Wednesday, October 31, 2018

இமயத்தின் மடியில் பகுதி 11

venkatesan v: 😎இமயத்தின் மடியில் ..பகுதி 11 கேதார் முடிந்து பத்ரி நோக்கி....கேதார் நாத் கோயிலை விட்டு வெளி வருகையில் நேரம் 2 மணி.காண்டினில் சாப்பிட வேண்டும்.பின் குதிரை கிடைத்து விரைந்து  இரவுக்குள் ராம்பூர் சென்று லக்கேஜ் எடுத்து பத்ரி போகும் வழியில் வேறு ஊரில் ரூம் போட வேண்டும்.வழியில் ஒரு குதிரைக்காரன் தானே வலிய வந்து குதிரை வேண்டுமா எனக்கேட்டான் .கும்பிடப்போன  தெய்வமே என நினைத்தாலும் எவ்வளவு ? என்றேன்.க்யாரா சௌ(1100)  என்றான்.எக்ஸ்ட்ரா? வேண்டாம் என்றி கூறி தன் இரு அடையாள அட்டைகளை தந்து கோடா காம்ப் வரச்சொன்னான்.லஞ்ச் சாப்பிட்டு தான் வர முடியும் என்றேன்.சரி என்றான்.காண்டினில் சாதம் சப்பாத்தி தாலி 150/.- சாப்பிடும் வரை எங்களை ( அவன் சாப்பிட மறுத்து விட்டான்) கவனித்து கோடா காம்ப் வரை கூடவே வந்தான். 2200/ பணத்தையும் தன்,எங்கள் அடையாள அட்டைகளையும் வாங்கிக்கொண்டு ரசீது வாங்குவதாக சொல்லி கவுண்டர் நோக்கிச் சென்றான்.
மனைவிஅவனை பின் தொடர கண்ஜாடை காட்ட வழியில் குதிரையின் சிறு நீர்,சாணம் ,இரவு மழை ச்சேறு மூன்றும் சேர்ந்து முழங்கால் அளவு சகதி.எல்லாம் வருவான் என உள்ளூர டென்ஷனில் நான் அவன் தலையை குறிவைக்க ,தலை வேறு திசை நோக்கி நகர, மனைவி பணத்தையும் ஏமாந்து விட்டு என்னை நடத்தி அழைத்து செல்ல போகிறீர்கள்.நீங்களும்உங்கள் சமர்த்தும்!! அவனையும் ஐடியையும் ஒரு போட்டோ எடுக்க துப்பில்லை ( அவளிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறதே) என்றாள்.
வேறு திசையிலிருந்து மற்றொருவனுடனும் இரண்டு குதிரைகளுடனும் அவன் வந்து எங்கள் ஐடியை தந்து ரசீதை காண்பித்தான்.எதற்கெடுத்தாலும் சந்தேகமாடி? என்றேன் சங்கர் சிமெண்ட் விளம்பர பாணியில்🤑.என்னை ஒரு வெள்ளை குதிரையின் சேணத்தில் ஒரு காலை வைத்து மறுகாலை தூக்கி உட்கார வைத்தான்.
 மழை வருமென ப்ளாஸ்டிக் கோட் போடச் சொல்லி கைகளை முன் வளையத்தில் பிடிக்கச் சொல்லி குதிரை ட்ரைவிங் பற்றி இரண்டு பாடங்கள் உபதேசித்தான்.பள்ளத்தில் போகும் போது முன்னாலும் மேட்டில் ஏறுகையில் பின்னாலும் சாய வேண்டும்.
ஃபூ இவ்வளவுதானா குதிரை சவாரி என நான் வருடக்கணக்கில் சைக்கிள் ஓட்ட முயன்றது நினைவில் வந்தது.மனைவிக்கும் இதே பாடம்.என் குதிரை முன்னால் .மனைவி குதிரை பின் தொடர ஊர்வலம் ஆரம்பம்.சமவெளி முடிந்து பள்ளத்தில் படிகளில் பள்ளங்களில் குளம்புகளை வைக்கும் போது இதயம் வாய்க்கு வந்தது.சேற்றில் அதன் கால்கள் புதைய  குடல் புரண்டது.
இந்த குழப்பத்தில் சாய்வது பற்றிய பாலபாடத்தை தப்பாக செய்ய மனைவி பின்னாலிருந்து கத்த அவளும் வருவது அப்போது தான் நினைவு வந்தது.வேகமாக நடக்கும் போது குலுக்கலில் அதன் எலும்போ சேணமோ மோதி பயங்கர வலி.கையை பிடித்த கம்பியால் வேறு வலி.அதில் கர்ச்சீப்பை சுற்றிக்கொள் கிறேன்.நாக்கு உலர குதிரையை நிறுத்தச் சொல்லி  தண்ணீர் பாட்டிலில் குடித்து பேகில் செருகிக் கொள்கிறேன்.குதிரை ஒரே வேகத்தில் மேடு பள்ளம் என பாய்ந்து செல்கிறது.ஒரு இடத்தில் குதிரையின் தண்ணீர் தொட்டி.குதிரையை தண்ணீர் குடிக்க விட்டு அவன் சிறு நீர் கழிக்க செல்கிறான்.குதிரை வேகமாக தண்ணீர் குடித்து விட்டு வேகமாக கீழ் நோக்கி பாய பின்னால் வரும் மனைவியின் குதிரைக்காரன் ஓரம் கட்ட சொல்லி கத்த எனக்கு யாரையும் ஓரம் கட்டி பழக்கமில்லை என கண்களை இறுக மூட  நான் எந்த கயிறையாவது தப்பாக இழுத்து குதிரை கோபம் வந்து குப்புறத்தள்ளுவதாய் நினைப்பு. அதிலும் பக்கச்சுவர் இல்லாத 11000 அடி உயர மலையில் குதிரை கோபத்தில் என்னைத் தள்ளினாலோ அல்லது தவறிக்கால் வைத்து இருவரும் உருண்டு அடியாழத்தில் செல்லும் கங்கையில் விழ ரிஷிக்கேஷ்,ஹரித்வார் வழியாக எங்கள் எலும்புகள் காசி வரை செல்லுமா? அதே குதிரையில்(?) நான் சுவர்க்கம் புகுவேனா? என என் சிந்தனை குதிரை வேகத்தில் ஓட  மனைவி கத்த குதிரை வளைந்து வளைந்து இறங்கியது.குதிரைக்காரன் ஓடிவந்து குதிரை பொறுப்பை ஏற்றபின் தான் உயிர் திரும்பியது.
இப்போது வழியில் ஏறி இறங்கும் அனைவரையும் அவன் ஏதோ மொழியில் திட்டி நகரச்சொல்ல நகரமுடியாத முதியவர்களை குதிரை உதைத்துத்தள்ள அவர்கள் கீழே விழுந்து விட்ட சாபம் குதிரைக்கா?, குதிரைக்காரனுக்கா? எனக்கா?. வாய் மூடி மௌனியாகி அமர்ந்திருந்தேன்.
தற்போது லேசாக ஆரம்பித்த மழை பெருக்கெடுத்து ஆலங்கட்டி யுடன் கொட்ட ஆரம்பிக்க ஒதுங்க இடம் ஏது?. நடப்பது நடக்கட்டும் என மனைவியிடமிருந்து ஏதேனும் ரியாக்‌ஷன் வருகிறதா என கவனித்தேன் .அவளும் பேஸ்த்தடித்து( என் மனைவியை அடக்கிய குதிரையே நீ வாழ்க) அமர்ந்திருந்தாள்.குதிரை சிறுநீர்க்கழிக்க என்று சில இடங்கள் அங்கு நிறுத்தியதும் அது தானாக சிறு நீர்க்கழிக்கிறது.7,8 கிமீ சென்றதும் குதிரைக்கு ஓய்வாம் .நிறுத்தி எங்களை இறக்கி தேநீர் குடிக்க சொன்னான்.இடுப்பிலும் புட்டத்திலும் பயங்கர வலி.இன்னும் ஒருமணி நேர நரக வாழ்வு என ஏறி அமர்ந்தோம்.கடைசி நான்கு கிமீ குதிரையை அனுப்பி விட்டு நடக்கலாமா என யோசித்து மணி 5 ராம்பூர் லாட்ஜ் நினைவு வர பல்லை கடித்துக்கொண்டு 6 மணிக்கு கௌரி குண்ட் அடைந்தோம் ..
குதிரை மீது போஸ் தந்து அவனை போட்டோ எடுக்க சொல்லி 200/ டிப்ஸ் தந்து கௌரி குன்டில் நடந்தோம்.வெந்நீர் ஊற்று கட்டடம் இடிந்து வெந்நீர் ஆற்றுடன் கலக்க ஒரு சிலர் குளித்துக்கொண்டிருந்தனர்
சோன் ப்ரயாக் செல்லும் ஜீப்புக்கு இப்போதும் க்யூ.பொறுமையாக நின்று பயணித்து சோன்ப்ரயாக் அடைந்தோம்.ராம்பூர் செல்லும் ஜீப்பில் எங்களை சேர்த்து 4 பேர்.10 பேர் சேர்ந்தால் தான் எடுப்பான்.ஏராளமான டூரிஸ்ட் அவர்கள் பேருந்து நோக்கி நகர யாரும் ஏறவில்லை.நேரம் இரவு 8.30 நானே இறங்கி ராம்பூர்,ராம்பூர் என கத்த தயார்ஆனேன்.ஒரு வழியாய் ஆள் வந்து 9 மணிக்கு கிளம்பிய வேன்   ட்ராபிக் ஜாமில் சிக்கி 9.30 க்கு ராம்பூர் அடைய பழைய பாடாவதி ரூமில் தங்க முடிவு செய்து கடையில் நுழைந்தேன்.
ரூம் காலியில்லை என சொல்லி லக்கேஜை தந்தார்கள்.நான் மனைவியை அங்கேயே இருக்கச் சொல்லி ஊரில் உள்ள 7,8 லாட்ஜ்களிலும் விசாரிக்க அனைத்தும் ஹவுஸ் ஃபுல்.
நேரம் இரவு 11. இனி ஜீப் பஸ் சர்வீஸ் நாளைதான் என புரிந்து இரவுக்கு என்ன வழி என பயந்து வாய் உலர பழைய கடைக்கு வந்தால் மனைவி சப்பாத்தியைத் தால் தொட்டு சாப்பிட்டுக்கொண்டே என்னையும் சாப்பிடச் சொன்னாள் மிக்ஸர் மாமியாக.....🤑🤑

குங்குமத்தின் மகத்துவம்.

