Sunday, February 12, 2023

புள்ளிமான் வேட்டை - 30

 புள்ளிமான் வேட்டை 30.

 சுநந்தாவின் மனமாற்றம்

பின்னர் சுநந்தா தாரிணியிடம்" நீ ஏன் அவன் மீது கேஸ் போட்டு காம்பென்ஷேஷன் வாங்காம விட்டூட்ட. நீ எதுக்கு அவனுக்கு காம்பென்ஷேஷன் கொடுத்த" என்று கேட்டாள். அதற்கு தாரிணி"ஆமாம் நான் அப்படி செய்திருக்கலாம் தான். எனக்கு க்ளோசா தெரிஞ்சவா நிறைய பேர் கூட அப்படித்தான் அட்வைஸ் பண்ணா. நீ ஒண்ணே ஒண்ணு தெரிஞ்சுக்கணும். இந்த கண்ட்ரில எல்லா மதத்தை சேர்ந்தவங்களும் சிடிசனா இருக்கா. ஆனா சில மதத்திற்கு என்று தனிப்பட்ட சட்டம் இருக்கு.  காமன் சிவில் சட்டம் அங்கே அப்ளை ஆகாது.நான் இதுபோல கோர்ட் கேஸ்னு போயிருந்தா என் பக்கம் என்ன ஆதாரம் இருக்குன்னு துருவி துருவி கேட்டிருப்பா.கோர்ட்டுல நிக்கவச்சு நான் அந்த பாவிகிட்ட சீரழஞ்சித எல்லோர் முன்னாடியும் சொல்ல வெச்சிருப்பா.நான் ஒவ்வொரு முறையும் கோர்ட்டுல நிக்கற போது கூனி குறுகி போயிருப்பேன். நம்ம கோர்ட்டுங்க கூட சில சமயம் சிறுபான்மையருக்காக பரிதாபப்படறாங்கன்னு கூட எனக்கு தோணித்து. அதனால என் பக்கம் தீர்ப்பு வரும்ன்ற நம்பிக்கை இல்லை. அதே சமயத்தில் அவன்கிட்ட இருந்து நான் லீகலா விலகீடணம்னு ரொம்ப குறியாக இருந்தேன். அதனால்தான் வேற வழி இல்லாம அவனுக்கு நான் காம்பன்ஷேன் தர கொடுக்க வேண்டியதாயிட்டது. என்னைக்கு இந்த தேசத்துல எல்லா குடிமக்களுக்கும் ஒரே சட்டம்ன்ற நிலைமை வருதோ அன்னைக்கு தான் என்னை போல வேறு மதத்தில் இருந்தவனை கல்யாணம் பண்ணிக்கிறவளுக்கு தேவைபடும்போது ஞாயம் கிடைக்கும்" என்று முடித்தாள்.

இதைத் தொடர்ந்து தாரிணி "இதைவிட சில முக்கியமான  விஷயங்கள் இருக்கு சுநந்தா. இப்ப நிறைய பேர், குறிப்பா பெண்கள், பெண் விடுதலை பற்றி பேசிண்டிருக்கா. ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானம் என்பது அவா கருத்து. உடல் அமைப்பிலும், பொறக்கும்போதே உண்டான சில குண விசேஷங்களிலும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. என்னதான் பெண்கள் படிச்சாலும்,கை நெறய சம்பாரிச்சாலும்  எல்லா விஷயத்தலயும்  ஆண்களுக்கு சரி நிகர் ன்னு சொல்ல முடியாது. ஆண் ஒரு தப்பு பண்ணா "பாவம். தெரியாம பண்ணீட்டான்" ன்னு சொல்ற சமுதாயம் அதே போல தப்பு பண்ண ஒரு பெண்ணை ஏத்துக்கறது இல்ல. ஒரு விடோயர் கல்யாணம் பண்ணிண்டா அத சகஜமா ஏத்துக்கறோம். ஆனா அதுவே ஒரு விடோ கல்யாணம் பண்ணிண்டா இந்த உலகம் என்னமா பேசறது. இது தப்பா, தப்பா இல்லையா என்பது பத்தி ஆர்க்யுமென்ட்  இல்லை.ஆனால் நம்மள போல சில பிராமண குடும்பத்தில பொறந்த பெண்கள் நல்ல படிப்பு படிச்சிட்டு இதுபோல பொய்யான கருத்துக்களை மனசுல வச்சுண்டு ,நம்ம லிபரேடட் விமன்னு தப்பா அர்த்தம்  பண்ணிக்கறா.

