அம்மாளு பாட்டியின் அமெரிக்க பயணம் ....(நாமும் செல்வோம்)
சேஷு (சேஷையர்), கிச்சா (கிருஷ்ணமுர்த்தி), விச்சு (விஸ்வநாதன்) இவர்கள் தான் அம்மாளு பாட்டியின் கணவர், மகன், பேரன் ஆவார்கள். அம்மாளு பாட்டி எப்பொழுதும் மற்றவர்களிடம் ஏதாவது கேட்டு கொண்டே இருப்பார். அந்த இடம் கலகலப்பாக இருக்கும். பேரன் விச்சு நன்கு படித்து இன்றைய நடப்புபடி அமெரிக்காவில் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருக்கிறான். அவன் வெளி நாட்டில் வேலைக்கு செல்லும் வரை பாட்டி அம்மாளு தான் வளர்த்தார். ஆதலால் பாட்டி மேல் தனி பிரியம். தினமும் skype ல் பாட்டியை பார்த்து பேசாமல் இருக்க மாட்டான். சில சமயங்களில் அழவும் செய்வான். இப்படி இருக்க அதே கம்பெனியில் வேலை பார்க்கும் சரஸ்வதியும் அவனும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள். சரஸ்வதியின் அப்பா போன் செய்து விஷயத்தை கூற இருவீட்டாரும் சம்மதித்தார்கள். பாட்டி விச்சுவிடம் பெண்ணை பற்றி கேட்க, அவனும் பாட்டியிடம் “அவர்கள் குடும்பம் மிகவும் ஆச்சராமான குடும்பம் என்றும், சரஸ்வதிக்கும் ஸ்லோகம், பாட்டுக்கள் தெரியும் என்று கூற, பாட்டி ok என்று கூறிவிட்டார். பெண்ணுடைய தந்தை covid pandemic காரணமாகவும், இப்பொழுது குறைய தொடங்கி விட்டதாலும், அமெரிக்காவில் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று கூற, விச்சு அப்பா கிச்சா சரி என்று சொல்லி நாங்கள் பத்து பேர் மட்டும் வருகிறோம் என்றும், அம்மா அப்பா வயது முதிர்வு காரணமாக வர இயலாது என்று கூற, அதை கேட்டு கொண்டு இருந்த அம்மாளு பாட்டி, “நான் கல்லு குண்டாக இருக்கிறேன், அப்பா வராவிட்டால் பரவாயில்லை, என்னையும் கூட்டிக்கொண்டு போகவேண்டும். என் பேரனோட கல்யாணத்தை நாம் பார்க்கணும். கண்ணுக்கு தெரியாத ஒரு தேசத்தில் பண்றேள். கட்டுசாத கூட வரைக்கும் நம்ம சம்பிரதாயத்தை ஒண்ணும் விடப்படாது. நான் வந்தாத்தான் அதெல்லாம் சரிப்படும்” கூறினார். உடனே கிச்சா “அம்மா, அவாளுக்கு சில விதிகள் இருக்கு. சமையல் கட்டெல்லாம் சோதனை பண்ணுவா. இங்க மாதிரி அங்க இருக்க முடியாது. மீறினா நம்மள இந்தியாவுக்கே திருப்பி அனுப்பிசுருவா. அதனால கல்யாணம் ஒரு நாள் தான்.” என்று கூற, எவ்வாறோ அடம் பிடித்து, அவர்களுடன் அமெரிக்கா செல்ல தயாரானார். எல்லோருக்கும் “வந்தே பாரத்” Air Indiaவில் டிக்கெட் reserve செய்தாயிற்று. (இவர்களுக்கு சுலபமாக எப்படி visa கிடைத்தது என்று குறுக்கு கேள்வியெல்லாம் கேக்க பிடாது, கேட்டேளா). கிளம்பும் முன், மகன் கிச்சா எல்லோரும் covid டெஸ்ட் எடுக்கணும் என்று கூற, முதலில் மறுத்த அம்மாளு பாட்டிக்கு கட்டாயமாக எடுக்க, அம்மாளு பாட்டி மூக்கை குடைந்ததால் ஒரு நாள் முழுவதும் தும்மி கொண்டு இருந்தார்.