குங்குமத்தின் மகத்துவம்.
**********

அவசியம் படிக்க தவறாதீர்கள் .......


சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் தான் உள்ளது ..

குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள்.

குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.

மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள்.

இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.

கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது.

வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.

இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள்.

இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில்இரும்புச் சத்தாக மாறிவிடும்.

படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி.

அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மைஉள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்.

வசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம்
வைங்க இந்திய கலாச்சாரத்தில் பெண்கள்
குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது
மங்களமானதாக கருதப்படுகிறது.

அது அழகுத் தொடர்பானதும் கூட. மஞ்சளால்
உருவாக்கப்பட்ட தூய்மையான குங்குமத்தை
தான் வைத்துக்கொள்ள வேண்டும்.

குங்குமத்தை கழுத்தில் உள்ள கண்டம்,
புருவத்தின் இடைப்பகுதி, நெற்றியின் உச்சி
போன்ற இடங்களில் வைத்துக்கொள்வார்கள்.

அப்படி பொட்டு வைப்பதற்கு பல காரணங்கள்
உள்ளன.

வசியத்தில் இருந்து தப்பலாம்.
வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில்
மெஸ்மரிசம், ஹிப்னாடிசம், போன்றவை
வழக்கத்தில் உள்ளன. மற்றவர்களை
வசியப்படுத்தும் போது தம் பார்வை
ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின்
இடைப்பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின்
பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

கழுத்தின் பின்பகுதி சடையால்
மறைக்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில்
பொட்டு வைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது.

இதில் புருவ இடைப்பகுதி மிக முக்கியமாகும்.

இந்த இடத்தில் பொட்டு வைத்துக்கொண்டவர்களை அவர்கள் சம்மதம் இன்றி, எவராலும்
ஆழ்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது;
வசியப்படுத்த முடியாது.

யோகசாஸ்திரம் கூறும் உண்மை
*************

மூலாதாரம் என்று சொல்லப்படும் பகுதியில்
இருந்து பிறக்கும் உள் ஒளி கண்டத்தில்
தங்குகிறது. அவ்வொளி கபாலம் மூலம்
புருவ மத்திக்கு வருகிறது. அகவொளி
நிலைக்கும் இடங்களைப் பொட்டு வைத்து
புலப்படுத்துவதாக சாஸ்திரங்கள்
தெரிவிக்கின்றன.

பெண்கள் அனைவரும் பொட்டு
வைத்துக்கொள்ள வேண்டும்.

திருமணமானவர்கள் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக வகிட்டில்
வைத்துக்கொள்வது மரபு. ஒட்டுப்
பொட்டுக்களை இட்டுக் கொள்ளுதல்
சாஸ்திரத்திற்கு முரனானது ஆகும்.

ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் தீமைகள்....
******************

முன்னோர்கள் ஏன் பெண்கள் மஞ்சளை
தேய்த்துக் குளித்து குங்குமம் வைக்க
வேண்டும் என்று சொன்னார்கள் தெரியுமா?

பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட
மங்கலம் பொருந்திய குங்குமம் தற்போது
ஏற்பட்டுள்ள கலாச்சார சீரழிவால் ஸ்டிக்கர்
பொட்டாக மாறி பெண்களை மட்டும் அல்ல
எதிர்கால சந்ததிகளையே கேள்விக்
குறியாக்கியுள்ளது நடு நெற்றியில் உள்ள
லலாட மத்தியை (புருவமத்தி என்றும்
அழைக்கப்படும்) நெற்றிக்கண் என்றும்
அழைக்கப்படும். பழங்காலத்தில்
மந்திரவாதிகள்,ஆண்களையும் பெண்களையும் வசியம் செய்து மயக்கி கொண்டு செல்ல நெற்றியின் நடுவே இருக்கும் ஆக்கினைச்
சக்கரத்தின் மூலமாகவே வசியம் செய்யும்
சக்தியை செலுத்துவார்கள். மேலும் அந்த
பொட்டு வைக்கும் இடம் பீனியல் மற்றும்
பிட்யூட்டரி சுரப்பிகளின் கட்டுப்பாட்டு
புள்ளியாக அக்குபங்சரில் பயன்படுத்தப்படு
கிறது.மேலும் அந்தப் புள்ளியை சித்தர்கள்
திலர்த வர்மம் என வர்மப்பிரிவில்
குறிப்பிடுகின்றனர்.யோக சாதன முறைகளில் இதை ருத்ரக்ரந்தி என அழைக்கப்படுகிற்து.
படத்தில் காண்க. `

ஆக்கினைச் சக்கரம் என்றால் கட்டளையிடும்
சக்கரம் என்று பொருள்.இந்த ஆக்கினைச்
சக்கரத்தால்தான் ஹிப்னடிசம் , மெஸ்மரிசம்,
மனோவசியம் என்ற அறிதுயில், ஏன்?

செய்வினை, ஏவல்,பில்லி சூன்யம் (Phychic
Attacks & Evil Spirits Attachments)
போன்றவற்றையும் செயல்படுத்த படுகிறது.

மேலும் clairvoyance என்ற தொலைவில்
உணர்தல் போன்றவற்றிற்கும்,அதிகமாக
உணர்ச்சிவசப்படுவதால் ஏற்படும்
நோய்களைக் களையவும்,வந்த நோய்களை
கட்டுப்படுத்தவும் இந்த ஆக்கினைச் சக்கரம்
நல்ல நிலையில் இருப்பது அவசியம்
ஆக்கினைச் சக்கரம் யோக சாதன
முறைகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிற்து.

தியானமுறைகளின் மூலமாக முக்தியை
அடைவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பெண்களை இது போன்ற
தொல்லைகளிலிருந்து காப்பாற்றவும்
ஏற்படுத்தப் பட்டதே இந்த மங்கலம்
பொருந்திய குங்குமம்.

மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம்
பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து
பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். (சிலர்
வெண்காரத்தையும் நன்றாக ஒட்டுவதற்காக
நல்லெண்ணெயும் சேர்ப்பார்கள்)

பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும்
சுரப்பி நீர்கள் உடலிலுள்ள நாளமில்லாச்
சுரப்பிகளுக்கு கட்டுப்பாட்டுக் கட்டளைகளை,
இரத்தத்தில் வேறு வேறு வகையான சுரப்பு
நீர்களை கலப்பதன் மூலம் செயல்படுதுகிறது.

மேலும் அந்த சுரப்பிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது.சுருக்கமாகச் சொன்னால்
உடலின் முழு செயல்பாடும் பிட்யூட்டரி
சுரப்பியின் கட்டளையின்படியே நடக்கும்
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும்
சுரப்பி நீர்களுள் ஒன்று TSH (THYROID
STIMULATING HARMON)தைராய்டு சுரப்பியை
செயல்படுத்த வைக்கும்.தைராய்டு
சுரப்பியில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள்
இரண்டும்(T3,T4) பெண்களின்
மாதாந்தரவிலக்கை(MONTHLY PERIODS)
நிர்ணயம் செய்கிறது. இதே சுரப்பு நீர்கள்தான் ஒரு பெண்ணை முழுமையான பெண்ணாகவும் வைத்திருக்கும் எஸ்ட்ரோஜன் (ESTROGEN)
சுரப்பையும் நிர்ணயம் செய்யும்.

தற்போதுள்ள நிலையில் தைராய்டு சுரப்பி
பிரச்சினைகளுக்கு எல்ட்ராக்ஸின் போன்ற
மருந்துகளை ஆயுள் முழுவதும் சாப்பிட்டுக்
கொண்டே இருக்க வேண்டும்.இதன்
பின்விளைவுகள் என்னென்ன என்று இங்கு
சொல்லாமல் விடுகிறேன். எஸ்ட்ரோஜன்
(ESTROGEN) சுரப்பு குறைவதாலும்
உடலுக்கு குளுமை தரும் மஞ்சளை தேய்த்துக் குளிக்காததாலும் உடலெங்கும் ரோமம் அதிகமாக வளர்ந்து பெண்கள், ஆண் தன்மை கூடுவதால் மலட்டுத் தன்மைக்கும் ஆளாக நேரிடுகிறது.

இதனால் எதிர்கால சந்ததிகள் பிறப்பதே
கேள்விக்குறியாகி உள்ளது. எனவே ஸ்டிக்கர்
பொட்டை தவிர்த்து குங்குமம் இட்டு மங்கலம்
காப்பதுடன் நம் நலமும் காப்போம்.

குங்குமம் தயாரிப்பது எப்படி?
***********

தேவையானவை:
1) அரிநெல்லிக்காய் சைசில் கொட்டை மஞ்சள்
- ஒரு கிலோ
2) எலுமிச்சம் பழச்சாறு - 1 1/2 லிட்டர்
3)வெங்காரம் - 170 கிராம்
4)சீனாக்காரம் - 65-70 கிராம்
5)நல்லெண்ணை - 100 கிராம்
6)ரோஜா அத்தர் அல்லது தாழம்பூ அத்தர் -
வாசனைக்கு தேவையான சில துளிகள்

கொட்டை மஞ்சளை நாலு நாலு துண்டுகளாக
உடைத்து தனியாக ஒரு பாத்திரத்தில்
போடவும்.

அதோடு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை
சாறை அதனுடன் கலக்கவும். அத்துடன்
வெங்காரம், சீனாக்காரம் இரண்டையும் சேர்த்து
கலக்கவும் நன்றாகக் கலந்ததும் மெல்லிய
வெள்ளைத்துணியால் மூடி தனியே
வைக்கவும். தினமும் காலையும் மாலையும்
நன்றாகக் கிளறிவிடவும். கிளறுவதற்கு
மரக்கரண்டியையே உபயோகிக்கவும் சாறு
முழுவதும் மஞ்சளில் ஏறும் வரை இதே போல்
கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். சாறு ஏற
ஏற மஞ்சள் குங்கும நிறத்துக்கு
மாறியிருக்கும்.

