கல்யாண ரசம்
Ingredients
ரச பொடி
ரசம் வைக்க
தாளிக்க
Instructions
முதலில் 100 கிராம் துவரம் பருப்பை எடுத்து குக்கரில் போட்டு அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை அடுப்பில்
வைத்து. பின் தண்ணீரை வடிகட்டி விட்டு பருப்பை மசித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு நாம் வைத்துள்ள தக்காளியை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அரைத்த தக்காளி பேஸ்ட்டை கடாயில் சேர்த்து கொள்ளவும்.
அதன் பின் நாம் எடுத்து வைத்திருக்கும் புளியை 50 கிராம் தண்ணீருடன் கரைத்து புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும்.
இந்த புளி கரைசலையும் கடாயில் சேர்த்துக் கொள்ளவும்.
பின் ஒரு சிறுகட்டி வெல்லம் மற்றும் கீரிய பச்சை மிளகாய், அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக கொதிக்க வையுங்கள்.
அதன் பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தனியா, துவரம் பருப்பு, சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து எண்ணெய் இல்லாமல் அனைத்து பொருட்களும் நன்றாக வறுத்து எடுக்கவும்.
கடைசியில் கடாயில் பெருங்காயத் தூளையும் சேர்த்து நன்கு கிளறிவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி யாக்கி கொள்ளுங்கள்
பின்பு ரசம் கொதித்து முடித்ததும் அதில் நாம் மசித்து வைத்துள்ள துவரம்பருப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதன் பின் தண்ணீர் தேவைப் பட்டால் சிறிது ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
பின்பு ரசம் கொதித்து வரும் நிலையில். நம் தயார் செய்து வைத்திருக்கும் ரசப்பொடியை தூவி சிறிது மஞ்சள் பொடியும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின் மிதமான தீயில் ரசத்தை வைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய கொத்த மல்லியை தூவி விடவும்
பின் மற்றொரு கடாயில் நெய் ஊற்றி கொள்ளவும். நெய் நன்றாக உருகி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், சிறிது கரு வேப்பிலை போட்டு நன்கு தாளித்துக் கொள்ளவும்.
இந்த தாளிப்பை ரசத்தில் ஊற்றி. ரசத்தில் தேவையான அளவு உப்பு சேர்த்து ரசத்தை மிதமான தீயில் ஒரு நிமிடம் வைத்துவிட்டு இறக்கி விடவும்
அவ்வளவுதான் மிகவும் ருசியான கல்யாண ரசம் தயாராகிவிட்டது.
No comments:
Post a Comment