புள்ளிமான் வேட்டை -37
சுநந்தா அந்த வியாழக்கிழமை மதியம், தன் பிரச்சனைக்கு ஒரு மாதிரி விடிவு கிடைத்த குஷியில் இருந்தாள். கிருஷ்ணனை கூப்பிட்டு பேசினால் தேவலாம் போல இருந்தது.அவன் நெம்பரை டயல் செய்தாள். "ஹாய்.சுநந்தா.எப்படி இருக்கே" என்றான் கிருஷ்ணன்.பதிலுக்கு அவள்"நான் நண்ணா இருக்கேன்.நீங்க ஞாயித்துக்கிழமை போனதக்கப்புறம் போனே பண்ணலயே"
என்றாள்."ஹலோ.யார் பேசர்து"என்றான் அவன்."நான்தா சுநந்தா பேசறேன். தீடீர்ன்னு என்ன சந்தேகம்" என்றாள்."வேற ஒண்ணுமில்லை.வா போ ன்னவ இப்போ மரியாதை கூடிப்போய் வாங்க போங்கேன்றயே.
அதனாலதான் சந்தேகம்" என்றான்."பாட்டி கோச்சிண்டா.நம்பளவுட வயசுல பெரியவாளை அப்டி கூப்டறது தப்பாம்.அத்தோட இல்லாமா..."என்று நிறுத்தி நாக்கை கடித்துக்கொண்டாள்.
கிருஷ்ணன் உடனடியாக "அத்தோட இல்லாமன்னு சொன்னயே அது என்ன" என்றான்."ஒண்ணுமில்லை "என்ற சுநந்தா
" நாளைக்கு வெள்ளிக்கிழமை.உங்க தமிழ் லெக்சர் ப்ரோக்ராம் உண்டா" என் றாள்."தாராளமா உண்டு.மகா கவி பாரதியைப்பத்தி ஒரு புது கோணத்த படிச்சேன்.அது பத்தி பேசப்போறேன்.ஆமாம் நீ வரயா என்றான்"."வரணமா, வேண்டாமா"என்று கேட்டாள் சுநந்தா."வந்தயானா சந்தோஷப்படுவேன்" என்றான் அவன்."அப்போ சரி வரேன்"என்றவள்"உங்களால நாலு மணிக்கு காலேஜ்லேந்து பிக்பண்ணிக்க முடியுமா"
என்று கேட்டாள்."ஷுர்" என்ற கிருஷ்ணன் "இன்னும் ரெண்டு நிமஷத்ல ப்ராஜெக்ட் ரிவ்யூ மீட்டீங் இருக்கு.போனை வைச்சூட்றேன்" என்றான்.
வெள்ளிக்கிழமை காலை காலேஜுக்கு போக டிரஸ் பண்ண ஆரம்பித்த சுநந்தா, போன தீபாவளிக்கு வாங்கின எம்.எஸ் ப்ளூ கலர் மைசூர் சில்க் சேரியையும்,மேட்சிங் ப்ளவ்சையும் உடுத்திக்கொண்டாள். தலையை படியப்படிய வாரி,முதல் நாள் பிரிட்ஜில் பத்திரப்படுத்தி வைத்திருந்த --------மல்லி பூவை கூந்தலில் வைத்துக் கொண்டாள்"
(-------- என்ற இடத்தில். யாருக்கும் தெரியாமல் 'ஜாதி' என்று போட்டுக் கொள்ளவும். ஜாதியை சொன்னால் சட்டவிரோதம் என்கிறார்கள்.எனக்கேன் வம்பு) பின்பு நெற்றியில் குங்கும ஸ்டிக்கர் பொட்டு இட்டுக்கொண்டு, சம்யுக்தா. ஃபங்ஷனுக்கு செல்லும்பொழுது புடவையில் தடவிக் கொள்ளும் 777 பிராண்ட் ரோலான் அத்தர் பெர்பியூமை. புடவையிலும், ஹேங்கியிலும் சிறிது தடவிக் கொண்டாள். இவளது அலங்காரத்தை பார்த்த சம்யுக்தா"என்னடி அலங்காரம் ஏகத்துக்கு இருக்கு. என் கண்ணே பட்டுடும் போல இருக்கே. என்ன காலேஜ்ல இன்னிக்கு எதாவது போட்டோ செஷனா"என்று கேட்டாள். அதற்கு
சுனந்தா"அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா. பார் எ சேஞ்ச், இன்னிக்கு இப்படி டிரஸ் பண்ணிண்டு இருக்கேன்"என்றாள். அப்போது அங்கே வந்த பாட்டி ராஜேஸ்வரி "யாருடி இது சுநந்தா வா. என்ன அலங்காரம் பலமா இருக்கு. பொம்னாட்டி குழந்தைகள் எல்லாம் இப்படித்தான் இருக்கணும்'" என்றாள். பின்பு மாட்டுப் பெண் சம்யுக்தாவை பார்த்து"சாயங்காலம் குழந்தை காலேஜ்லேந்து வந்த உடனே சுத்தி போட்டூடு" என்றாள்.