பிறகு ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி
நிழலில் காயவைக்கவேண்டும். இப்போது
கேட்டு உடனே செய்து தர முடியாது. நாளும்
நேரமும் நிறைய பொறுமையும் பிடிக்கும்
வேலையிது!

நன்றாக காய்ந்த பிறகு இதற்கென்றே உள்ள
இரும்பு உரல், உலக்கை கொண்டு கைப்பிடி
கைப்பிடி அளவாகப் போட்டு
இடிக்கவேண்டும். சுமாராக இடிபட்டதும் அதே
பாத்திரத்தின் வாயை மெல்லிய
வெள்ளைத்துணியால் கட்டி பொடி செய்ததை
அதில் கொட்டி மெதுவாக 'வஸ்தரகாயம்'
செய்யவேண்டும். மேலிருக்கும் கப்பியை
உரலிலிட்டு மீண்டும் இடிக்கவேண்டும்.

this process goes on & on till you get little
கப்பி. fine powder -ஆக கிடைத்த மஞ்சள்
பொடியை.... இனிமேல் 'குங்குமம்' என்றே
அழைக்கலாம். குங்மத்தோடு தேவையான
அளவு நல்லெண்ணை ஊற்றி கிளறவும்.

நெற்றியில் நன்றாக அப்பிக்கொள்ள எண்ணை
தேவை.

இறுதியாக கமகமக்கும் வாசனைக்கு தாழம்பூ
அத்தர், ரோஜா அத்தர் சில சொட்டுகள் விட்டு
நன்றாக கலந்து காற்றுப் புகாத கண்ணாடி
பாட்டிலில் மாற்றி வைத்துக்கொள்ளவும்.

தேவைப்படும் போது கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து உபயோகிக்கலாம். விரும்பிக்
கேட்பவர்க்கும் கொடுக்கலாம். சிறு
பிளாஸ்டிக் டப்பாவில் பக்கிங் செய்து
விற்பனை செய்யலாம் எல்லோரும் மஞ்சள்
குங்மத்தோடு வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகிறேன். பழைய பாட்டொன்றொடு
முடிக்கிறேன்.

"கொத்து மஞ்சள் முகத்தில் பூசி கொறநாட்டு
புடவை கட்டி
நெத்தியிலெ திலகமிட்டு நீண்ட சடை
பின்னிவிட்டு
உத்தமி சென்ற நாளில் உலகம் கண்டு
புகழ்ந்ததையா
நற்றிடும் பழமை அதை நாடுவதே
நல்லதையா!"

                          - *வாழ்க வளமுடன் *

நாம் அறியாத அற்புதங்கள்

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.

★திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகு காலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

★நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாத காலம்
கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்.

★வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை.

★திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் உறிஞ்சப்படுகிறது.

★ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில்
நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை
உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.

★கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும் போது கருடன் தரிசனம் தருகிறது.

★கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருட சேவையின்போது கல் கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது.

★முருகனுக்கு விரதமிருந்து சர்ப்பக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள்
பாம்பும், மச்சக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் மீனும் தானாக
வருகின்றன.

★திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.

★திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளி சுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

★தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும் அற்புதம் நடக்கிறது.

★காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால்
நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

★சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

★திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில்
சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

★குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை
கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது.

★ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

★திருப்பத்தூர் – தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்த
நாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7
புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல்
விட்டு விட்டு சாலை அமைத்தனர்.

★வேலூர் செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை
பங்குனியில் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது பட்டு தங்கநிறமாக
ஜொலிக்கும் அதிசயம் நடைபெறுகிறது.

★திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்
கோவிலில் சூரியன் மறைந்துவிட்டபோதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

★சோமநாதபுரம் சிவன்கோவிலில் சிவலிங்கம் அந்தரத்தில் இருந்தது. கஜினி
முகமது உடைத்து அழித்தான்.

★அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், தீமிதித்தல் போன்ற நோ்த்திக்
கடன்கள் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

★இதுபோல் நாம் அறியாத அற்புதங்கள் ஏராளம். இதுபோன்ற அற்புதமான கோவில்களை,மகான்களின்  ஜீவசமாதிகளை தரிசிக்கும் பாக்கியத்தை புண்ணியம்    செய்தவர்கள்பெறுகிறார்கள்.

கோதாவரி ஆற்று நீர்

கோதாவரி ஆற்று நீர் தமிழகம் வருகிறது....
....

மகாநதி > கோதாவரி > கிருஷ்ணா > பாலாறு > பெண்ணாறு > காவேரி இணைப்பு திட்டம் என்பது இரண்டு வரிகளில் சொல்லி விடலாம் ...

ஆனால் நடைமுறையில் ஏகப்பட்ட சிக்கல்கள் .....

செய்யமுடியாததை செய்து காட்டுவதும் ..... நடைமுறை சாத்தியம் இல்லவே இல்லை என்று சொல்லப்படுவதை உடைத்து அதை செயலாற்றி காட்டுவதே பாஜக பிரதமர்களின் தனித்தன்மை .....

இது வாஜ்பாய்க்கும் பொருந்தும் .... மோடிஜி க்கும் பொருந்தும்.

கேவலம் 205 டி.எம்.சி நீருக்காக காவிரி விவகாரத்தில் தமிழகமும், கர்னாடகமும் அடித்துக்கொள்ளும் அவலத்தை போக்கிவிட்டு,

எடுத்த எடுப்பிலேயே 300 டி.எம்.சி நீர் கோதாவரியில் இருந்து தமிழகம் கொண்டுவரும் மகத்தான திட்டத்தை முன்மொழிந்துள்ள மோடி அரசை பாராட்டாதவன் இந்தியனாகவே இருக்க முடியாது.

2 கோடியே 50 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

1கோடி ஏக்கர் நிலங்களில் நிலத்தடி நீர் உயரும். விவசாயம் செழிக்கும். வேலை வாய்ப்பு பெருகும்.

கோதாவரி ஆறு அப்படி என்ன அப்பாடக்கரா ? ஆமாம். அப்பாடக்கர்தான்.

மகாராஷ்டிரா மானிலம் நாசிக் அருகில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரும்மகிரி மலையில் உற்பத்தி ஆகிறது.

மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலத்தில் வளமாக்கிவிட்டு ஆந்திர மாநிலத்தின் ஏணாம் கடலில் வங்காளவிரிகூடாவில் கடலில் கலக்கிறது.

1450 கி.மீ பயணிக்கும் கோதாவரி வருடம்தோறும் 3000 டி.எம்.சி நீரை வீணாக கடலில் கலக்கிறது.

ராஜமுந்திரிக்கு கிழக்கே கெளதமிகோதாவரி, வசிஷ்ட கோதாவரி என்று இரு பிரிவுகளாகி கடலில் கலக்கிறது.

சென்னைக்கு வடகிழக்கே 600 கி.மீ தொலைவில் இருக்கும் கோதாவரி இனி திருச்சி வரை பயணிக்க இருக்கிறது.

வரும் பாதைநெடுகில் அணல் மின் நிலையம், துணை மின் நிலையம் மூலம் மின் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வாழ்க மோடி அரசு .....அடுத்த தேர்தலை நினைப்பவன் அரசியல்வாதி ....

அடுத்த தலைமுறை பற்றி கவலை கொள்பவன் தலைவன் .....

அதிகம் பகிரவும்...  Must share..
 #mahadevan

அம்மா

அம்மா

"வீட்ல சும்மா தான இருக்க"

எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..

" நீ சும்மா தான மா இருக்க..
இது செஞ்சி குடுத்திடு மா..."

'எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன'ன்னு தோனுச்சு.

வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பிட்டாங்க.

அவரவர்க்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து வீட்டேன்.

 இன்றைக்கு சும்மா இருப்போம் என்ன தான் ஆகும் பாப்போம்.

மாலை கணவரும், பசங்களும் வீட்டிற்கு திரும்பினார்கள்.

 "அம்மா பசிக்குது மா..
எதாவது எடுத்துட்டு வா மா,"

" எனக்கும் தலைவலிக்குது ஒரு காபி போட்டு தாடி", என்று சொல்லிக் கொண்டே உள்ள நுழைந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

வாசல் முழுவதும் குப்பையால் நிறைந்து இருக்கிறது.

 வீட்டின் உள்ளே சென்றால் காலையில் செல்லும் பொழுது இரைத்த பொருட்கள் எல்லாம் அனைத்தும் கிழே இருக்கின்றன.

காலையில் துடைத்த ஈரமான துண்டுகள் அனைத்தும் நாற்காலியில் கூலமாக இருக்கின்றன.

ஷுபாலிஷ் செய்யும் டப்பா திறந்தே இருக்கு.

 தலைக்கு தடவும் ஜெல்லும் ஓபன் பன்னி  இருக்கு.

 பசங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

 அவர்கள் புத்தகங்கள் ஆங்காங்கே இருக்கின்றன.

 விளையாட்டு பொருட்கள் இரைந்து கிடக்கின்றன.

 சீருடைகள் தோய்க்காமல் அப்படியே போடப்பட்ட இடத்தில் இருக்கின்றன.

இவ எங்க தான் போனான்னு சமையல் அறைக்குள் சென்று பார்த்தால், பாத்திரங்கள் கழுவாமல் நாற்றம் அடித்து கொண்டு இருக்கின்றன.

'எங்க தான் போனாலோ.. உடம்பு சரி இல்லையோ?'

 ரூமிற்கு சென்றால், இரவு உபயோகபடுத்திய தலையணை,போர்வை எல்லாம் மடித்து வைக்காமல் இரைந்து கிடக்கின்றன.

'சரி பாத்ரூமில் இருப்பாள் கதவு தட்டி பாக்கலாம்'னு திறந்தா, காலையில் போட்ட சோப் டப்பா முழுவதும் தண்ணீரில் முழுகிக் கரைந்து போய் தரை முழுவதும் கொழ கொழனு ஆகிடுச்சு.

 அழுக்கு துணிகள் அசிங்கமாய் தொங்கி கொண்டு இருந்தன.

ஒன்றும் புரியாமல் பதற்றத்துடன் மாடியில் உள்ள அறைக்குள் சென்றார்கள்.

