நினைத்தலே கிடைக்கும் மஹா பெரியவா கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் காஞ்சி காமகோடி மஹா பெரியவா அனுக்கிரகம் நடமாடும் தெய்வம் காஞ்சி காமகோடி மஹா பெரியவா ஜெய ஜெய சங்கர ஹர ஹர ஹர சங்கர
பெரியவா சரணம் !!
“”அது சரி! உங்க அகத்திலே சுமங்கலிப் பிரார்த்தனைஎல்லாம் ஒழுங்கா நடக்கிறதா?”"
கலியுகத்திற்கு உகந்த பூஜை சுமங்கலி பூஜை. இப்பூஜையினால் கொடிய பாவங்களும் தோஷங்களும் விலகும். இப்பூஜையை பலரும் கூடி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறிய அளவிலாவது செய்ய வேண்டும் என்பது காஞ்சிப்பெரியவரின் விருப்பம்.
ஒரு சந்தர்ப்பத்தில் வயதான தம்பதியர், தட்டில் பழம், பூ, அம்பாளுக்கு பட்டுப் புடவை, ரவிக்கையோடு பெரியவரைக் காண காஞ்சிபுரம் வந்திருந்தார்கள். மாயவரத்தில் இருந்து வந்த அவர்களிடம், “”காவிரிக் கரையில் இருந்து வரும் நீங்கள் துலா ஸ்நானம் (ஐப்பசி மாதம் காவிரியில் நடக்கும் தீர்த்த நீராடல்)செய்து விட்டீர்களா?” என்று கேட்டார்.
தம்பதிகள் இருவரும்,””ஆமாம்! சுவாமி! துலாஸ்நானம் ஆயிடுச்சு!” என்றனர்.
பெரியவர் அடுத்த கேள்வியாக,””மாயவரம் ஆற்றங்கரைக்கு துலாஸ்நானம் செய்ய ஏகபட்ட சுமங்கலிகள் வருவாளே!” என்றார்.
“”வருவா” என்றனர் அவர்கள்.
“”அது சரி! உங்க அகத்திலே சுமங்கலிப் பிரார்த்தனைஎல்லாம் ஒழுங்கா நடக்கிறதா?” என்று பெரியவர் கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் தம்பதியர் முகம் வாடினர்.
“”முன்பெல்லாம் ஒழுங்காக நடந்தது. இப்போ சுமங்கலி பிரார்த்தனை நடந்து பல வருஷமாச்சு!” என்று சொல்லி அந்த அம்மையார் கண்ணீர் விட்டு அழுதார். அந்த அம்மாளின் கணவர் மனைவியை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்தினார்.
பெரியவரிடம்,””சுவாமி! என்னோட கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண். ஒரே ஒரு பெண். அவளும் மூன்று வருஷத்திற்கு முன் இறந்துவிட்டாள். அதற்கு முன்பே சுமங்கலி பிரார்த்தனையை நடத்தாமல் விட்டுவிட்டோம். இப்போ எங்கள் குடும்பத்தில் வசதிக்கு எந்தக் குறைச்சலும் இல்லை. ஆனா, குடும்பத்தில் யாருக்கும் சுகமோ, மனநிம்மதியோ இல்லை. என் ஐந்து வயது பேரனுக்கு பேச்சு வரவில்லை. என் மூத்த நாட்டுப்பொண்ணுக்கோ (மருமகள்) ரத்தப் புற்றுநோய். மனநிம்மதி வேண்டியே உங்களைத் தரிசிக்க வந்தோம்,”என்று சொல்லி முடித்தார்.
சற்றுநேரம் மவுனம் காத்த பெரியவர், “”இப்போ என் முன் வைத்திருக்கும் பழம், பூ தான் உங்களுக்கு கொடுக்கும் பிரசாதம். கொண்டு வந்த பட்டுப்புடவையை மூத்த நாட்டுப் பொண்ணுக்கு கொடுத்து கட்டிக்கச் சொல்லுங்க! இனிமேல் பட்டுப்புடவையே வேண்டாம். அது நல்லதல்ல. அது ஒண்ணும் உசத்தியானது கிடையாது. ஆடம்பரம் நமக்கு எதுக்கு? குலதெய்வத்திற்கு கொண்டு வந்த பூவைப் போடுங்கோ. அதோடு முக்கியமான ஒரு காரியமும் செய்ய வேணும்,”என்று சொல்லி பெரியவர் பேச்சை நிறுத்தினார்.
கேட்டுக் கொண்டிருந்த தம்பதியர் வணங்கி, “”பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் அதை அப்படியே செய்றோம்” என்று கண் கலங்கினர்.
“”உன் சகோதரியின் நினைவுநாளில் 108 சுமங்கலிகளுக்கு சாதாரண நூல் புடவை, ரவிக்கை, மங்கல திரவியங்கள் கொடுப்பதோடு, முடிஞ்சா அன்னதானமும் செய்யவேண்டும். அதன்பிறகு எல்லாம் நன்மையாகவே முடியும்!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
தம்பதிகள் பெரியவரின் உத்தரவுபடியே சுமங்கலி பூஜையைச் செய்தனர். மூன்று ஆண்டுகளில் பேரனும் பேசத்தொடங்கி விட்டான். மூத்த மருமகளும் புற்று நோயிலிருந்து முழுமையாக குணம் பெற்றார். பெரியவரின் வழிகாட்டுதலால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.
