Sunday, February 12, 2023

புள்ளிமான் வேட்டை - 29.

 புள்ளிமான் வேட்டை 29.

டைவர்ஸ் செட்டில்மெண்ட்

 தாரிணி "ஆமாம். அவனிடமிருந்து டைவர்ஸ் வாங்க வேண்டும் என்பதில்  நான் குறியாய் இருந்தேன். இதற்காக ஒரு வக்கீலை அணுகி இருந்தேன். அவர் எனக்கு ஒரு நாள் போன் செய்து"இந்த வெள்ளிக்கிழமை என் ஆபீசுக்கு வர முடியுமா. உன்னுடைய கணவரும் வருவதாக இருக்கிறார். அக்ராஸ் தி டேபிள் பேசி நாம்  முடிவு செய்துவிடலாம்" என்றார். எனக்கு தனியாக செல்ல பிடிக்கவில்லை. யாரையாவது  துணைக்கு அழைத்து   செல்ல வேண்டும் என்று யோசித்தேன். அப்போதுதான் கிருஷ்ணரிடம் என் முழுக்கதையும் கூறினேன். என்னுடன் வக்கீல் வீட்டிற்கு வர முடியுமா என்று கேட்டேன். கிருஷ்ணன் "இது என்ன தாரிணி பிரமாதம். நான் நிச்சயம் வருகிறேன்" என்று கூறினான். வெள்ளிக்கிழமை இருவரும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு வக்கீல் வீட்டுக்கு சென்றோம். நாங்கள் வக்கீல் அறையில் நுழைந்தபோது ஏற்கனவே அந்த பாவி அங்க உக்காந்திண்டி ருந்தான். என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டான். பின்பு வக்கீல் என்னிடம் பேசலானார்." தாரிணி. இவர் உனக்கு டைவர்ஸ் கொடுக்க ரெடியா இருக்கிறார். ஆனா கொஞ்சம் கண்டிஷன் போடுகிறார்" என்றார். "என்ன கண்டிஷன்?" என்று நான் கேட்டேன். "இவருக்கு தற்சமயம் வேலை இல்லையாம். அப்பா, அம்மாவை வைத்துக் கொண்டு. கஷ்டமாக இருக்கிறதாம். எனவே நீ 5 லட்சம் ரூபாய்  கொடுத்தால் டைவர்சுக்கு சம்மதம் தருவதாக சொல்கிறார்" என்றார்.எனக்கு ரத்தம் கொதித்தது. "இந்த ஆள் எனக்கு பண்ண அநீதிக்கு  இவன் தான் எனக்கு காம்பன்ஷேஷன்  தரவேண்டும்" என்று கத்தினேன். உடனே அவன்  என்ன பாத்து "இந்த கதையெல்லாம் வேண்டாம். நான் உனக்கு விவாகரத்து பேப்பர்ல கையெழுத்து போடணும்னா இந்த பணத்தை கொடுத்தாதான் முடியும். இல்லேன்னா முடியாது" என்றான்.மீண்டும் வக்கீல் அவனிடம் பேசி இரண்டு லட்சத்துக்கு அவனை  சம்மதிக்க  செய்தார். அப்போது என்னிடம் ஒரு லட்சம் தான் சேவிங்ஸ் அக்கவுண்டில் இருந்தது. இப்போது ஒரு லட்சம் தருகிறேன். ஆறு மாசம் கழித்து இன்னொரு லட்சம் தருகிறேன் என்று சொன்னேன். "அப்ப சரி. ஆறு மாசம் கழிச்சு நான் கையெழுத்து போடுகிறேன்" என்று எழுந்து விட்டான் அந்த கிராதகன்.உடனே 'எங்கிட்ட பணம் இல்லையே நான் என்ன பண்றதுன்னு" சொன்னேன்."நீ இப்ப புதுசா பிடிச்சிருக்கியே இவன் கிட்ட கேட்கலாமே" என்றான் அவன் கிருஷ்ணனை பார்த்து. எனக்கு கோவம் கோவமாக வந்தது." நீ உருப்படவே மாட்ட.பாழாப்போய்டுவே"என்று கத்தினேன். ஆனால் கிருஷ்ணன் மிகப் பொறுமையாக இருந்தான். கிருஷ்ணன் என்னிடம் "பரவாயில்லை. நான் உனக்கு இம்மீடியட்டா ஒரு லட்சம் ட்ரான்ஸ்பர் பண்றேன். நீ உங்கிட்ட இருக்கும் ஒரு லட்சத்தையும் போட்டு இவருக்கு ரெண்டு லட்சம் கொடுத்துடு"என்றான். அடுத்த 10 நிமிடங்களுக்குள் ரெண்டு லட்சம் அவனுக்கு டிரான்ஸ்பர் பண்ணினேன். அதுக்கப்புறம் அவன்  டைவர்ஸ் கொடுக்க ஒத்துக் கொள்வதாக கையெழுத்து போட்டு கொடுத்தான். பின்பு அந்த இடத்தை விட்டு கிளம்பினான். போகும்போது என்னை ஏளனமாக பார்த்தான். பின்பு கிருஷ்ணனை பார்த்து' குட் லக் பிரதர்" என்றான். வக்கீலிடம் அவரது பீசைக்கேட்ட போது நான் எதுவும் வாங்கிக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டார். இதெல்லாம் நடந்த ஆறு மாதம் கழித்து நான் மறுபடியும் சேத்து வைத்து ஒரு லட்சம் ரூபாயை  கிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தேன். கிருஷ்ணன் அதை வாங்க மறுத்து "நீயே வெச்சிக்கோ.நேக்கு தேவைப்படும் போது வாங்கிகிறேன். உன் குழந்தை பெரியவளாகி படிக்கும் போது அவளுக்கு அது பயன்படட்டும்" என்று கூறினான். அப்போதுதான்  நான் என்னை ஏமாற்றிய பாவியை போன்ற துரோகிகளையும் படைத்த அதே கடவுள்  கிருஷ்ணனைப் போன்ற உன்னதமான மனிதர்களையும் படைக்கிறார் என்று புரிந்து கொண்டேன். நாங்கள் இருவரும் வெள்ளிக்கிழமை லீவு போட்டதை  எங்கள் ஆபிசில் சிலர் எங்கள் இருவரையும் இணைத்து கதை கட்டினார்கள். நான் அதையெல்லாம் பற்றி கவலைப்படவே இல்லை. கிருஷ்ணன் ஒரு நெருப்பு. அவனுடைய குணமும், ஆன்மீகத்தில் அவனுக்கு  இருக்கும் நாட்டமும்,பிறருக்கு உதவும் பண்பும் பார்த்து  அவனை நான் ஒரு நவீன விவேகானந்தரைப் போலவே பார்க்கிறேன்.அவன் என் உடன்பிறவா சகோதரன். நான் உனக்கு அன்னிக்கி "யூ ஆர் லக்கி" ன்னு சொன்னேன் அல்லவா. அதன் காரணத்தை நீ இப்போது ஓரளவுக்கு ஊகித்திருக்கலாம். உன்னிடம் மன்றாடி கேட்டுகறேன். கிருஷ்ணனைப் போன்ற ஜென்டில்மேனை இழந்து விடாதே. இது போன்ற மனிதர்கள் அபூர்வமாகவே பிறக்கிறார்கள்" என்று முடித்தாள்.