கையில் ஒரு நாவல் புத்தகம் ஒன்றுடன்,  நாற்காலியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்தி கொண்டு இருந்தாள்.

"என்னடி ஆச்சு உனக்கு ?
 வீடு என் இப்படி இருக்கு? அம்மா என்ன ஆச்சு மா உனக்கு?"

பதட்டமான கேள்விகள்.

"நீங்க எல்லோரும் தான் சொல்லிட்டு போனீங்க, 'வீட்ல சும்மா தான இருக்க'ன்னு.

 அதான் சும்மா இருக்கலாம்னு!!

கணவனுக்கு தன் தவறு உணர்ந்தது.

 இந்த வார்த்தையை சொல்வது தவறு.

அவ எதுவும் செய்யவில்லை என்றால் வீடு வீடாகவே இருக்காது.

"என்னை மன்னித்து விடு" என்று கூறினார்.

 பிள்ளைகளும் தம் தவறை உணர்ந்து "அம்மா மன்னிச்சிடு மா.இனி அப்படி சொல்ல மாட்டோம். நீ இல்லைனா வீடு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுகிட்டோம்."

நான் சொல்வதால் தான் என் பசங்களும் இந்த வார்த்தையை அவ கிட்ட சொல்லி கஷ்டபடுத்தறாங்கனு அவருக்கு புரிந்தது.

இனி எப்பொழுதும் தன் மனைவியை பிள்ளைகளிடமோ, வெளி ஆட்களிடமூம் தாழ்த்தி பேசமாட்டேன் என்று மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தார்.

"நீ இங்கயே இரு நா போய் உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்" கணவர் கிளம்பினார்.

பசங்களும் "நாங்க உனக்கு ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரோம் மா நீங்க வெயிட் பண்ணுங்க மா".

"யாரும் எதுவும் செய்ய வேண்டாம். எல்லோரும் போய் டிவி பாருங்க. நான் பத்து நிமிடத்தில் உங்களுக்கு கேசரி செய்து தரேன் சாப்பிடுங்க" என்றாள். 

மனதில் சந்தோஷத்துடன் சமையல் அறைக்கு சென்றாள்.

இது தான் அம்மாவின் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌குணம்.

(படித்ததில் பிடித்தது)

ஓம் மந்திரத்தில் இத்தனையும் உள்ளது

ஓம் மந்திரத்தில் இத்தனையும் உள்ளது 🍁
1. உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ' ஆ ' , 'ஓ ' ,'ம்' ஆகிய மூன்று அசைகளால் உருவானது .
நாம் 'ஆ' என்று ஓசை எழுப்பும்போது உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. 'ஓ' என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. 'ம்' என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத்
தூண்டும்.
2. 'ஓம்' எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.
3.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை
ஒருமுகபடுத்துகிறது.
4. ஓம் என்னும் மந்திரத்தை, 11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் மூளைக்கு அவசியமான 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது.
5. இது உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்குகிறது.
6. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு, ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
7. கவலைகள் மற்றும் பதற்றத்தால் பல நேரங்களில் கோபம், வருத்தம், விரக்தி, ஏமாற்றம் ஆகியவற்றை நாம் வெளிப்படுத்துகிறோம். பின்பு, அதன் விளைவுகளை எண்ணி வருந்துகிறோம். 'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.
8. சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும் இருப்பவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் 'ஓம்' என்ற மந்திரத்தைச் சொல்லிவர மூளையில் 'எண்டார்பின்' என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், நாள் முழுதும் உற்சாகமான, மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கும்.
9. 'ஓம்' மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் மன ஊசலாட்டம் (மூட் ஸ்விங்ஸ்) கட்டுப்படும்.
10. 'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது. 🤞. ..🙏 ஓம் நமசிவாய 🙏

போனஸ்" சரித்திரம் என்ன சொல்கிறது?

போனஸ்" சரித்திரம் என்ன சொல்கிறது?
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள். 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்.
அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.
இந்தியர்கள் னா சும்மாவா?
அதனை தரும்படி 1930-1940 களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள். அதன் விளைவாக
அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்.
அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது.
பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.
இன்றைக்கு பல மக்களுக்கு இந்த சரித்திர நிகழ்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆகையால் இதனை பலரும் அறிந்து கொள்ள பகிருங்கள்.
(சேர் செய்யுங்கள்)

சித்தர்கள் என்பவர்கள் யார்?

சித்தர்கள் என்பவர்கள் யார்?

சித்தர்கள் என்போர் பண்டைய தமிழகத்தின் அறிவியலாளர்கள் ஆவர்.

அவர்கள் சாதாரண ஆன்மீகவாதிகளோ சாமியார்களோ அல்லர்.

அவர்கள் மெஞ்ஞானமறிந்த விஞ்ஞானிகள்.

அவர்கள் வானியல், மருத்துவம், வேதியியல் ஆகிய துறைகளில் கைதேர்ந்தவர்கள்.

96 உடல்தத்துவங்களாகப் பிரித்து மனித உடற்கூறியலை (Human Anatomy) ஆராய்ந்தனர்.

நோயியல் (Pathology) துறையில் மிக ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.

மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் 4448 என்று வரையறுத்தனர்.

மூச்சுறுப்புகளில் ஏற்படும் நோய்களை கப நோய்கள் எனவும்...

செரிமான உறுப்புகளில் ஏற்படும் நோய்களைப் பித்த நோய்கள் எனவும்...

மற்றவற்றை வாத நோய்கள் எனவும் வகைப்படுத்தினர்.

மருந்தியல் (Pharmacology) பற்றி விரிவான ஆய்வு செய்தனர்.

அதன் பயனாக கண்டுபிடித்த மருந்துகளை 32 வகை உள்மருந்துகள்,
32 வகை வெளிமருந்துகள் என வகைப்படுத்தினர்.

மருந்தியல் துறையில் ஏராளமான நூல்களைப் படைத்துள்ளனர்.

நரம்பியலை ஆராய்ந்து வர்ம மருத்துவத்தைக் கண்டுபிடித்தனர்.

இந்த வர்ம மருத்துவம் சித்தர்கள் கண்டுபிடித்த நரம்பியல் மருத்துவம் (Neurological medicine) ஆகும்.

வேதியியல் துறையை வாதம் என்ற பெயரில் ஆராய்ந்தனர்.

போகர் வேதியியல் துறையில் ஆழமான விரிவான ஆய்வுகளைச் செய்தவர்.

செயற்கையாக வேதிப்பொருள்களாகிய தாதுக்களைத் தயாரிக்கும் முறைகளைக் கண்டுபிடித்தனர்.

அதற்கு வைப்புமுறை என்று பெயரிட்டனர்.

விண்பொறியியல் துறையில் போகர் ஆராய்ந்திருக்கிறார்.

அதன் பயனாக பஞ்சபூதத்தால் செய்த ஆகாயப்புரவி என்ற விமானத்தைக் கண்டுபிடித்து சீனாவுக்குப் பயணம் செய்திருக்கிறார்.

ஆகாயப்புரவி என்ற விமானம் பற்றிய குறிப்புகளை போகர் ஏழாயிரம் என்ற நூலில் காணமுடிகிறது.

உடல், மனம், அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் யோக ஆய்வுகளைச் செய்து யோக நூல்களையும் படைத்தனர்.

மெய்யியல் என்னும் தத்துவத்துறையிலும் ஆய்வுகளைச் செய்தனர்.

தமது தத்துவ ஆய்வுச் சிந்தனைகளை ஞானநூல்களாகப் படைத்தனர்.

மொத்தத்தில் சித்தர்கள் பலதுறை வல்லுநர்களாக விளங்கினர்.

சித்த மருந்தியலையும்,
சித்த வேதியியலாகிய வாதத்தையும் நவீன வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி ஆராய்வதன் மூலம் அறிவியல் உலகிற்குப் புதிய வெளிச்சத்தைத் தர முடியும்.

உலக அறிவியல் வரலாற்றில் சித்தர்களை அறிவியலாளர்களாகக் குறிப்பிடச்செய்ய வேண்டியது நமது கடமை.

சித்தர்கள் தமிழில் எழுதிய மருத்துவ அறிவியல் நூல்கள் இப்போதும் 500 க்கும் மேற்பட்டவை நமக்குக் கிடைத்துள்ளன.

தமிழ் மொழி பண்டைக் காலத்திலிருந்தே அறிவியல் மொழி.

சித்தர்கள் நமது நல் வாழ்க்கையின் வழிகாட்டி.

ஆகவே, தமிழ் மொழியை போற்றுவோம்...

சித்தர்கள் வழி நடப்போம்.🙏🏻

'ஆனந்தமான குடும்பம்'.

.............................................

'ஆனந்தமான குடும்பம்'.
.............................................

ஒரு தொழில் அதிபர் எதற்கெடுத்தாலும் மனைவி உடன் சண்டைப் போடுவார்..

ஒருநாள் நம் அலுவலகம் போய் வேலை செய்து பார்.. எவ்வளவு சிரமம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. ஒருநாள் பொறுமை இழந்த மனைவி..,

ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக் கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு,வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..

அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செய்து பாருங்களேன்..என எதிர் சவால்விட்டாள்..
கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.

அவன் வீட்டில் இருக்க.. இவள் தங்களுடைய அலுவலகம் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது அலுவலகம்..

முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்..கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது,ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக் கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..

பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே.. இலையில் வைத்த 'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..

முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..

அவள் சாப்பிட்டதை விட,பிள்ளைகளுக்கும்
கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,கணவன் கையில் பிரம்புடன் கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..?
அத்தனையும் குரங்குகள்..சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..

அத்தனை பேரையும் அடிச்சு அந்த அறையில் படுக்க வச்சிருக்கேன்..பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே என்று ஆவேசமாக கத்ததினார்....

அவளோ,அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா... என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..

உள்ளே ஒரே அழுகையுன் பிள்ளைகள்.. விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,ஏங்க... இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?

இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..ஓஹோ,அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க.. அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது..

இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்ககாலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும், பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..

அதுபோல,பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது.. ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்.,

 இது ஆணுக்கு,இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம் பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க கணவன் மீது மனைவியோ,மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல்.,

அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டு இருந்தால்தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்...

