புள்ளிமான் வேட்டை -36
அன்று சுமார் 6:30 மணிக்கு சுநந்தா வீட்டிற்கு திரும்பினாள். ஹாலில் உட்கார்ந்துகொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தான் சுப்பிரமணியன். சுநந்தா நேரே ரூமுக்கு போய் அவளுடைய காலேஜ் பேக்கை வைத்துவிட்டு,முகம் கழுவிக் கொண்டு வந்தாள். "அம்மா. காபி கொடு" என்று குரல் கொடுத்தாள்.பிறகு "என்னப்பா.இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட்" என்றாள். அதற்குள் சுப்ரமணியன் தன் வாயின் மேல் ஒரு விரலை வைத்து "அம்மாவுக்கு விஷயம் தெரிய வேண்டாம்" என்று ஜாடைகாட்டினான். காபி வந்தது. சம்யுக்தா அவர்கள் இருவரையும் பார்த்து என்ன ரெண்டு பேரும் ரகசியம் பேசற மாறி இருக்கு" என்றாள். சுப்ரமணியன் சிரித்துக் கொண்டே "எங்களுக்குள்ள என்னம்மா ரகசியம் இருக்க முடியும். உனக்கு எப்டி இப்டியெல்லாம் தோணறது"என்றான்.
சம்யுக்தா பதிலுக்கு "என்னமோ ரகசியம் இருக்கு. சொல்ல வேணாம்னு பாக்கறேள். ஒரு நாளைக்கு தானே தெரிஞ்சூட போறது" என்று சொல்லிவிட்டு சுநந்தா குடித்த காப்பி டம்ளரை வாங்கிக்கொண்டு சமையலறை பக்கம் சென்றாள். சுப்பிரமணியம் சுநந்தாவை கூட்டிக் கொண்டு அவளது அறைக்குச் சென்றார்.
பிறகு சுநந்தா சுப்பிரமணியனை பார்த்து "எப்படிப்பா திடீர்னு போலீஸ் அரேஞ்ச் பண்ணேங்க" என்றாள். அதற்கு சுப்பிரமணியன் "வந்தது முருகானந்தம் சார். டாக்டர் ராஜனுடைய ஷட்டகர். உங்க ஏரியாவுக்கு அவர்தான் எஸ் பி" என்று கூறினான். அதன் பிறகு. அவன் அவளிடம் "நாங்க வந்ததுக்கப்புறம் அவன் உங்கிட்ட வந்து ஏதாவது பேசினானா" எனக்கேட்டான். அதற்கு சுநந்தா "இல்லப்பா .பேசல. ரொம்ப பயந்த மாதிரி இருந்தான்" என்றாள்.
பின்பு சுப்ரமணியன் சுநந்தாவிடம் "இதோ பாருமா. ரெண்டு கையும் தட்டினால் தான் ஓசை வரும். ஆரம்பத்துல நீ அவனக்கு ரெஸ்பாண்ட் பண்ணி இல்லேன்னா விஷயம் இவ்வளவு தூரம் விபரீதமாயிருக்காதுன்னு நெனைக்கிறேன்" என்றான்.இதற்கு பதில் அளித்து சுநந்தா "ஆமாம்பா.நான் பண்ணினது பெரிய பிளண்டர். அப்படி செஞ்சிருக்க கூடாது. என்ன மன்னிச்சுடுங்க அப்பா"என்று சொல்லி அவன் கைககளை பிடித்துக் கொண்டாள். அவள் கண்ணில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் அவன் கையை நனைத்தது. அவளது முதுகை ஆதரவாக தடவி கொடுத்த சுப்பிரமணியன்" இதையெல்லாம் மறந்துடூமா. இனிமே இது போல் எல்லாம் எதலயும் மாட்டிக்காத" என்றான். அதற்கு சுநந்தா"இப்ப எனக்கு எல்லாமே புரிஞ்சு போச்சுப்பா. இதெல்லாம் ஒரு பகல் கனவா நெனைச்சு மறந்துடறேன். நீங்களா பார்த்து யாருக்கு கழுத்தை நீட்டணும்னு சொல்றேளோ அவனுக்கே கழுத்த நீட்றேன்" என்றாள். அதற்கு சுப்பிரமணியம் சிரித்துக் கொண்டே "அனேகமாக நான் விரும்பற பையன் உனக்கு பிடிச்சவனாவும் அமயணம்னு கடவுளை வேண்டிகிறேன்" என்றார். இதைக் கேட்ட சுநந்தா மனதுக்குள்"கடவுளே.
அந்தப் பையன் கிருஷ்ணனாக இருக்கக் கூடாதா" என்று நினைத்துக் கொண்டாள். அப்பொழுது திடீரென்று அந்த அறைக்குள் நுழைந்த சம்யுத்தா சுநந்தாவை பார்த்து" நீ என்னமோ கண் கலங்கற. பிளண்டர் பண்ணீட்டேன்னு வேற சொல்ற.என்ன விஷயம்ன்னு ரெண்டு பேரும்சொல்ல மாட்டேன்றேளே" என்றாள். அதற்கு சுப்ரமணியன். "பைத்தியம். உன்கிட்ட சொல்றபடி ஒண்ணும் இல்ல. லேப்ல ஏதோ எக்யூப்மெண்டை உடச்சூட்டாளாம். அதுக்கு பைன் கட்டணம் போல இருக்கு. அதைத்தான் பிளண்டர்ன்னு சொல்றா"என்றான் சுப்பரமணியன். "அவ்வளவுதானே.வேறு ஒண்ணும் இல்லையே.
நான் என்னவோ ஏதுன்னு பயந்தூட்டேன்" என்றாள் சம்யுக்தா. "வேற என்ன இருக்க முடியும் சொல்லு" என்றான் சுப்பிரமணியன். பின்னர் சுநந்தாவிடம் "எச்.ஓ.டி கிட்ட சொல்லுமா. இன்னும் ரெண்டு நாள் அந்த பைனை கட்டிடறேன்னு" என்றான். சுநந்தாவும் நல்ல பெண் மாதிரி "சரிப்பா.நான் நாளைக்கே சொல்லிடறேன்" என்றாள். சுப்ரமணியனும் சம்யுக்த்தாவும் மாடியிலிருந்து கீழே இறங்கினார்கள்.
No comments:
Post a Comment