Friday, September 16, 2022

உயிருடன் இருக்கும் போது செய்ய வேண்டிய வேலைகள்

 ஒரு முக்கிய அறிவிப்பு *நாம் உயிருடன் இருக்கும் போது செய்ய வேண்டிய முக்கிய வேலைகள்*

ஆயுள் காப்பீடு, வங்கி கணக்கு, போஸ்ட் ஆபீஸ் முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட், பங்கு முதலீடு வைத்திருப்பவர்களுக்கு சிறு ஆலோசனை

1 வாரிசு (nomination) நியமனம் செய்யப் பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்

2 வாரிசின்  பெயர் ஆதார் கார்டு, பான் கார்டு , வங்கிக் கணக்கு மூன்றிலுமே சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

3 முகவரியில் மாற்றம் இருந்தால் உடனடியாக மாற்றவும் முகவரி அத்தாட்சி என்பது நீங்கள் இருக்கும் வீட்டிற்கு இருந்த வீட்டிற்கு அல்ல

4  நீங்கள் புதிய வீட்டிற்கு குடியேறினீர்கள் என்றால் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று POSTAL ID படிவத்தினை பூர்த்தி செய்து பணம் செலுத்தி புதிய வீட்டிற்கான முகவரி அத்தாட்சியை பெறலாம் அதை வைத்துக்கொண்டு எல்லா ஆவணங்களையும் மாற்றிக்கொள்ளலாம்

5  திருமணமான பெண்கள் அவர்கள் பெயருடன் கணவரின் பெயரை சேர்த்துக் கொள்கிறார்கள் அப்படி சேர்த்தால் உடனடியாக பான் கார்டு ஆதார் கார்டு வங்கி கணக்கு எல்லாவற்றிலும் அந்த மாற்றம் இடம்பெற வேண்டும்

6 பெயர் மாற்றம் இருந்தால் government gazette இல் மாற்றி வைத்துக்கொள்வது நல்லது அதற்கு 425 ரூபாய் மட்டுமே செலவு

7 வங்கியில் கணக்கு தொடங்கும் போதும் கணவன் மனைவி இருவருமே இயங்கும் படியான E or S (either or survivor) வைத்துக் கொள்வது நல்லது

8) ஓய்வுதியம் பெறுவோர் கணவன் மனைவி(E or S) கணக்கு வைத்துக் கொள்ளலாம் ஆனால் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வாரிசு மட்டுமே நியமிக்க முடியும் 

9 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது கண்டிப்பாக(mode of holding anyone or survivor) இருக்க வேண்டும்

10  பங்குசந்தையில் முதலீடு செய்திருந்தால் அதை  உடனடியாக  D-MAT கணக்கு ஆரம்பிக்கவும்

11) முக்கியமாக LIC பாலிசி வைத்திருப்பவர்கள் முகவரி மாற்றம் வங்கி கணக்கு எண் மாற்றம் உடனடியாக மாற்றவும் ஏனென்றால் எல்ஐசி மட்டுமே முதிர்வு தேதியன்று உங்கள் வங்கி கணக்கில் உங்களுக்கு சேர வேண்டிய தொகையை வரவு வைக்கும் அல்லது கடைசியாக பதிவு செய்த முகவரியில் பதிவுத் தபாலில் உங்கள் முதிர்வு விவரத்தை தெரிவிக்கும்

12) தற்போது வசிக்கும் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடி போயிருந்தால் கூட கேஸ் ,ரேஷன், எல்ஐசி பாலிசி, வங்கி கணக்கு, ஆதார் கார்டு ,பான் கார்டு, கேபிள் டிவி கனெக்ஷன் மாற்றுவது போல மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்

13) முக்கியமாக திருமணமாகாதவர்கள் அவர் கூடப் பிறந்தவர்களுடன் வங்கி கணக்கு (E or S) வைத்துக் கொள்ளலாம் 

14) நீங்கள் உங்கள் குடும்பத்தை நேசிப்பவராக இருந்தால் ஒருவேளை உங்கள் வருமானம் நின்று போனால் (விபத்து, வேலை இழப்பு, மரணம்) உங்கள் குடும்பத்தை பராமரிக்க பணத்தை கொடுக்கவும் அது எவ்வளவு (மாத செலவு X12X20)

15) குழந்தைகள் பெயரில் முதலீடு, இன்சூரன்ஸ், தவிர்க்கவும்

மேற்கூறிய 15 எப்பொழுது கடைபிடிக்க வேண்டும் *நாம் உயிருடன் இருக்கும்போது*

*பின்குறிப்பு இந்தப் பதிவை படித்தவுடன் பான் கார்டு ஆதார் கார்டு எங்கு இருக்கிறது கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்*

No comments:

Post a Comment