ஆம்.,நண்பர்களே..,

கணவன் மனைவி உறவு என்பதை இருவருமே பராமரித்தால் மட்டுமே அது உயிர்ப்போடு நீடிக்கும்.

தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் ஈர்க்க ஒரு உழைப்பும், அக்கறையும் தேவைப்படுகிறது.

அந்தப் பராமரிப்பு பற்றி கணவனும்,மனைவியும் யோசிக்க ஆரம்பித்தாலே நல்ல நண்பர்களாக, ஒருவருக்கொருவர் சுவாரஸ்யமிக்க துணையாக இருக்கலாம்.🌸🙏🏻🌷

Palm Oil

Dear Friends
I am Dr. Srinivas. I am working as Medical Director for a Pharmaceutical company.
I would like to make a small request to you.
Before that I would like to share a small information.
Many of you might have read today's paper.
EMRI results say majority of people having Heart Attack are less than 50 years old.
You will be surprised to know the culprit is Palm Oil. It's far far more dangerous than Alchol and Smoking together.
India is the highest importer for Palm oil in this world.
Palm oil mafia is very very big.
Our children who are the future are at big risk.
There is no fast food available in this country without Palm Oil.
If you go to our grocery store, try to pick up a children's edible food without Palm oil.
You will be interested to know even Biscuits of big companies are made from it and similarly all chocolates. We are made to believe they are healthy but never we knew about the killer Palm oil or Palmitic acid
The big companies like Lays uses different oil in Western Countries and Palm oil in India just because it is Cheap.
Each time our child eats a product with Palm Oil, the brain behaves inappropriately and signals to secrete fat around and in the Heart  This will lead to Diabetes at a very young age.
World Economic Form has projected that 50 percent of people who Die at young age will die of Diabetes and Heart Disease.
The Palm Oil mafia has made our Children addicted to Junk Food leaving the fruits and Vegetables, which are Heart protective.
Next time you buy something for your child, see the label of the product. It it has Palm oil or Palmolienic oil or Palmitic acid
We, have written to to our  Honourble Prime Minister  and are also in the process of taking similar letters from 1 Lakh Doctors across India to take some action to secure our future generation.
Once again I want to emphasize on impending danger for our children.

Please protect our Children. They are the future of our Country

'சொளவு'

நாம் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் 'மொறத்தை' தான் தென் மாவட்டங்களில் 'சொளவு' என்று அழைத்து வருகிறார்கள். வீடுகளுக்கு நவீன பொருட்கள் நிறைய வந்துவிட்டாலும் முறத்துக்கு தனி மரியாதை உண்டு. அதுவும் பெண்களுக்கு மொறத்தோடு நெருங்கிய தொடர்பு உண்டு.

இந்த முறத்தை பற்றி விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியைச் சேர்ந்த பஞ்சர்வணத்திடம் பேசினோம். முறத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் அதை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது வரை அழகாக எடுத்துச் சொன்னார் பஞ்சவர்ணம்.


"சொளவு பார்ப்பதற்கு முக்கோண வடித்துல இருக்கும். நெல், பயறு, சோளம், கேப்பை, சிறுதானியங்கள்னு எதுவானாலும் போட்டுப் புடைக்கலாம். சொளவின் அடிப்பக்கத்த ரெண்டு புறமும் பிடிச்சுக்கிட்டு நடுவுல தானியத்தைப் போட்டு சொளவை தூக்கிப் பிடிக்கணும்.

சொளவை மேல தூக்கும்போது கட்டைவிரல் தவிர மற்ற நாலு விரலையும் விட்டுப் பிடிக்கணும். சொளவு மேலபோயிட்டு வர்றதுனால தானியங்களும், இதோடு கலந்திருக்குற கல், குச்சிகள், தேவையற்ற கழிவுகள் ஒருபக்கமும், தானியம் ஒரு பக்கமும் தனித்தனியாப் பிரிஞ்சுடும். நாலஞ்சு தடவ தூக்கிப் பொடச்சதும் தானியத்தைப் பரசிப் பாத்தாலே உமி, சின்னச்சின்ன கற்கள், தூசுகள் தனித்தனியாத் தெரியும். உடனே பொறுக்கி எடுத்திடணும்.

வீட்டுல உலையை வெச்சுட்டு பொறுமையா பக்கத்து வீடுகளில் கதை பேசிக்கிட்டே அரிசி பொடைப்போம். பொடைச்சு முடிக்குறதுக்குள்ள தண்ணி கொதி வந்துடும். அப்புறம் அரிசியை போட்டு கொஞ்ச நேரத்துல வெந்துடும். அயலாரோட பேசுன மாதிரியும் இருக்கும். வேலையும் செஞ்ச மாதிரி இருக்கும்.

எனக்கு அறுபது வயசு ஆகுது. கல்யாணமாகி புருஷன் வீட்டுல காலெடுத்து வெச்ச அடுத்தநாளே, என் மாமியார் சொளவைக் கொடுத்து பொடைக்க கொடுத்திட்டாங்க. கிராமத்துல ஒரு பொண்ணு துணி துவைக்கிறது, வீட்டு வேலை செய்யுறது, பாத்திரம் தேய்க்குறது, வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுறது இதையெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கணும். அதேமாதிரி சொளவுல பொடைக்கத் தெரிஞ்சுருக்குறதும் ரொம்ப முக்கியம்.

முன்பெல்லாம் முறை மாப்பிளைகளுக்கும், பக்கத்து கிராமங்கள்ல உள்ளவங்களுக்கும்தான் பொண்ணுகள கல்யாணம் செஞ்சு கொடுப்பாங்க. வீட்டு வேலைகளோட, தானியங்கள அறுவடை செய்யுற வேலைகளும் இருக்கும். ஒரே நாளில் ஒரு மூட்டையை பொடைச்சு முடிக்கிற பொண்ணாத்தான் பார்த்துக் கட்டிக்குவாக. பொண்ணு கறுப்பா சிவப்பான்னு பாக்குறதவிட பொண்ணு பாக்க வரும்போது, பொண்ணுக்கு பொடைக்கத் தெரியுமான்னுதான், அந்தகாலத்து மாமியார்களோட முதல்கேள்வியா இருக்கும். பொடைக்கத் தெரிஞ்சாத்தான் அந்தப் பொண்ணைக் கட்டுவாக.

இந்த சொளவை ஒரு தடவ வாங்கிட்டா, பத்து வருஷம் வரை உழைக்கும். ஆனா அடிக்கடி சொளவைக் கவுத்தி போட்டு மாட்டுச்சாணம் தேய்க்கணும். அப்பத்தான் சொலவுல ஓட்டை விழாமல் இருக்கும். இப்போ கிராமத்துல கூட சொளவுக்குப் பெயிண்ட் அடிக்கற கலாசாரம் வந்துடுச்சு.

தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்.

தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்.

காலையில்  எழுப்பிட அப்பா
வேண்டாம் - Alarm app -இருக்கு!

நடைபயிற்சிக்கு நண்பன்
வேண்டாம் - step counter இருக்கு!

சமைத்து தந்திட அம்மா
வேண்டாம்  - zomato, swiggy app இருக்கு!

பயணம் செய்ய பேருந்து
வேண்டாம் - Uber,OLA app இருக்கு!

விலாசம் அறிய டீ - கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்
Google Map இருக்கு!

மளிகை வாங்க
செட்டியார் தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம் - Big Basket இருக்கு!

துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக வேண்டாம் -
Amazon , Flipkart app இருக்கு!

நேரில் சிரித்து பேசிட
நண்பன் வேண்டாம் -
What's up, facebook இருக்கு!

கைமாறாக பணம் வாங்க
பங்காளியும்,அங்காளியும்
தேவையில்லை - Paytm app இருக்கு!

மற்றும் பல தகவலுக்கு நம்ம
Google டமாரம் இருக்கு!

இப்படி தனித்து வாழ்ந்திட
அனைத்தும் இருக்கு.....
App என்னும் ஆப்பு!!!

உள்ளங்கை நெல்லிக்கனியென
நீ நினைக்க !
விரித்திருப்பதோ மீள முடியாத
வலைதளம்.!
சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!
விழித்தெழந்து விடை கொடு..!

செல்லின அடிமைகயாய் இல்லாமல்
உறவுகளோடும் சேர்ந்து ஓர்
வலை பின்னுவோம்.....!

என்றும் அன்புடன் ...

படித்ததில் பிடித்தது ..🙂

எல்லாம் வாழைத்தண்டு மஹத்வம்!”"--மஹாபெரியவா

“"எல்லாம் வாழைத்தண்டு மஹத்வம்!”"--மஹாபெரியவா.
சொன்னவர்: ஸ்ரீமடம் பாலு

அநாதரவான ஓர் அம்மையார். ஒரே பிள்ளை.அவனுக்குத் தோல் வியாதி வந்து, மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் மடமடவென்று பரவி விட்டது. கருமேகம்.. உடல் அரிக்கும்.. சொறிந்து கொண்டால் ரத்த விளாறு தான். 

அம்மையாருக்கு மகனின் கஷ்டத்தைப் பார்த்து சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. நேரே பெரியவாளிடம் வந்து துன்பத்தை விவரித்தாள்.
“பெரியவா கிருபையாலே உடம்பு குணமாகணும். எனக்கு வேறே கதி இல்லை. வக்கும் இல்லே…”

பெரியவா அந்த அம்மாளையும், பிள்ளையையும் மடத்திலேயே இருக்கச் சொன்னார்கள். 

பெரியவா நாள்தோறும் ஏற்றுக்கொள்கிற பிக்ஷையில் மிகுந்ததை மட்டுமே அந்தப் பையன் சாப்பிட வேண்டும். வேறு எதுவும் – காபி,டீ,பால் உட்பட சாப்பிடக் கூடாது என்று உத்தரவிட்டார்கள்.அம்மையார் பரம சந்தோஷமாக ஒப்புக் கொண்டார்.

பெரியவா, ‘மறு உத்தரவு வரையில்’ தன் பிக்ஷைத் திட்டத்தை சமையல்கட்டில் சொல்லியிருந்தார்கள். வெறும் வாழைத்தண்டு மட்டும் தான் பிக்ஷை! சிறிது உப்புப் போட்டு வேகவைத்து வைத்திருப்பார், சமையல்கார சிஷ்யர்.