இவ்வளவு படிப்பும், அறிவும், பண பலமும் இருக்கற நம்பள்ள சிலர் அதிகம் படிக்காத,இன்ட்யூஷனையும்,மனோபலத்தையும்  நம்பி வாழ்ந்த பழைய ஜெனரேஷன் லேடீசுக்கு   பத்துல ஒரு பங்கு கூட சமமாக ஆக மாட்டோம். ஆண்களை எதிர்த்தால் தான் நம்ம பலம் அப்படின்னு நெனக்றதை  காட்டிலும், ஆண்கள் கூடவே போய்,தேவைப்பட்டா  அவாள திருத்தி நல்வழிப்படுத்த முடியும்ன்னா அதாம் நம்பளோட உண்மையான பலம் . ரொம்ப போர் அடிச்சிட்டன் போல இருக்கு" என்றாள் தாரணி சிரித்துக் கொண்டே. அதற்கு சுநந்தா"இல்ல.இல்ல கீதோபதேசம் கேட்ட மாதிரி இருக்கு "என்றாள் அவளும் சிரித்துக் கொண்டே.

மாடிப் படியில் யாரோ ஏறி வரும் சத்தம் கேட்டது. அடுத்த நிமிஷத்தில் கிருஷ்ணன் "மே ஐ கம் இன்" என்று சொல்லிக்கொண்டு. ரூமுக்குள் நுழைந்தான். அவர்கள் இருவரையும் பார்த்து"என்ன ரொம்ப நேரமா பேச்சு போயிண்டு இருக்கு போல " என்றான். "எத பத்தின்னு தெரிஞ்சுக்கலாமா" என்று கேட்டான். இதற்கு சுநந்தா "லேடிஸ் எல்லாம் பேசறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கும். அது எல்லாத்தையும் ஆம்பளைங்க கிட்ட சொல்லிண்டு இருக்க முடியுமா" என்றாள் சாமர்த்யமாக.

கிருஷ்ணன்  தாரிணியிடம் "உன் ப்ரோக்ராம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா" என்று கேட்டான். உடனே தாரிணி அவனிடம் " இப்  யூ டோன்ட் மைண்ட் என்ன  மெயின் ரோடுல விட்டுட முடியுமா. நான் ஒரு பஸ் பிடிச்சு போயிடறேன் "என்றாள். உடனே சுநந்தா "நீயும் இன்னிக்கு இங்க இருந்துட்டு நாளைக்கு சாயங்காலம் கிருஷ்ணன் கூட போயேன்" என்றாள். "சாரி சுநந்தா.நேக்கு நாளைக்கு நெறைய வேலை இருக்கு. அத்தோட இல்லாம என் பொண்ணு கூட குறந்சது ஒரு மணி வீடியோவுல பேசிண்டிருப்பேன். இன்னொரு வீக்கெண்ட் வரேன்"என்று கூறி, எல்லோரும் சொல்லிக்கொண்டு கிருஷ்ணனுடன் கிளம்பினாள்.

தாரிணி சென்ற பிறகு சுநந்தா வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே ஸ்ரீரங்கத்தில்  கல்யாணத்தில் கலந்து கொண்டது, ஸ்ரீ கிருஷ்ணனின்  அறிமுகம், அதை தொடர்ந்து அவனுடன் பழகியது  இவற்றால் கொஞ்சம் மனம் மாறி இருந்த சுநந்தா தாரிணியின் கதையைக் கேட்டதும் முழுவதும் மனம் மாறினாள்.' அதல பாதாளத்தில்  விழ இருந்தோமே. நல்ல குடும்பத்தில் பிறந்தும் இப்படி ஒரு தப்பை செய்ய இருந்தோமே' என்று மனம் வருந்தினாள்.

தான் செய்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய தவறு என்று அவளுக்கு புரிந்தது. தப்பித்தவறி இதே தவறை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால்,  தானும் இன்னொரு தாரிணி ஆகிவிடுவோம் என்றும் அவளுக்கு புரிந்தது. இனிமேல் நம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.

தாரணியின் திக்கற்ற நிலையை தெரிந்த உதவி செய்ததால்,அதை வைத்து அவளுக்கு நெருக்கடி கொடுத்து,வேறு மாதிரி அவளிடம் பழகாமல், ஒரு சகோதரன் போல் கிருஷ்ணன் பழகி இருப்பது அவளுக்கு கிருஷ்ணன் மேலிருந்த மதிப்பை  பல மடங்கு கூட்டியது.அது மட்டுமில்லாமல் கிருஷ்ணன்  மேல் அவளுக்கு இருந்த மதிப்பு காதலாக கனிய ஆரம்பித்தது.முதல் வேலையாக தன் ஃபைலில் சேர்த்து வைத்திருந்த ஏ.சி.யின் காதல் கடிதங்களை சுக்கு நூறாக கிழித்து அவற்றை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு வைத்தாள். மறுநாள் யாரும் பார்ப்பதற்கு முன்னால் அந்தக் கவரில்  இருந்த பேப்பர் துண்டுகளை வாசலில் இருந்த குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்று ஞாபகப்படுத்திக் கொண்டாள். ஆனால் அடுத்த வாரத்தில் ஒரு இடி அவள் மேல் இறங்கப்போகிறதென்பது அந்த பேதைக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை.

No comments:

Post a Comment