அப்போது அங்கு வந்த சுப்பிரமணியன் அவளைப் பார்த்ததும் கொஞ்சம் ஆச்சரியம் அடைந்தான். அவனைப் பார்த்த சுநந்தா. " அப்பா. இன்னிக்கு சாயங்காலம். கிருஷ்ணன் கொடுக்கற லெக்சர் இருக்கு. அதுக்கு வர சொல்லியிருக்கார். நான் போயிட்டு ராத்திரி வந்துடுவேன்" என்றாள். இதைக் கேட்ட சுப்பிரமணியத்தின் காதில் "சொல்லி இருக்கார்"என்பதில் உள்ள "இருக்கார்",தேனாக பாய்ந்தது. "சரிம்மா. ஜாக்கிரதையா போயிட்டு வா" என்று சுப்பிரமணியன்.
சுனந்தாவுக்கு காலேஜில் இருப்பே கொள்ளவில்லை. எப்படா நாலு மணி வரும் என்று பார்த்திருந்தாள். நாலு ஐந்துக்கு கிருஷ்ணன் அவளை கம்ப்யூட்டர் சயின்ஸ் பில்டிங் அருகே வந்து பிக்கப் செய்து கொண்டான். "சாரி. கொஞ்சம் லேட்டா ஆயிடுத்து" என்றான். "பரவாயில்லை. அதனால் என்ன" என்றாள் சுநந்தா. "எங்க ஆபீஸ்ல அஞ்சரை மணிக்கு இருந்தா போதும். போற வழியில் எங்கேயாவது காப்பி சாப்டூட்டு போலாமா" என்றான். அதற்கு சுனந்தா"நிச்சயம்" என்றாள். ஓ.எம்.ஆர் இல் இருந்த சரவணபவன் வாசலில் கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான். இருவரும் உள்ளே சென்று அமர்ந்தார்கள். "என்ன சாப்பிடற" என்றான் கிருஷ்ணன் சுநந்தாவை பார்த்து.
" நீங்க சொல்லுங்க" என்றாள் அவள். "இது உனக்கு செயற்கையா படலையா" என்றான் கிருஷ்ணன். "எது" என்றாள் சுநந்தா. "நீங்கன்னு சொல்றயே அதான்" என்றான் கிருஷ்ணன்."இனிமே நான் அப்படித்தான் பழகிக்க போறேன்" என்றாள் சுநந்தா. அப்பொழுது வெய்ட்டர் அவர்கள் அருகில் வர, கிருஷ்ணன் அவளைப் பார்த்து "உருளைக்கிழங்கு போண்டா இங்க நண்ணா இருக்கும். பரவாயில்லையா" "உங்களுக்கு ஓகேன்னா நேக்கும் ஓ.கே தான்" என்றாள் அவள். "ரெண்டு பிளேட் உருளைக்கிழங்கு போண்டா. அப்புறம் ரெண்டு காபி. அதல ஒண்ணு ஸ்ட்ராங்" என்றான் .சுநந்தா வெயிட்டரைப் பார்த்து "ரெண்டு காபியும் ஸ்ட்ராங்கா கொடுத்துடுங்கோ" என்றாள்.
ஹோட்டலில் சாப்பிட வந்திருந்தவர்கள் இவர்கள் இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போதுதான் சுநந்தா, கிருஷ்ணனும் ப்ளூ கலர் முழுக்கை சட்டை அணிந்து வந்திருந்ததை பார்த்தாள்.
கிருஷ்ணன் சுநந்தாவை பார்த்து"ஆமாம் என்ன பெர்ப்யூம் இது. வாசன ஊர தூக்கறது"என்றான். "ஏன் வாசனை ஒரு மாதிரி இருக்கோ" என்றாள். " இல்ல. இல்ல. ரொம்ப நண்ணா இருக்கு"என்றான்.
"அம்மா யூஸ் பண்ற பர்ப்யூம் இது"என்றாள் அவள். பின்பு உருளைக்கிழங்கு போண்டாவை சாப்பிட்டுவிட்டு, காபியும் குடித்து முடித்தார்கள். பில்லுக்கு உண்டான பணத்தை கொடுத்த கிருஷ்ணன் "போலாமா" என்றான். கை அலம்பிக் கொண்டு விட்டு இருவரும் ஹோட்டலை விட்டு வெளியில் வர, கிடு கிடுவென்று ஓடி வந்த வெயிட்டர்"சார்.உங்க ஒய்ப் கர்ச்ப்பை உட்டூட்டு வந்துட்டாங்க" என்று சொல்லி ஹேங்கியை கொடுத்தார். ஒரு நிமிஷம் கிருஷ்ணனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆனால் சுநந்தா வெயிட்டர் சொன்னதை மனிதில் அசை போட்டு ரசித்தாள்.
No comments:
Post a Comment