பெரியவா அதை ஸ்வீகரித்து விட்டு, கொஞ்சம் மோர் சாப்பிடுவார்கள்.இதே வாழைத் தண்டும் மோரும் பையனுக்கும் கொடுக்கப்பட்டன. முதலில் அலுப்பும் சோர்வும் தான் வந்தன. ஆனால், பெரியவா பிக்ஷை செய்த உச்சிஷ்டம் என்ற நினைவு வந்ததும் அமுதபானமாக மகிழ்ச்சியுடன் உண்டு வந்தான்.

பத்து நாட்களுக்குப் பின், கருமையும், அரிப்பும் குறையத் தொடங்கின. நாளாக கருமை மறைந்து தோலின் இயற்கை நிறம் வந்துவிட்டது. நாற்பது நாட்கள் ஆனபின் கருமை மறைந்ததோடு மட்டுமில்லாமல் ரொம்பவும் தேஜஸோடு விளங்கினான் பையன்.

அவனுடைய தாயாருக்கு எல்லையில்லாத சந்தோஷம். “வேறு யாருக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கும்? என் பிள்ளைக்கு வந்த வியாதி, பாவத்தின் பயன் என்று நினைத்தேன்.இல்லை புண்ணியத்தின் பயன் என்பது தெரிந்து போச்சு. பெரியவா உச்சிஷ்டத்தை தொடர்ந்தாற்போல் நாற்பது நாட்கள் சாப்பிடும் பாக்கியம் வேறு யாருக்குக் கிடைக்கும்?..” என்று புலம்பித் தீர்த்தாள்.

“எல்லாம் வாழைத்தண்டு மஹத்வம்!” என்றார்கள் மஹாபெரியவா. “வாழைத்தண்டு என்கிறது ஒரு சாக்கு. பெரியவா உச்சிஷ்டம் என்கிறது தான் பிரதான காரணம்" நெஞ்சாரச் சொன்னாள் தாயார்.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🙏



திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம்...

போன ஜென்மத்து பாவத்தைத்  தீர்க்கும் அதிசய கோவில் இது...!

போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணிருக்கப்பா நீ.
நீ பண்ணின பாவம் உன்னை ஏழேழு ஜென்மத்துக்கும் பின்தொடரும்மா தாயின்னு.. ரைமிங்ல அடிச்சு டைமிங்ல விடுற பித்தலாட்டம் இல்லைங்க... நிஜமாகவே முன் ஜென்மத்துல நம்பிக்கை இருக்கு' என்கிறீர்களா?..

உண்மைதான்...

முந்தைய பிந்தைய ஜென்மங்கள் இருக்குதுங்க...

என் பாப்பா பேசுறது என் அம்மா மாதிரியே இருக்குமுங்க.. என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம். விசாரித்துப் பார்த்தால், அவரின் அம்மா இறந்த சில வருடங்களில் அவருக்கு குழந்தை பிறந்ததாக சொல்வார் அவர்.

இன்னும் சிலருக்கோ, புதிதாக சென்ற இடம் கூட ஏற்கனவே தான் இங்கு வந்திருப்பது போல நினைவுக்கு வரும்.

ஆனால் நீங்கள் வந்திருக்கவே மாட்டீர்கள்..

அப்போது ஏன் அப்படி நினைவு வருகிறது.

முந்தைய ஜென்ம நினைவுகளாக இருக்கலாமோ. முன் ஜென்மத்தை அறிவியலால் இன்னும் நிரூபிக்க முடியவில்லை என்றாலும், அப்படி ஒன்று இல்லை என்று கூறிவிடமுடியாது.

முன் ஜென்மத்தில் பாவியாகப் பிறந்து பல பாவங்களைச் செய்து இறைவனின் சாபத்துக்குள்ளாகி,
துர்மரணம் அடைந்தவர்கள் திரும்ப பிறக்கிறார்கள் என்று பல ஞானிகள் கூறியுள்ளனர்..

உங்களுக்கு கடன் தொல்லையா, உடல் நிலை பிரச்சனைகள் அடிக்கடி வருகின்றதா.. இது போன்ற பிரச்னைகள் தொடர்கதையால் வாழ்வையே வெறுக்கின்றீர்களா.. இவையெல்லாம் முன்ஜென்ம பிரச்னைதான் என்கிறார்கள் இறைவன்மீது அதீத பக்திகொண்ட பெரியவர்கள்.

இந்த இந்த பாவத்துக்கு இந்த இந்த பரிகாரம் என்று எழுதிவைத்துள்ள நம் முன்னோர்கள், அந்த பாவத்தைக் கழுவ போக வேண்டிய கோவிலையும் கூறியுள்ளார்கள்..

அப்படிபட்ட ஒரு கோவிலுக்குத் தான் இன்று நாம் போகவிருக்கிறோம்.

🌷திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம்...

முன்ஜென்ம பகைகளைப் போக்கி, பாவங்களை நீக்கி வருங்காலத்தை செம்மைபடுத்த நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோவில்களுள் ஒன்று இந்த திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம் ஆகும்.

வாழ்வில் நல்ல திருப்பம் வேண்டுமா, புதுவீடு கட்ட திட்டமா?
இந்த கோவிலுக்கு வந்து பாருங்க அப்புறம் ஓஹோனு வாழ்வீங்க...

முக்கிய சிறப்புக்கள்:-

அக்னிக்கு உருவச்சிலை அமைந்துள்ள ஒரே திருத்தலம் இதுதான்.,

அப்பர்,
சம்பந்தர்,
திருநீல நாயனார், முருக நாயனார், சிறுதொண்ட நாயனார் ஆகியோர் இணைந்து வணங்கிய தலம் இதுவாகும்.

முக்காலத்துக்கும் ஆசி அருள் வழங்கும் தலம்..

பண்ணிய பாவங்கள் போக்கும் ஸ்தலம்.

🌷ஸ்தல நம்பிக்கைகள்:-

கோவில் அமைந்துள்ள ஊரின் அருகில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காக்க அம்மன் வெண்ணிற புடவை அணிந்து வந்ததாகவும், அந்த பெண்ணையும் குழந்தையையும் மருத்துவச்சி போல காப்பாற்றியதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

வேண்டுதல்கள்:-

அம்மனுக்கு வெள்ளைப் புடவை சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள கோவில் குளத்தில் மூழ்கி எழுந்தால், சனி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது.

பிறவிப் பலன்:-

சதய நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த ஸ்தலத்துக்கு ஒருமுறையாவது வந்தால் பிறவிப்  பலனை அடைவதாக நம்பிக்கை.

👇போகரின் சமாதி...

இங்கு ஒரு சித்தரின் சமாதி அமைந்துள்ளது. 18 சித்தர்கள் வந்து வழிபட்ட ஸ்தலம் என்னும் பெருமை இந்த கோவிலுக்கு உள்ளது. இதனால் அந்த சமாதி போகருடையதாக அநேகம் பேரால் கருதப்படுகிறது.

சந்நிதிகள்

பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூவரும், தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை வணங்கினால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைப்பதுடன், பொருட்செல்வம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, பேரின்ப பெருவாழ்வு அடையலாம் என்கிறார்கள்.

எப்படி செல்லலாம்.?
👇

நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து, டாக்ஸி வசதிகள் உள்ளன. அல்லது நீங்கள் சொந்த வாகனத்தில் வந்தால் வந்து அங்கிருந்து கும்பகோணத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் வரலாம். அல்லது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த புண்ணியதலம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


அட சிரிச்சுட்டு போங்கப்பா...

 அட சிரிச்சுட்டு போங்கப்பா....😄

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?

இப்ப மருந்து கொட்டிடுச்சி.

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா...!!

அய்யோ...!! அப்பறம்?

“சாத்திட்டா”

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்
காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா?

முழுகாம இருக்கா..!!!???....

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி
இருக்கு?

போயும் போயும்v இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு
தோணுது டாக்டர்…!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"

"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

அதனால…?

வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?"

"நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்?

ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில்
கோடீஸ்வரனாகி விடுவான்,
கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸி’ல
ஏழையாயிடுவாரு…!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"

"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

💃🏽உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!!!

 😜😜😜😄😄😄😃😃😃

😂 சிரிப்போ சிரிப்பு.😂
`````
அவர்:  ஏன்டா உங்க அப்பன் பேரை....,
  "பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச".......??

இவன்:
   என் பெயர் கெட்டுப் போகாம பாத்துக்கன்னு....,

  அவர்தான் சொன்னாரு....!!
           😁😁😁😁😁

அவர்:
   "ஜிம்முக்கு போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம்"...!!

இவர்: எப்படி.....?

அவர்: ரெண்டு கையிலேயும்....,
 " சாம்பார் வாளிய தூக்கிட்டு போறமாதிரி நடப்பாங்க".....!!
              😁😁😁😁

அவர்:
   ஆண்கள்ல 65% பேர்....,
" மனைவி சொல்றதை அப்படியே கேப்பாங்க"......!!

இவர்: அப்ப மீதி 35% பேர்.....?

அவர்:
  அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல.
           😂😂😂😂

சோமு: நாட்ல அநியாயம் நடக்குது..

பாபு:எப்புடி சொல்றீங்க.?

சோமு:
  "வெயில் காலத்துல மோர் பந்தல் வைக்கிற மாதிரி"......,
 " மழை காலத்துல டீ பந்தல் வைக்கமாட்றாங்களே"....!!
           😁😁😁😁

அவன்:
  இதோ போறானே...., "அவனுக்கு பொது அறிவு சுத்தமா இல்ல".....!!

இவன்: எப்டி சொல்றீங்க?

அவன்:
  பழமொழிக்கு இங்கிலீஸ்ல என்னன்னு கேட்டான்.....!!

 "புரூட் லாங்வேஜ்'னு சொன்னா ஒத்துக்க மாட்றான்"......!!
          😂😂😂😂

டாக்டர்:
   இந்த மருந்தை.....,
" காலைல வெறும் வயித்துல சாப்பிடுங்க".......!!

வந்தவர்:
 "ஒரு பனியன்கூட போட்டிருக்ககூடாதா டாக்டர்"...?
            😂😂😂😂

கணவன்:
  என்னடி சாம்பார்ல  இரண்டு ரூபாய் காயின் கிடக்குது"......?

மனைவி:
 நீங்கதானே....,
   "சமையலில் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க".....?
         😁😁😁😁

அவர்:
    "அர்ச்சனை உங்க பேருக்கா".....?

இவர்:
   "சாமி பேருக்கே பண்ணுங்க ஐயரே".....!!

 "எனக்கு தினம் வீட்டுல அர்ச்சனை நடக்குது".....!!
     😁😁😁😁😁

தீபாவளி எபெக்ட்...
```````
மனைவி:
    எனக்கு....,
 " இதே டிசைன்ல வேற கலர்ல காட்டுங்க"..... !!

