Sunday, February 12, 2023

புள்ளிமான் வேட்டை - 26

 புள்ளிமான் வேட்டை 26.

தாரிணி தொடர்கிறாள். " தோ பார் சுநந்தா.  உங்க பாட்டி கேட்டதுக்கு எக்ஸ்பிளனேஷனுக்காக நான் இப்போ என் கதையை சொல்ல போறது இல்ல. நான் சொல்றதற்கு முதல் காரணம், இதை யார் கிட்டயாவது பகிர்ந்திண்டா என் மனம் பாரம் கொஞ்சம் குறையும். அதைவிட முக்கியமான காரணம், உன்ன போல  நல்ல குடும்பத்தில்  பொறந்திருக்க பொண்ணுங்க காலேஜ் படிக்கும்போது சகஜமா எல்லாரையும் நம்பி காதல், கத்திரிக்காய்னு  வாழ்க்கையில ஏமாந்துட கூடாது என்ற நல்லெண்ணம் தான்.

நானும் உன்ன போல கம்ப்யூட்டர் சைன்ஸ் இன்ஜினியரிங் தான் படிச்சேன். ஆறாவது செமஸ்டர் முடிஞ்சு ஏழாவது செமஸ்டர் ஆரம்பிக்கிற வரையும் நான் வீடு உண்டு காலேஜ் உண்டூன்னுதான் இருந்தேன். ஏழாவது செமஸ்டர் பாதி பண்ணிண்டு இருக்கும்போது தான் விதி விளையாட ஆரம்பிச்சது. என்ன அப்ப ஒருத்தன் தொரத்தி தொரத்தி காதலிச்சான். பாக்குறதுக்கு துரு துரூன்னு மூக்குப் முழியுமா, நண்ணா இருப்பான். நல்ல கலர் வேற. ஆனா அவன் முஸ்லீம். முதல்ல பிடி கொடுக்காத நான் கொஞ்சம் கொஞ்சமா என் மனச அவன் கிட்ட பறிகொடுத்தேன். காதல் வயப்பட்டிருந்தபோது, அவன் நான் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டினான். கல்யாணத்துக்கு  மதம் தடையா இருக்க கூடாதுன்னு என்னை ப்ரெயின் வாஷ் பண்ணான்.  நான் ரெண்டு கண்டிஷன் போட்டேன். முதல் கண்டிஷன் கல்யாணத்துக்கு அப்புறம் மதம் மாற மாட்டேன். ரெண்டாவது கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வீட்ல  எனக்கு பிடிச்ச ஸ்வாமி  சிலையையோ, படத்தையோ நான் வெச்சுண்டு கும்பிடுவேன்,என்னை தடுக்க கூடாதுன்னு சொன்னேன்"

'இதெல்லாம் சாதாரண விஷயம். நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் பழமைவாதி கிடையாதுன்னு.நீ உன் இஷ்டப்படி இருந்துக்கலாம் "அப்டீன்னான்.அவன் சொன்னத மனப்பூர்வமா நாம்பினேன்.  பாரம்பரியமா நல்லவிதமா இருக்கிற பிராமண  குடும்பம் எங்களது.

.நான்,என் தம்பி,அப்பா அம்மா மொத்த நாலு பேர். எய்த் செமஸ்டர் முடிஞ்ச உடனே அவன் என்ன கல்யாணத்துக்கு அவசரப்படுத்தினான். வேற வழி இல்லாம கல்யாணத்துக்கு ஒத்துண்டு ஒரு நாளைக்கு வீட்டை விட்டு போய் ரிஜிஸ்டர் ஆபீஸல கல்யாணம் பண்ணிண்டோம். கழுத்துல மாலையோடு வீட்டுக்கு போனேன். என்ன பார்த்த அம்மா "சண்டாளி.இப்படி பண்ணிட்டியேடி" ன்னு கத்தினா. அப்பா

" பின்பக்கத்தல இருக்கற கிணதுக்கு போய் தலையில தண்ணி ஊத்திண்டு "உன்ன கை கழுவீட்டேன்"ன்னு சொன்னார். தம்பி அப்போதுதான் பிளஸ் டூ பண்ணிண்டு இருந்தான்.அவனுக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அக்கம் பக்கத்தில் இருக்கறவா  பார்த்து நெலைமை மோசமாவதற்கு முன்னாடி நானும் என்னுடைய ஹஸ்பண்டும் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.

மெட்ராஸ்ல எனக்கு ஒரு வேலை கிடைச்சது. அவனுக்கு வேலை கிடைக்கிறது கொஞ்சம் ச்ரமமா இருந்தது.ஏன்னா அவனுக்கு நாலு அரியர்ஸ் இருந்தது. நான் வேலையில் சேந்துட்டேன். முதல் நாலு மாசம் ரொம்ப சந்தோஷமா இருந்தது. உண்மையிலேயே ஜென்டில்மேன் மாதிரி தான் பழகினான். அப்புறம் ஒரு நாளைக்கு அவன் அப்பா அம்மா ரெண்டு பேரும் வந்து சேந்தா.அவா  வந்ததுலேந்து தினம் சண்டை தான். நான் ஒரு நடராஜர் சிலையை வைச்சிண்டிருந்தேன். அவனுடைய அப்பா "ஏன்டா சைத்தானை  வீட்டில் வெச்சிருக்கா"னு  என்று சத்தம் போட்டார். ஒரு நாள் ஆபீஸ் போயிருந்தபோது, அந்த விக்ரகத்தை  உடைத்து போட்டிருந்தார். நான் மனசு உடைஞ்சு போயிட்டேன். அவனை இதை பத்தி கேட்டபோது "இத  பெருசா எடுத்துக்காத. வேற ஒன்னு வாய்ண்டா போச்சு " அப்டீன்னு சிம்பிளா சொல்லீட்டான்..