ஆத்துக்காரர் சேஷு வை வேறு ஒருவர் பராமரிப்பில் விட்டு விட்டு, எல்லோரும் அமெரிக்கா கிளம்பினார்கள். விமான நிலையத்தில் டெஸ்ட் ரிப்போர்ட் பற்றியும், அம்மாளு பாட்டியை பற்றியும் கேட்க, பாட்டி பையனிடம் “கிச்சா இந்த அசமந்து என்னடா திருப்பி திருப்பி கேட்டுண்டு இருக்கான். இப்ப விடுவனா மட்டான ன்னு கேளு”, என்று கேட்க மகன் கிச்சாவும் பதில் ஏதும் சொல்லாமல் சென்றார். பின் செக்கிங் முடிந்து டெல்லி க்கு சென்றார்கள். டெல்லி யில் immigration முடிந்து சோதனை தொடங்கினார்கள். “ஏண்டா, இந்த போக்கத்தவாளுக்கு வேலையே இல்லையா. சென்னைலதாண்டா கைய தூக்கு கால தூக்குன்னு சொன்னா. திருப்பியுமா” என்று சத்தமாக பேசினார். மாட்டுப்பெண் ருக்கு (ருக்மணி) சோகமா இருக்கிறத பார்த்து “ருக்கு, ஏண்டி இப்படி முழிச்சுண்டு இருக்க” ருக்கு” இல்லம்மா செக்கிங் ல நகையெல்லாம் கழட்டி வைக்கணுமாம். அவா கட்டின தாலிய எப்படி கழட்டறது. அதான் என்ன பண்ணறதுன்னு தெரியலை” அம்மாளு “அவன் உன் கூடத்தாண்டி வந்துண்டு இருக்கான். ஒன்னும் ஆகாது. நான் பார்த்துக்கிறேன். பாவம்டி என் ஆத்துக்காரர் என்ன விட்டுட்டு இருந்ததே இல்லை. அதனால அவர் கழுத்துல ஒரு மஞ்ச கயிறு கட்டி, நான் வர வரைக்கும் இத அம்மாளு வா நினைசுக்கோங்கோ சொல்லி இருக்கேன்” என்று கூற, கூட வந்த ஒருவர் பாட்டிய பார்த்து “பின்ன ஏன் தாத்தாவ தனியே விட்டுட்டு வந்தேள்” என்று கேட்க, பாட்டி “பாவி மனுஷன், எங்கேயுமே கூட்டிடுண்டு போகமாட்டார். வீடு தான் சொர்க்கம் என்பார். ஒரு நல்லது கெட்டது ஒன்னும் பார்த்ததில்லை. அதான் அமெரிக்காவ்யாவது பார்க்கணும் வந்தேன். எந்த சுதந்திரமும் கொடுக்க மாட்டார். நான் தான் எடுத்துப்பேன்” என்று கூறினார். அவர்கள் பயப்பட்ட மாதிரி இல்லாமல், சோதனை முடிந்தது. விமானத்தில் ஏறி அமர்ந்தார்கள்.
ஒரு Air hostess” சிறு புன்னகையுடன் பாட்டிட்ட வந்து “ஆப்ஹோ க்யா சாஹியே” என்று கேட்டதோட சரி. அதன் பின் பாட்டிட்ட வரவே பயந்தார்கள். ஒரு வழியாக விமானம் சான் பிரான்சிஸ்கோ நகரம் வந்தடைந்தது.
திரும்பவும் அங்க immigration. ஆபீசர் கிச்சுவை பார்த்து “when you are returning back” என்று கேட்க, பாட்டி கிச்சாவிடம் “ஏன்டா அந்த அபிஷ்டு என்ன கேக்கறான்”
கிச்சா “நீங்க எப்ப திரும்பி போகபோரேல்ன்னு கேக்கிறார்” அம்மாளு பாட்டி “ஏன்டா இப்பதான் வந்து இறங்கி இருக்கோம். அதற்குள்ள ஏன்டா திரும்பி போக சொல்றான்” என்று சத்தம் போட்டு கேக்க, கிச்சா “அம்மா, கொஞ்ச நேரம் சும்மா இருக்கையா” என்று சத்தம் போட்டார். எல்லாம் முடிந்து ஒரு வழியாக வீடு வந்த சேர்ந்தார்கள்.
