புள்ளிமான் வேட்டை -40
கிருஷ்ணனுடைய லெக்சர் முடிந்ததும் எல்லோரும் லெக்ச்சர் ரூமை விட்டு வெளியே வந்தார்கள். பலரும் கிருஷ்ணனை பாராட்டினார்கள். அப்போது கிருஷ்ணன் சுநந்தாவைப் பார்த்து "நான் உன்னை கிண்டில விட்டூடட்டுமா" என்று கேட்டான். அவள் "சரி" என்று சொன்னபோது தாரிணி "கிருஷ்ணன் ஒண்ணு பண்ணலாமா" என்றாள். "என்ன தாரிணி" என்றான் கிருஷ்ணன். "நம்ம மூணு பேரும் சேர்ந்து ராத்திரி ஏன் டின்னருக்கு போகக்கூடாது "என்றாள். அதுக்கு கிருஷ்ணன்"நேக்கு ஒண்ணும் அப்ஜக்ஷன் கிடையாது. ஆனா சுநந்தாவுக்கு லேட்டா போயிடுமே" என்றான். "நான் அத பத்தி யோசிச்சேன். சுநந்தா ஒண்ணு பண்ணட்டும்.டின்னர் முடிஞ்சதும் ராத்திரி என் கூட வந்து எங்க ஹாஸ்டல்ல படுத்துகட்டம். நாளைக்கு எப்படியா இருந்தாலும் நீ அவாத்துக்கு போகப் போற. இவள நீ என் ஹாஸ்டல்ல வந்து பிக்கப் பண்ணிண்டு அப்படியே போயிடகூடாது" என்றாள். "நீ என்ன சொல்ற சுநந்தா" என்றாள் தாரிணி. "அப்பாவுக்கு போன் பண்ணி கேட்கிறேன்.அப்பா சரின்னா நேக்கு ஓ.கே" என்றாள் சுநந்தா. பின்பு அவள் சுப்ரமணியனுக்கு போன் செய்தாள். "அப்பா.தாரிணியும், கிருஷ்ணனும் என்ன நைட் டின்னருக்கு இருக்க சொல்றா. டின்னர் முடிஞ்சி லேட்டாகும்னறதால தாரிணி கூட அவ ரூம்ல நான் தங்கிடுவேன். நாளைக்கு காலைல கிருஷ்ணன் கூட வந்துடுடட்டமா" என்றாள்ஒரு நிமிடம் யோசித்த சுப்ரமணியன் "சரிம்மா ஜாக்கிரதை. நான் அம்மா கிட்ட சொல்லிடறேன்.நீ கொஞ்சம் போன கிருஷ்ணன் கிட்ட கொடு" என்றான்.
பின்பு கிருஷ்ணனிடம் பேசிய சுப்ரமணியன் "கிருஷ்ணா.இதுபோல சுநந்தா நைட்ல எங்கேயும் வெளியில் தங்கினதே இல்லை. இதான் முதல் தடவை. ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே" என்றான். கிருஷ்ணன்"மாமா. நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் நான் பாத்துக்கறேன்" என்றான்.
கிருஷ்ணன் பைக்கில் வந்திருப்பதால் மூன்று பேரும் சேர்ந்து எப்படி ஹோட்டலுக்கு போவது எந்த பிரச்சனை வந்தது.
ஆட்டோ எடுத்து போகலாம் என்று தீர்மானமான போது அருகில் வந்த ஹரிஷ் "என்ன பிராப்ளம்" என்றான். கிருஷ்ணன் விஷயத்தை சொன்னதும்"நான் இன்னைக்கு கார்ல தான் வந்து இருக்கேன். நான் உங்கள டிராப் பண்ணீட்டு வீட்டுக்கு போறேன்" என்றான். அதைப் கேட்ட கிருஷ்ணன்"உனக்கு ஏன்டா வீண் ச்ரமம்" என்றான்.ஹரீஷ்" தோ பார் கிருஷ்ணா.