அவனது அப்பாவும் அம்மாவும் நான் ஆபீஸ் விட்டு வந்தவுடன் தினந்தோறும் அவனிடம் என்னை மதம் மாறும்படி வற்புறுத்தி சொல்ல சொன்னார்கள். முதலில் அரசல் புரசலாக சொல்ல ஆரம்பித்தவர்கள் ஒரு நாள்  என்னிடம் நேராகவே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். வீட்டில் நான் வெஜ் சமைக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த நாத்தம் வரும் போதெல்லாம் எனக்கு குமட்டி கொண்டு வரும். வேறு வழி இல்லாமல் மூன்று வேளையும் நான் வெளியில் சாப்பிட ஆரம்பித்தேன். இதையெல்லாம் என்னுடைய ஹஸ்பண்ட் கண்டு கொள்வதாக இல்லை. ஒரு வாரம் கழித்து என்னுடைய மாமனார்,அதான் அவருடைய அப்பா, இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நான் மதம் மாறவில்லை என்றால் அவனுடைய மாமா பொண்ண அவனுக்கு  நிக்காஹ். பண்ணி வச்சுடுவேன்னு பயமுறுத்தினார். நான் எதுக்கு அசைஞ்சு கொடுக்கல. அந்த நாள் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எனக்கு பீரியட்ஸ் மிஸ் ஆனாதால, அன்னைக்கு மத்தியானம்  ஆபீஸ்க்கு லீவு போட்டுட்டு லேடி டாக்டர பாக்க போயிருந்தேன். நான் பிரக்னன்ட்ன்னு  உறுதி பண்ணா டாக்டர். இந்த சந்தோஷ சமாஜாரத்த அவங்க கிட்ட சொல்லலாம் என்று வீட்டுக்கு ஓடி வந்தேன். பெட்ரூம் அன்னிக்கு நான் பாத்த காட்சி என்ன திடுக்கிட வைத்தது.எந்த பொண்ணுக்கும் இந்த நிலம வரக்கூடாது. அவன் ஒரு பொண்ணு கூட  எங்க பெட் ரூம்ல நெருக்கமா இருந்தான். அப்புறம் தான் தெரிஞ்சது அது அவனுடைய மாமா பொண்ணுன்னு. இது தெரிஞ்சதுக்கப்புறம் நான் கர்ப்பமாக இருக்கிறத அவன் கிட்ட சொல்லவே இல்ல. அவன்கிட்ட சண்டை போட்டேன். அவன் என்னை அடிச்சான்." நீ மதம் மாறினயான இங்க இருக்கலாம். அது கூட என்னுடைய இரண்டாவது வொய்பா தான். என் மாமா பொண்ணை நம்ப கல்யாணத்துக்கு  முன்னாடியே நான் நிக்கா பண்ணி இருக்கேன்" ன்னு சிரிச்சான்."என் வாழ்வை கெடுத்துட்டயேடா பாவி" ன்னு கத்தினேன்.

"உன் வாழ்வு. கெட்டுப்போச்சூன்னு நீ  நெனைச்சியானா அதுக்கு நான் மட்டுமா காரணம். நீயுந்தானே என்னை லவ் பண்ண.நீ என்ன பண்ணணமோ பண்ணிக்கோ" என்றான். என் துணிமணிகளை

 எடுத்துக்கொண்டு அந்த வீட்டிலிருந்து வந்து ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல தஞ்சம் புகுந்தேன். ரொம்ப நாள் கழிச்சு அம்மாவுக்கு போன் செஞ்சேன். அம்மா போனை எடுக்கவில்லை. "இன்னும் ரெண்டு மணிக்குள் நீ எனக்கு போன் செய்யாவிட்டால் நீ  என்ன பொணாமாத்தான் பாக்கணும்"னு அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். அரை  மணியில்  அம்மா லைனில் வந்தாள். "ஏண்டி கடங்காரி. நீ பண்ணதெல்லாம் போதாதா. எதுக்கு இப்போ போன் பண்ற" என்றாள். அவளிடம் போனில் அழுதேன். "என்ன விஷயம் சொல்லு" என்றாள். நான் ஏமாந்ததை  சொன்னேன். "அடிப்பாவி. எந்த பொண்ணுக்கும் நடக் கூடாதது நோக்கு நடந்தூட்த்தே . உனக்கு என்னடி குறை வச்சேன். இப்படி பண்ணிண்டு வந்து நிக்கறயே" என்றாள். "எனக்கு வேற வழியே இல்லம்மா. நீதான் இப்ப எனக்கு ஹெல்ப் பண்ணணும்" என்றேன். "சரி ஒரு வாரம் பொறுத்துக்கோ. அதுவரைக்கும் இது விஷயமா யார்கிட்டயும் ஒண்ணும் சொல்லாதே. உங்க அப்பா கிட்ட பேசி பார்த்து சரி கட்ட முடியுமான்னு பாக்கிறேன்"என்றாள் என் அம்மா.

No comments:

Post a Comment