புள்ளிமான் வேட்டை - 44.
சுப்பிரமணியனும் சரசாவும், ராஜேஸ்வரி இப்படி பேசி தாங்கள் பேச வேண்டிய விஷயத்தை சுலபமாக ஆக்கிவிட்டாள் என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார்கள்.
சரசா சுப்ரமணியனை பார்த்து "என்னண்ணா. நானே முதல்ல கேட்டூடட்டமா" என்றாள் நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே. உடனே சம்யுக்தா"நாங்க கேட்க வேண்டியதுதானே முறை. என் பொண்ணை உன் பையனுக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதமா" என்றாள். அதைக் கேட்ட சரசா. "சுநந்தா போல பொண்ணு மாட்டு பொண்ணா வாரத்துக்கு கொடுத்து வச்சிருக்கணும்" என்றாள்.
பாலகிருஷ்ணன் தன் பங்கிற்கு "எங்களுக்கு சுநந்தாவ எங்காத்து மாட்டுப் பொண்ணா ஆக்கிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை இருந்திண்டிருக்கு. சொல்றதுக்கு தான் கொஞ்சம் தயக்கமாக இருந்தது" என்றார். இதெயெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சைலஜா ஓடிச் சென்று சுநந்தாவின் கைகளை பிடித்துக் கொண்டு"மன்னியாக போறேள்.என் பிரண்டு கிட்ட எல்லாம் இனிமே நான் என் மன்னி எவ்ளோ அழகா இருக்ககா பாரூன்னு பெருமையா சொல்வேன்" என்றாள்.
அப்பொழுது தனது செல்போனை காதில் வைத்துக் கொண்ட சுப்ரமணியம். "கொஞ்ச இருங்க. எனக்கு சிக்னல் சரியா கிடைக்கலை" என்ற கூறிக்கொண்டே மாடிக்கு சென்றான். உண்மயிலேயே அவனுக்கு எதுவும் கால் வரவில்லை. அவன் சிறிது குழப்பத்தில் இருந்தான். எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தாலும் கிருஷ்ணனனுக்கு சுநந்தாவைப்பற்றிய முழு விவரமும் கூற வேண்டும்,அதுதான் ந்யாயம் என்று அவன் நினைத்தான். மாடிக்குச் சென்றதும் கிருஷ்ணன் நம்பருக்கு போன் செய்து" கிருஷ்ணா, நான் தான் மாமா பேசறேன்.நான்பேசறேன்னு யாருக்கும் தெரிய வேண்டாம். கொஞ்சம் மாடிக்கு வரயா. உன் கிட்ட முக்கியமா ஒண்ணு பேசணம்" என்றான். அடுத்த நிமிஷத்தில் கிருஷ்ணன் மாடிக்கு வந்தான். "கிருஷ்ணா. எல்லோரும் உனக்கும் சுநந்தாவுக்கும் கல்யாணம் பத்தி பேசிண்டு இருக்கா" என்றான். "ஆமாம். மாமா" என்றான் கிருஷ்ணன். "அத பத்தி உன் அவிப்ராயத்தை தெரிஞ்சுக்கலாம்னு தான் உன்ன இங்க வர சொன்னேன்.உன் மனசல இருக்கறத ஓப்பனா சொல்லலாம்" என்றான் சுப்ரமணியன். ஒரு பெண் மாதிரி சங்கோஜப்பட்ட கிருஷ்ணன்"பெரியாவளா பாத்து ஏற்பாடு பண்ணா நேக்கு ஒண்ணும் அப்ஜக்ஷன் இல்ல மாமா" என்றான். "கிருஷ்ணா. உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன். அது கேட்டதுக்கு அப்புறம் நீ உன் முடிவு சொல்லு.
உன் முடிவு என்னவா இருந்தாலும் அதை நான் ஏத்துக்கிறேன்"என்றான் சுப்ரமணியன். சுப்பிரமணியம் சொல்லியதை கேட்டு கிருஷ்ணன் என்ன பதில்சொல்லப் போகிறான் என்று தெரியவில்லை. அவன் பதில் சுப்ரமணியனுக்கு சாதகமாக இருக்குமா?சுப்ரமணியனுக்கு சொல்லும் போதே திக் திக் என்று இதயம் அடித்துக்கொண்டது.
இதை எழுதும் போது எனக்கும் அப்படித்தான் இருக்கிறது.கையும் ஒடவில்லை.காலும் ஓடவில்லை. வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்து விடுமோ?
No comments:
Post a Comment