Sunday, June 25, 2023

வெஜிடபிள் புலாவ்

 வெஜிடபிள் புலாவ்

தேவையான பொருட்கள்:

1. பாஸ்மதி அரிசி - 2 கப்
2. உருளைக்கிழங்கு - ¼ கப்
3. கேரட் - ¼ கப்
4. பீன்ஸ் - ¼ கப்
5. பட்டாணி - ¼ கப்
6. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
7. பட்டை - 2 எண்ணம்
8. ஏலக்காய் - 2 எண்ணம்
9. பிரிஞ்சி இலை - 2 எண்ணம்
10. கிராம்பு - 2 எண்ணம்
11. அன்னாசிப்பூ - 1 எண்ணம்
12. சீரகம் - ½ தேக்கரண்டி
13. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
14. எண்ணெய் - தேவையான அளவு
15. நெய் - தேவையான அளவு
16. எலுமிச்சை - 1/2 எண்ணம்
17. உப்பு - தேவையான அளவு

செய்முறை :

1. பாசுமதி அரிசியைக் கழுவி ஊற வைத்துக் கொள்ளவும்.

2. அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, சீரகம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

3. பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

5. பின் அதில் தக்காளி சேர்த்து வதங்கியவுடன் பட்டாணி, உருளைகிழங்கு, பீன்ஸ், கேரட் சேர்த்து வதக்கவும்.

6. பின் 3 கப் நீர் சேர்த்து அதில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

7. எலுமிச்சை சாறு சேர்த்து கொதித்தவுடன் அரிசி சேர்க்கவும்.

8. பின் அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துப் பாத்திரத்தை மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்.

9. பின்னர் அதனை இறக்கி, மல்லித்தழை தூவிப் பரிமாறவும்

No comments:

Post a Comment