--------------------------------------------------------
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
காமகோடி தரிசனம் காணக்காணப் புண்ணியம்
*'பெரியவா, தன்னை அகிஞ்சனன் என்று எப்படிச் சொல்லலாம்' ?*
சொன்னவர்-பிரும்மஸ்ரீ டி.எஸ்.நடராஜ சாஸ்திரிகள்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஸ்ரீமடத்தின் நிர்வாகத்திலுள்ள கோவில்களில் நித்யபூஜை,விசேஷ பூஜை,உற்சவம் எல்லாம் ஒழுங்காக நடைபெறவேண்டுமே? அந்தக் காலத்தில் ஸ்ரீமடம் நிர்வாகத்திலிருந்த பல கோவில்களில் பொருளாதாரம் வரவு-சிலவுக்கு ஈடுகட்ட முடியாத நிலையில் தான்இருந்தது. ஸ்ரீபுதுப்பெரியவாள் இந்தத் துறையில் கவனம் செலுத்தினார்கள். 'ஸ்ரீபங்காரு காமாக்ஷி அம்மன் நித்ய பூஜா டிரஸ்ட்' என்ற அறக்கட்டளையைத் துவக்கினார்கள்.அந்த அறக்கட்டளையின் முழு விவரத்தையும், மகாப்பெரியவாளிடம் விண்ணப்பித்து அவர்கள் இசைவைப் பெற்றுக்கொண்டு வரும்படி பணித்தார்கள், புதுப் பெரியவாள்.
டிரஸ்ட் நிர்வாகிகளுடன், ஸ்ரீ அம்மன் பிரசாதம் எடுத்துக் கொண்டு நானும் செல்லவேண்டும் என்று உத்திரவாயிற்று.
மகாப் பெரியவாள் ஷோலாப்பூர் அருகில் ஒரு கிராமத்தில் முகாம்.
முகாம் இருப்பிடத்தைத் தேடிப்பிடித்துக்கொண்டு சென்றோம்.
பெரியவாள் முன்னிலையில் நின்றோம். அணுக்கத் தொண்டர்,சற்று பெரிய குரலில் கூறினார்.
'தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில் டிரஸ்டிகள் தரிசனத்துக்கு வந்திருக்கா. ஸ்தானிகர் பிரஸாதம் கொண்டு வந்திருக்கார்...'
'முதலில் பிரசாதம் கொடு'-என்று சமிக்ஞை.
ஒரு மூங்கில் தட்டில், ஒரு சாதரா, வாடிப் போன நிர்மால்ய மாலை,புஷ்கலமாகக் குங்குமம்.
குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு, மாலையை கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள்.
"இன்னும் என்ன இருக்கு.."
'அம்பாள் பிரசாதமாக, ஒரு சால்வை..'
மகாபெரியவா கண்களில் ஒரு தேஜஸ்.
நெஞ்சில் ஏதோ நினைவோட்டம்.
"ஸ்தானீகரைக் கூப்பிடு.."
நான் சற்று அருகே சென்றேன். பாதாதிகேசம் அருட்புனலால் ஒரு நீராட்டு.
"நீ....சங்கரசாஸ்திரிகள் புத்திரன் தானே?.
'ஆமா..'
"என்ன ஒற்றுமை பார்! நான் பட்டத்துக்கு வந்தபோது,அவர்தான் சாதரா கொண்டு வந்து, பூவாலேயே அபிஷேகம் பண்ணி... ஹ்ம்?..
அப்புறம் பிரசாதம் கொடுத்தார். மடத்தின் மூலமா, அவருக்குப் பதில் மரியாதை கூடப்பண்ணினோம்...தெரியுமோ?...."
'அப்பா சொல்லியிருக்கார்...'
யுகமாகக் கழிந்த இரு விநாடிகள்.
"நீயும் அவரைப் போலவே... சாதரா, நிர்மால்யம், குங்குமம் கொண்டு வந்திருக்கே. உனக்கும் பதில்மரியாதை செய்யணும்...ஆனா..என்னிடம் ஒண்ணுமேயில்லை; நான், அகிஞ்சனன்.(ஒரு பைசா கூட வைத்துக்கொள்ளாதவன்..)
(ஸ்ரீமடம் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டபடியால், இவ்வாறு கூறினார்கள்.)
மௌன இடைவெளி.
"இவனுக்கு,ஒரு முத்திரைப்பவுன் வாங்கி பதில் மரியாதை செய்தால், தேவலை. உங்களால் யாராலேயாவது முடியுமோ?..."
அந்த கிராமத்தில் நகைக்கடை ஏது?
சில மாதர்கள் நகைகளைக் கழற்றிக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால்,பெரியவாள் முத்திரைப் பவுன் அல்லவா,கேட்கிறார்கள்.?
இந்தப் பரபரப்பில்,எனக்கு அழுகையே வந்து.விட்டது. 'பெரியவா, தன்னை அகிஞ்சனன் என்று எப்படிச் சொல்லலாம்' என்று மனம் பரிதவித்தது.
கண்ணீர் விட்டபடியே நமஸ்காரம் செய்தேன்.
'பெரியவாளோட அனுக்ரஹம் எங்களுக்கு இருந்தால் போதும்..காமாக்ஷி கருணையிலே நாங்கள் எல்லாம் சௌக்கியமாகவே இருக்கோம்.
விம்மினேன், பெரியவா பரிவுடன் கடாக்ஷித்தார்கள்.
"இதே எண்ணத்தோடே இருந்து கொண்டிரு. கடைசிவரை க்ஷேமமாய் இருப்பாய்..."
ஆனால்,பெரியவாள் வெற்றுச் சொல்லுடன் நின்று விடவில்லை.முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தனிகரிடம் சொல்லி, விரைவில் முத்திரைப் பவுன் அனுப்பிவைத்தார்கள்.
ஸ்தானீர்களாய நாங்கள் பங்காரு காமாக்ஷிக்கும்பரமாசார்யாளுக்குமிடையே, எந்த ஒரு பேதத்தையும் காண்பதில்லை.
No comments:
Post a Comment