை சமைத்துக் கொடுக்க விரும்பு கிறீர்களா?
அப்படியானால் இந்த *சேலம் ஸ்டைல் பீன்ஸ் சுக்காவை செய்து கொடுங்கள்* .
சுக்கா தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் கிராமப் புற பகுதிகளில் இவை கிடைக்காத ஹோட்டல்கள் மற்றும் கையேந்தி உணவு கடைகளை நாம் காண்பதே மிகவும் அரிது.
இதனின் சிறப்பு என்னவென்றால் இதை செய்வதற்கு வெகு நேரம் ஆகாது
மேலும் கடினமான செய்முறையும் கிடையாது.
தேவையான பொருட்கள்
*செய்முறை* :
▢ ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டை, கிராம்பு, சீரகம், தனியா, கறிவேப்பிலை, ஏலக்காய், மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
▢ அவற்றை எடுத்து ஆறவைத்து பின் மிக்ஸியில் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
▢ பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும் . மஞ்சள் பொடி, தக்காளி பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
▢ பின்னர் நறுக்கிய பீன்ஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின் ஒரு மூடி போட்டு 10-15 நிமிடங்கள நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
▢ பீன்ஸ் வதங்கியதும் வறுத்து பொடித்த பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறி, சிறிது கொத்த மல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
▢ அவ்வளவுதான் சுவையான, ருசியான பீன்ஸ் மசாலா தயார்.
இதனை சாதம், பரோட்டா, அல்லது சப்பாத்தி கூட பரிமாறலாம்.
No comments:
Post a Comment