இதைக் கேட்டுவிட்டு சுநந்தா "நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே" என்று கேட்டாள். "சொல்லு சநந்தா" என்றாள் தாரிணி. "உங்களுக்கு ஒண்ணும் வயசா ஆலயே. இன்னொரு கல்யாணம் பண்ணிண்டா என்ன" என்றாள் சுநாந்தா. இதைக் கேட்ட தாரிணி"நான் கல்யாணன்றதயே மறந்தூட்டேன். இப்ப  நான் டைவர்ஸி. அத்தோட இல்லாம குழந்தையும் இருக்கு. என்னையும், குழந்தையையும் யார் ஏத்துப்பா? என்னை ஏத்துண்டாலும் என் குழந்தையை தன் குழந்தையா பாத்துப்பபாளான்னு தெரியல. அப்படியே பாத்துக்கணும்னு நான் எதிர்பாக்கவும் கூடாது இல்லையா. அதனால் தான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்ணம்ன்ற ஆசையே விட்டுட்டேன். கிருஷ்ணன் புண்ணியத்ல கொஞ்சம் கொஞ்சம் ஆன்மீகம் பரிச்யமா இருக்கு. எனவே முழு மூச்சா, என் பொண்ணை நல்லபடியா வளக்குறதுக்கு பாடுபடுவேன்" என்று சொன்னாள் தாரிணி. இது கேட்ட சுநந்தா"யூ ஆர் எ வெரி பிரேவ் லேடி" என்றாள் .

No comments:

Post a Comment