விச்சு வை ஏர்போர்ட் க்கு வரவேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். வந்ததும் விச்சு பாட்டியை கட்டிகொண்டான். பாட்டி விச்சு வை “பரவாயில்லை சந்தோசத்தில உடம்பு கொஞ்சம் பூசின மாதிரி இருக்கு. என்று கூறிவிட்டு அவன் மூஞ்சிய பார்த்து “ஏண்டா, இப்படி மூஞ்சிய மழு மழு ன்னு வழிச்சு விட்டுண்டு இருக்க. தலைமுடியெல்லாம் குறசுண்டு அந்நியன் அம்பி மாதிரி இருக்க, நாளைக்கு கோட்டு சூட்டு போட்டுண்டா, “பூம் பூம் மாட்டுக்காரன் மாதிரி இருக்கும் என்று கூற, விச்சுவும் “ பாட்டி, சரஸ்வதிக்கு இப்படி இருந்தாதான் புடிச்சிருக்கு. “ரெமோ” மாதிரி இருக்கேன்” ன்னு சொன்னா. சரஸ்வதி யாரு, உன் பொண்டாட்டியா” அவ சொன்ன சரியாதான் இருக்கும். சச்சு வை நாளைக்கு பார்க்கலாம் இல்லையோ”. விச்சு “பாட்டி சச்சு இல்ல, சரஸ்வதி . சரி நீ எப்படி வேணா கூப்பிட்டுக்கோ. நாளைக்கு பார்க்கலாம்” என்று சொன்னான். பாட்டி “நாளைக்கு என்னெல்லாம் ப்ரோக்ராம்ஸ்” விச்சு “சாயங்காலம் நிச்சயதார்த்தம். அப்புறம் “சுக் சங்கீத்” பாட்டி “அது என்னடா சுக் சங்கீத்” விச்சு “எல்லோரும் பாடுவா ஆடுவா”
அடுத்த நாள் மதியத்திற்கு மேல் மண்டபம் சென்றார்கள். பாட்டி சமையல் கட்டை தேடி போக, அங்கு ஒருவர் குறுக்கும் நெடுக்கும் ஒட “ஏண்டா, இந்த அம்மாஞ்சி தான் சமையல்காரரா என்று கேக்க, விச்சு “ஆமாம்” என்று சொல்லி, “நாம நம்ம ஊர் மாதிரி இங்கெல்லாம் அடிக்கடி உள்ள போக முடியாது” என்றான். இதற்கிடையே மணப்பெண் சச்சு வந்தாள். பாட்டிக்கு, சச்சுவ ரொம்ப புடிச்சு போக, இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.
நிச்சயதார்த்தம் முடிந்தது. அடுத்து “சுக் சங்கீத்”க்கு தயாராக ஆனார்கள். விச்சு ன்னுடைய மேனேஜர் ஸ்டான்லி அவர் மனைவி டோலி யுடன் நம் கல்யாணத்தை கண்டு ரசிக்க வேண்டும் என்று வந்திருந்தார்கள். டோலி நிறை மாத கர்பிணியாக இருந்தாள். இதை பார்த்த பாட்டி, “விச்சு, ஏண்டா, இந்த நேரத்தில் எல்லாம் இப்படி கூட்டிண்டு வரலாமோட என்று கேக்க” விச்சு வாயை பொத்தி காண்பிக்க, பாட்டி பேசாமல் இருந்தார் “சுக் சங்கீத்” தொடங்கியது. அமைதியாக பாட்டு ஒலி பரப்ப, அனைவரும் விச்சுவையும், சச்சுவையும் சுற்றி இடுப்பையும், கையையும் மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்தார்கள். பாட்டிக்கு இது ரசிக்கவில்லை. எல்லாரும் சோள கொல்லை பொம்மை மாதிரி கையையும் இடுப்பையும் ஆட்டிண்டு இருக்கா. கல்யாண வீடு மாதிரியே இல்லையே என்று நினைத்து.
