Sunday, February 12, 2023

பச்சை மொச்சை பயிறு புளி குழம்பு

 பச்சை மொச்சை பயிறு புளி குழம்பு

தேவையானவை.                 

1.பச்சை மொச்சை பயிறு - 1 கப்
2.கத்தரிக்காய் - 100 கிராம்
3.முருங்கைக்காய் - 1
4. சின்ன வெங்காயம் - 100 கிராம்
5. தேங்காய் துருவல் - 1/4 கப்
6.புளி - பெரிய நெல்லி அளவு
7. கடுகு - 1/4 ஸ்பூன்
8.உளுந்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
9.கருவேப்பிலை - சிறிதளவு
10.சீரகம் - 1/2 ஸ்பூன்
11.வற்றல் தூள் - 1/2 ஸ்பூன்
12.மல்லிதூள் - 1 ஸ்பூன்

செய்முறை

1. பயிறை சுத்தம் செய்து உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

2. தேங்காய் துருவல், சீரகம் , சின்ன வெங்காயம் 50 கிராம் சேர்த்து அரைத்து வைக்கவும்.

3.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும்.

4. பின் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும்.

5.பின் அரைத்த மசால், வற்றல்தூள், மல்லிதூள், சேர்த்து வதக்கி ,புளி தண்ணீரை ஊற்றவும்.

6.பின் அதனுடன் வேக வைத்த பயிறை சேர்க்கவும்.

7. நன்கு  காய்கறிகள் நன்கு வெந்து எண்ணெய் பிரியவும் இறக்கவும்.                        Viji

No comments:

Post a Comment