கணவன்:
 அடியேய்.....!!
  துணி எல்லாம் எடுத்து முடிச்சு....,
  "நாம இப்ப காய்கறி கடைல இருக்கறோம்"....!!

நீ எடுத்தது புடலங்காயை...., அதுல வேற கலர் டிசைன் கிடையாது".....!!
            😂😂😂😂

தாத்தா :
  அந்த காலத்துல உன் வயசுல ......,
 "நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா  வீட்டுக்கு வரும் போது......,

 "பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்"....!! தெரியுமா .......?

பேரன் :
 "இப்போ அப்படியெல்லாம் செய்ய முடியாது தாத்தா".....!!

 "எல்லா கடையிலயும் நிறைய C C TV கேமரா வச்சுருக்காங்க".......!!
          😁😁😁😁😁

ஐந்து நன்மைகள்.

ஐந்து நன்மைகள்.
                   ————————-
நெரிசலான நாகர்கோயில் நகர வீதிகளில் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள்... யாருக்கும் எதற்கும் நேரமில்லை. ஓடுகிறார்கள், ஓடுகிறார்கள்...  ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ஓட்டம் எங்கே போய் முடியும்?. என்ற கவலையில் நானும்... ஏனென்றால் அந்த கூட்டத்தில் நானும் ஒருவன் அல்லவா?

போத்தீஸ் சூப்பர் மார்க்கெட்டை நோக்கி என்னுடைய அன்றைய பயணம். போத்தீஸிலிருந்து தள்ளுபடி விலையில் கொஞ்சம் காய்கறிகள் வாங்க வேண்டும் (வீட்டுக்கார அம்மாவின் உத்தரவு)என்பது அன்றைய லட்சியம். கலக்ட்ரேட் ரோட்டில் வழியோர வாணிபம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை கவர பல குரல்களில் சப்தமிடுகிறார்கள். அதில் சிலருடைய வசனங்களை கேட்கும்போது சிரிப்பு வரும். என்றாலும் இதெல்லாம் அவர்களுடைய வயிற்றுப்பிழைப்புக்காக என்பதை நினைக்கும்போது நம்மையறியாமல் ஒரு கவலையும் வரத்தான் செய்கிறது.

அன்றைய ஓட்டத்தில் ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது. “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”.

திரும்பி பார்த்தேன். ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். பக்கத்தில் இருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன். அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்).       

“அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”.

கண்டிப்பாக..... சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம். முதல் நன்மை.

சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்றீ... சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும். ( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்களுடைய விளம்பரம்). இது இரண்டாவது நன்மை.

மூன்றாவது நன்மை என்ன என்று அறிய ஆவலுடன் அவரைப் பார்த்தேன். சார் சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் கேட்கும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டும். எங்களிடம் நீங்கள் விலை பேசி வாங்கலாம். நூறு ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு கேட்டாலும் தருவோம். ஏனென்றால் எங்கள் வயிற்றுப்பிழைப்பு இது. எங்களுக்கு வேறு வருமானம் ஒன்றும் இல்லை. 20 ரூபாய் லாபம் இது மூன்றாவது நன்மை.

சரிதான் என்று தலையாட்டிவிட்டு அவரையே பார்த்தேன். “சார் நான்காவது இந்த காய்கறிகள் பக்கத்து கிராமங்களில் நாங்களே இயற்கையாக  பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒன்றும் தெளிக்காமல் விவசாயம் செய்தது. இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த தீங்கும் வராது சார்...

அவர் சொல்வது அனைத்தும் சரியாகவே எனக்கு பட்டது. மேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து, விஷம் சேர்த்த காய்கறிகளை கியூவில் நின்று வாங்குவதற்கு தயாராகும் நாம் இதையெல்லாம் சிந்திக்கிறோமா?.....

சிந்தனையில் நிற்கும்போதே நான் கொடுத்த லிஸ்டில் உள்ள காய்கறிகளை பேக் செய்து கொடுத்தார். அவர் கேட்ட தொகையை கொடுத்தேன். பிறகு நான் அவரிடம்,  “எல்லாம் சரி ஐந்தாவது நன்மை என்னவென்று சொல்லவே இல்லையே” என்றேன் ஆவலுடன்.

அவர் செயறில் இருந்த பையனை காண்பித்து, “இது என்னுடைய மகன். இவனுக்கு ஏழு வயதாகிறது. இவனுடைய அம்மா ஒரு ஆக்சிடென்றில் இறந்து விட்டாள். இவனுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. இவனுடைய மருத்துவத்திற்காக நான் யாரிடமும் கையேந்தியதில்லை. நீங்கள் விலை பேசாமல் கொடுத்த இந்த பணத்தின் ஒரு பகுதி இவனுடைய மருத்துவ செலவிற்கு உபயோகப்படும். இதுவும் நீங்கள் செய்யும் ஒரு சாரிட்டிதான் இதற்குரிய நன்மை இறைவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும். இதுதான் நான் சொன்ன ஐந்தாவது நன்மை.

புன்னகையோடு அவர் சொல்லி நிறுத்தினாலும் அவருடைய கண்கள் நிறைந்திருந்தது....
நானும் கண்ணீரை மறைக்க முயன்று தோற்றேன்.

இது போன்ற துக்கங்களும், துயரங்களும் வழியோரங்களில் வியாபாரம் செய்யும் பலருக்கும் இருக்கலாம். நம்மால் இவர்களுக்கெல்லாம் உதவ முடியுமா???.

கோடிக்கணக்கில் மூலதனமுள்ள சூப்பர் மார்க்கெட் முதலாளிகளுக்கும், கார்ப்ரேட்டுகளுக்கும் பாக்கெட் நிறைக்க நாம் கொடுப்பதில் ஒரு பங்கை இதைப்போன்ற வழியோர வியாபாரிகளுக்கும் கொடுத்து உதவுவது அல்லவா உண்மையில் சாரிட்டி(தொண்டு).....

#படித்ததில் பிடித்தது. சில மாற்றங்களுடன்*

கீழப்பாவூர் நரசிம்மர்

கீழப்பாவூர் நரசிம்மர் 

நரசிம்மருக்கு நாளை என்பதில்லை !

இந்தியாவில் உள்ள நரசிம்மர் கோவில்களில் அபூர்வமானதும், வேறெங்கும் காண இயலாத பல்வேறு சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்

நரசிம்மருக்குத் தன் பக்தர்கள் மீது பிரியம் அதிகம். நம்மை அறியாமலே, எம்பெருமானின் நாமத்தை பிதற்றினாலே போதும், ஓடோடி வந்து காப்பான் என்று எம்பெருமானின் ஈகைக் குணத்தை எடுத்துக் கூறுகிறார் பொய்கை ஆழ்வார்.

முதன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் திருத்தலத்தில்.

மீண்டும் அவதாரம் எடுத்த தலம் கீழப்பாவூர்

அகோபிலத்தில் இருந்து வைகுண்டம் திரும்பிவிட்டாலும் நரசிம்மரின் மனம் முழுவதும் பக்தர்களைச் சுற்றிச் சுற்றியே வந்ததாம்.

கலியுகத்தில் கலி புருஷனின் மாயையில் சிக்கி, பக்தர்கள் அல்லலுறுவார்களே, அவர்களை மாயையில் இருந்து விடுவித்துக் காக்க வேண்டு மெனத் தவித்தார் திருமால்.

அகோபிலத்தில் வெறும் இரண்டு நாழிகைகள் நீடித்திருந்து பணியை முடித்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்பிவிட்டார்.

ஆகவே மீண்டும் பூலோகம் செல்ல வேண்டும் என்றெல்லாம் கருதினார் எம்பெருமான்.

அதே நேரத்தில் இங்கு பூலோகத்தில், சில ரிஷிகளுக்கு அவதார நரசிம்மரின் உக்கிர சொரூபத்தைத் தரிசிக்கும் ஆவல் மேலோங்கியது.

தவம் புரிந்துதானே திருமாலை தரிசிக்கமுடியும். எனவே, காசியப மகரிஷி, வருண பகவான், சுகோஷ முனிவர் ஆகியோர் கடுந்தவம் புரியத் தொடங்கினர்,

ரிஷிகளின் தவத்திற்கு மனமிரங்கினார் மாலவன். பொதிகை மலையில் உள்ள மணிமுத்தாறு தீர்த்தத் தில் நீராடி அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் தவத்தை தொடர்ந் தால் நரசிம்ம தரிசனம் கிட்டும் என அசரீரியாகக் கூறினாராம் மகா விஷ்ணு.

ரிஷிகளும் அவ்வாறே செய்ய, ரிஷிகளின் தவபூமி வைகுண்டமாக மாறியது.

காரணம் மகா உக்கிரமூர்த்தியாக 16 திருக்கரங்க ளுடன் நரசிம்மர், தேவியுடன் காட்சி கொடுத்தார்.

அர்ச்சாவதாரத் திருமேனியில் எழுந்தருளினார்.

 மன்னர்கள் கோயில் எழுப்பி இந்த நரசிம்மரை ஆராதிக்கத் தொடங்கினர்.

புராணப் பெருமை பெற்ற பூலோக வைகுண்டமாக விளங்கும் இந்த புண்ணிய ஸ்தலம்தான் தற்போதைய கீழப்பாவூர் ஆகும்.

இங்கே உக்கிரமாக இருக்கும் நரசிம்மரை சாந்தப் படுத்த, அவரது சன்னதிக்கு எதிரே மகாலட்சுமி அம்சமாகச் சதுர வடிவில் தெப்பக்குளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு கங்கா நர்மதா சம்யுக்த நரசிம்ம புஷ்கரணி என்பது திருநாமம்.

நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் இங்கே விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.

அன்றைய தினம் மாலையில் 16 வகை மூலிகைகளால் நரசிம்மரின் மூல மந்திர ஹோமமும் திருமஞ்சனமும் நடைபெறும்.

16 திருக்கரங்களுடன் காட்சி தரும் நரசிம்மர் கோயில்கள் மூன்று இடங்களில் உள்ளன. ராஜஸ்தான் மாநிலம், புதுச்சேரி அருகே சிங்ககிரி மற்றும் கீழப்பாவூர்.

தென்காசி திருநெல்வேலி சாலையில் உள்ள பாவூர்சத்திரம் என்ற ஊரிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் சுரண்டை என்ற நகருக்கு செல்லும் வழியில் கீழப்பாவூர் அமைந்துள்ளது.

இத்தலம் சுமார் 1,100 ஆண்டுகள் புராதனச் சிறப்புமிக்கது

மன்னர்கள் காலத்தில் இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்று அழைக்கப்பட்டுள்ளது.

Why Chant Vishnu Sahasranamam?

Why Chant Vishnu Sahasranamam?

1. Chanting Vishnu Sahasranamam awakens our love for God.

2. Chanting Vishnu Sahasranamam brings liberation as a side benefit along the way.

3. When you chant Vishnu Sahasranamam, you automatically develop knowledge and detachment.

4. Chanting Vishnu Sahasranamam gets you out of the endless cycle of birth and death.

5. It is the most effective means of self-realization in the present Age of Quarrel (Kali-yuga). Nothing else works nearly as well.

6. Chanting Vishnu Sahasranamam cleanses the heart of all illusions and misunderstandings.

7. By chanting Vishnu Sahasranamam, you become free from all anxieties.

8. Chanting Vishnu Sahasranamam brings you to self-realization—and shows you how to act as a self-realized soul.

9. Chanting Vishnu Sahasranamam keeps you ever mindful of Krishna, the reservoir of pleasure.

10. There are no hard and fast rules for chanting. You can chant anywhere, any time, under any circumstances.

11. MahaVishnu Himself is fully present in the transcendental sound of His name. And the more you chant, the more you realize it.

12. All other Vedic mantras are included in the chanting of  Vishnu Sahasranamam. So just by chanting this mantra, you get the benefit of all others.

13. Chanting Vishnu Sahasranamam purifies not only you but every living entity around you. Whoever hears the chanting gets spiritual benefit.

14. A person who chants Vishnu Sahasranamam develops all good qualities.

15. You can chant Vishnu Sahasranamam softly for personal meditation or loudly with your family or friends. Both ways work.

16. Shirdi Sai baba chanted Vishnu Sahasranamam, and so did great souls in the past. So why not you?

17. It’s free. Chanting Vishnu Sahasranamam never costs you money.

18. Chanting Vishnu Sahasranamam brings the highest states of ecstasy.

19. There are no previous qualifications needed for chanting Vishnu Sahasranamam. Young or old, anyone can chant—from any race, any religion, or any country of the world.

20. Even if you don’t understand the language of the mantra, it works anyway.

21. Chanting Vishnu Sahasranamam brings relief from all miseries.

22. Chanting Vishnu Sahasranamam is easy. When the best way is also the easiest, why make life hard for yourself?

23. Chanting Vishnu Sahasranamam invokes spiritual peace—for you and for those around you.

24. When you chant Vishnu Sahasranamam, Lord Narayana Himself becomes pleased.

25. When you chant Vishnu Sahasranamam, Lord Narayana dances on your tongue.

26 Chanting Vishnu Sahasranamam can help you return to Vaikunta world, the eternal abode of full happiness and knowledge.

27. Chanting Vishnu Sahasranamam frees you from the reactions of all past karma. Chanting His  name even once, purely and sincerely, can free you from the reactions of more karma than you could possibly incur.

28. Chanting Vishnu Sahasranamam counteracts the sinful atmosphere of Kali-yuga, the present Age of Hypocrisy and Quarrel.

29. By chanting Vishnu Sahasranamam you can relish at every step the full nectar that can quench the thirst of the soul.

30. The more you chant the Sahasranamam, the better it gets.

31. If you look through all the Vedic scriptures, you’ll find nothing higher than the chanting of Vishnu Sahasranamam.

Sunday, October 28, 2018

அம்மா

அம்மா

"வீட்ல சும்மா தான இருக்க"

எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..

" நீ சும்மா தான மா இருக்க..
இது செஞ்சி குடுத்திடு மா..."

'எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன'ன்னு தோனுச்சு.

வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பிட்டாங்க.

அவரவர்க்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து வீட்டேன்.

 இன்றைக்கு சும்மா இருப்போம் என்ன தான் ஆகும் பாப்போம்.

மாலை கணவரும், பசங்களும் வீட்டிற்கு திரும்பினார்கள்.

 "அம்மா பசிக்குது மா..
எதாவது எடுத்துட்டு வா மா,"

" எனக்கும் தலைவலிக்குது ஒரு காபி போட்டு தாடி", என்று சொல்லிக் கொண்டே உள்ள நுழைந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

வாசல் முழுவதும் குப்பையால் நிறைந்து இருக்கிறது.

 வீட்டின் உள்ளே சென்றால் காலையில் செல்லும் பொழுது இரைத்த பொருட்கள் எல்லாம் அனைத்தும் கிழே இருக்கின்றன.

காலையில் துடைத்த ஈரமான துண்டுகள் அனைத்தும் நாற்காலியில் கூலமாக இருக்கின்றன.

ஷுபாலிஷ் செய்யும் டப்பா திறந்தே இருக்கு.

 தலைக்கு தடவும் ஜெல்லும் ஓபன் பன்னி  இருக்கு.

 பசங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

 அவர்கள் புத்தகங்கள் ஆங்காங்கே இருக்கின்றன.

 விளையாட்டு பொருட்கள் இரைந்து கிடக்கின்றன.

 சீருடைகள் தோய்க்காமல் அப்படியே போடப்பட்ட இடத்தில் இருக்கின்றன.

இவ எங்க தான் போனான்னு சமையல் அறைக்குள் சென்று பார்த்தால், பாத்திரங்கள் கழுவாமல் நாற்றம் அடித்து கொண்டு இருக்கின்றன.

'எங்க தான் போனாலோ.. உடம்பு சரி இல்லையோ?'

 ரூமிற்கு சென்றால், இரவு உபயோகபடுத்திய தலையணை,போர்வை எல்லாம் மடித்து வைக்காமல் இரைந்து கிடக்கின்றன.

'சரி பாத்ரூமில் இருப்பாள் கதவு தட்டி பாக்கலாம்'னு திறந்தா, காலையில் போட்ட சோப் டப்பா முழுவதும் தண்ணீரில் முழுகிக் கரைந்து போய் தரை முழுவதும் கொழ கொழனு ஆகிடுச்சு.

 அழுக்கு துணிகள் அசிங்கமாய் தொங்கி கொண்டு இருந்தன.

ஒன்றும் புரியாமல் பதற்றத்துடன் மாடியில் உள்ள அறைக்குள் சென்றார்கள்.

கையில் ஒரு நாவல் புத்தகம் ஒன்றுடன்,  நாற்காலியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்தி கொண்டு இருந்தாள்.

"என்னடி ஆச்சு உனக்கு ?
 வீடு என் இப்படி இருக்கு? அம்மா என்ன ஆச்சு மா உனக்கு?"

பதட்டமான கேள்விகள்.

"நீங்க எல்லோரும் தான் சொல்லிட்டு போனீங்க, 'வீட்ல சும்மா தான இருக்க'ன்னு.

 அதான் சும்மா இருக்கலாம்னு!!

கணவனுக்கு தன் தவறு உணர்ந்தது.

 இந்த வார்த்தையை சொல்வது தவறு.

அவ எதுவும் செய்யவில்லை என்றால் வீடு வீடாகவே இருக்காது.

"என்னை மன்னித்து விடு" என்று கூறினார்.

 பிள்ளைகளும் தம் தவறை உணர்ந்து "அம்மா மன்னிச்சிடு மா.இனி அப்படி சொல்ல மாட்டோம். நீ இல்லைனா வீடு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுகிட்டோம்."

நான் சொல்வதால் தான் என் பசங்களும் இந்த வார்த்தையை அவ கிட்ட சொல்லி கஷ்டபடுத்தறாங்கனு அவருக்கு புரிந்தது.

இனி எப்பொழுதும் தன் மனைவியை பிள்ளைகளிடமோ, வெளி ஆட்களிடமூம் தாழ்த்தி பேசமாட்டேன் என்று மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தார்.

"நீ இங்கயே இரு நா போய் உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்" கணவர் கிளம்பினார்.

பசங்களும் "நாங்க உனக்கு ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரோம் மா நீங்க வெயிட் பண்ணுங்க மா".

"யாரும் எதுவும் செய்ய வேண்டாம். எல்லோரும் போய் டிவி பாருங்க. நான் பத்து நிமிடத்தில் உங்களுக்கு கேசரி செய்து தரேன் சாப்பிடுங்க" என்றாள். 

மனதில் சந்தோஷத்துடன் சமையல் அறைக்கு சென்றாள்.

இது தான் அம்மாவின் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌குணம்.

பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!

அருகம்புல் பொடி 

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பொடி

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

கடுக்காய் பொடி

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி 

அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கரா பொடி

தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி 

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி

 மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி

இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி

மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி

ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

ஜாதிக்காய் பொடி

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பொடி

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி

மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி 

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

வேப்பிலை பொடி

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி 

வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி

தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி 

உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி

காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியா நங்கை பொடி

அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி,

மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி 

மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

கோரைகிழங்கு பொடி

தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி 

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருஙகைவிதை பொடி

ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி

கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி

பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர்

 குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி 

சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி 

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி

சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி

பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி 

சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி

சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி 

இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி 

சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி 

பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாழை பொடி

உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி

கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

நன்றி வணக்கம்.