நான் வெஸ்ட் மாம்பலத்ல தங்கி இருக்கேன்னு உனக்கு தெரியும். போற வழியில உங்க ட்ராப் பண்ணிட்டு போயிடுவேன். இதுல ஒண்ணும் ச்ரமம் இருக்கிறதா எனக்கு தெரியல" என்றான். "சரி. அப்படியே பண்ணலாம்" என்றான் கிருஷ்ணன். அப்புறம் திடீரென்று நினைத்துக் கொண்டவனாக" ஹரீஷ். நீ எங்க கூட டின்னருக்கு ஏன் ஜாயின் பண்ணகூடாது" என்றான்." நீ தான் கூப்பிடற. தாரிணி வாயை திறக்கலயே" என்றான் ஹரிஷ். உடனே தாரிணி" எனக்கு ஒண்ணும் அப்ஜக்ஷன் இல்லப்பா" என்றதும் ஹரிஷ் அவன் அம்மாவுக்கு போன் செய்தான். "அம்மா ராத்திரி வெளில சாப்டூட்டு லேட்டா வருவேன். நீ வீட்டை உள் பக்கமா பூட்டிக்கோ. நான் வாசல்ல வந்து போன் பண்றேன். அப்புறமா தறக்கலாம்" என்றான். நால்வரும் அடையார் காந்தி நகரில் இருந்த சங்கீதா ஹோட்டலுக்கு சென்றார்கள். கிருஷ்ணனும், ஹரிஷும் ஒரு புறமும், தாரிணி,சுநந்தா மற்றொரு புறமும். அமர்ந்தார்கள். முதலில் சூப்புக்கு ஆர்டர் செய்த பின் நான்,சப்ஜி போன்ற நார்த் இண்டியன் டிஷ்களை ஆர்டர் செய்தார்கள். கிருஷ்ணன் ஹரீஷை பார்த்து" அம்மா தனியா இருப்பாளா" என்றான். அதற்கு ஹரிஷ். "கிட்டத்தட்ட அம்மா ஆறு வருஷமா தனியாக தான் இருக்கா. அம்மா ஸ்கூல்ல டீச்சரா இருந்தா. அப்பா போய் எட்டு வருஷம் ஆயிடுத்து. அதுக்கப்புறம் அம்மா ரெண்டு வருஷம் டீச்சரா கண்டினியூ பண்ணா. இப்ப ரிட்டயர் ஆனதுக்கப்புறம் வீட்லதான் இருக்கா.
நான் கூட அம்மாகிட்ட டியூஷன் எடுக்கலாமேன்னு சொல்லி பாத்தேன். அப்பா போனதுக்கப்புறம் அவளுக்கு ஒண்ணத்த லயும் இன்ட்ரெஸ்ட் இல்லாம போய்டுத்து. இப்போ ஒரு வருஷமா "தனியா இருக்கேன்டா ஹரீஷ். சீக்கிரம் கல்யாணம் பண்ணிகோடா. எனக்கும் ஒரு துணை கிடைச்சமாறி இருக்கும்ன்றா. நானும் கல்யாணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கேன்"என்றான் ஹரீஷ்." ஏன்டா ஹரீஷ்" என்றான் கிருஷ்ணன்.
அதற்கு ஹரிஷ்"எனக்கு அம்மான்னா உயிர். அவளுக்கு என் மேல கொள்ள ஆசை. புதுசா வரவ எங்களுக்குள்ள விரிச்சல் ஏற்படுத்தீடுவாளோன்னு பயமா இருக்கு. அம்மாவும் ,என்னையும் புரிஞ்சிக்கிற மாதிரி நல்ல பொண்ணா கெடைக்கணுமே" என்றான் .அவன் இப்படி கூறும்போது ஒரு செகண்ட் தன்னை பார்த்ததாக நினைத்தாள் தாரிணி.
தொண்டையை கனைத்துக்கொண்ட தாரிணி"ஹரிஷ். உனக்கு வரவ உன்னையும் உங்க அம்மாவையும் பிரிச்சிடுவான்னு நீ எப்படி நெனைக்கிற. நல்ல பொண்ணு கிடைக்காமலா போயிடுவா" என்றாள். உடனே ஹரீஷ் சிரித்துக் கொண்டே"அப்படி ஏதாவது ஒரு பொண்ணு கிடைச்சா சொல்லேன்" என்றான். பதிலுக்கு சிரித்த
தாரிணி"நான் சாப்ட்வேர் லைன்ல இருக்கேம்ப்பா. என்ன மேரேஜ் புரோக்கரா மாத்திடாதே" என்றாள். இதைக் கேட்ட ஹரிஷ்,கிருஷ்ணன்,சுநந்தா ஆகியோர் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
No comments:
Post a Comment