Friday, June 23, 2023

பாம்பே சாம்பார்

 பாம்பே சாம்பார்

 தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது) கமகமக்கும்..  தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) * பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 இன்ச் * பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது) * கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன் * வெல்லம் - 3/4 டீஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப * தண்ணீர் - 1 1/2 கப் * மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் * மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் * கொத்தமல்லி - சிறிது தாளிப்பதற்கு... * எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் * கடுகு - 1 டீஸ்பூன் * உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் * சீரகம் - 1 டீஸ்பூன் * வெந்தயம் - 1/4 டீஸ்பூன் * வரமிளகாய் - 1 * கறிவேப்பிலை - சிறிது 

 *செய்முறை* : * 

முதலில் கடலை மாவை நீரில் சேர்த்து கட்டிகள் சேராதவாறு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். 

* பின்பு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கறி வேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

* பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, வெல்லம் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும். 

ஒருவேளை தக்காளி முற்றிலும் வற்றியதாக தோன்றினால், அதில் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம். 

* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், கடலை மாவை சேர்த்து கிளறி 4-5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பாம்பே சாம்பார் தயார்.

No comments:

Post a Comment