நடு காலுக்கு வந்து “ நிறுத்து, இதெல்லாம் பாட்டா என்று கூறி
“குன்றத்திலே குமரனுக்கும் கொண்டாட்டம், அங்கே குவிந்ததம்மா பெண்கள் எல்லாம் வண்டாட்டம், முருகனுக்கு வேல் வேல்” என்று ஆரம்பித்து பாட்டை மாற்றி “கேட்டுகொடி உறுமி மேளம், சித்தாட கட்டிக்கிட்டு, சிங்காரம் பண்ணிக்கிட்டு” என்று வரிசையாக பாட ஆரம்பிக்க, அங்கிருந்த பெண்கள் எல்லாம் புடவைய தூக்கி கட்டிண்டு ஆட ஆரம்பிக்க, சச்சுவும் கூட சேர மண்டபமே அல்லோல பட ஆரம்பித்து. டோலி யும் மெதுவாக ஆடிக்கொண்டு இருந்தாள். ஆண்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். விச்சு, கிச்சா இரண்டு பெரும் தலையில் கையை வைத்து கொண்டு, போலீஸ் யாரேனும் வருகிறார்களா என்று வெளியவே பார்த்து கொண்டு இருந்தார்கள். கிச்சா விச்சுவிடம் “உங்க பாட்டி செய்யறத பார்த்த நீ தாலி கட்றதுக்கு முன்னாலேயே எங்கள ஏத்தி திருப்பி அனுபிசிருவாளோன்னு பயமா இருக்கு.
என்றார். ஆடிக்கொண்டு இருந்த டோலி க்கு வலி வர ஆரம்பித்தது. வயித்தை பிடித்து கொண்டு உட்கார்ந்தாள். ஸ்டான்லி பயந்தான். ஆஸ்பத்திரில உடனே சேர்க்க முடியாதே. எமர்ஜென்சி சொன்னாலே ஒரு நாள் ஆகுமே என்று புலம்ப ஆரம்பித்தான். அம்மாளு பாட்டி டோலி யை கை, வயிறெல்லாம் தொட்டு பார்த்தா. பார்த்துட்டு விச்சுட்ட சொன்ன “விச்சு, சீனுட்ட சொல்லு, ஒன்னும் பயப்பட வேண்டாம். இது சாதாரண வலி தான். முதல்ல பாடறோது அமைதியா இருந்த குழந்த, முருகனுக்கு வேல் வேல் ன்னு நாம பாட்டெல்லாம் வேகமா பாட ஆரம்பிசோன்ன, குழந்தைக்கு உற்சாகம் வந்து கை கால் லாம் குதிச்சுண்டு அதுவும் ஆட ஆரம்பிச்சுடுத்து. அது இதுக்கு முன்னால இந்த மாதிரி சத்தம் கேட்டதே இல்லை இல்லையா. வேற பயப்படற மாதிரி ஒண்ணும் இல்ல. இன்னும் இரண்டு நாள் கழிச்சு ஒரு அன்னபூரணி பொறக்க போறன்னு சொல்லி, இப்ப நன்னா சாப்பிட்டுட்டு போக சொல்லு” என்று சொல்ல, விச்சுவும் ஆங்கிலத்தில் விளக்கினான். அவர்களும் சாப்பிட்டு விட்டு சந்தோஷமாக சென்றார்கள்.
சுக் சங்கீத் சந்தோஷமாக முடிந்தது. அடுத்த நாள் கல்யாணத்திற்கு ரெடி ஆனார்கள். விச்சு காசி யாத்திரைக்கு கிளம்பினான். பாட்டி விச்சுவிடம் “ நீ காசி யாத்திரைக்கு போறோது, உங்க மாமனாரையும் கையோட கூட்டிண்டு போ. உங்க அப்பா காசி யாத்திரைக்கு போறோது, உங்க தாத்தா உங்க அப்பாவ திருமப அழைக்க கூட போகாம, டிபன் சாப்பிட போய்ட்டார். உங்க அப்பா காசி யாத்திரை க்கு கொஞ்ச தூரம் போனவன், பயந்து போய், அவனே திரும்பி வந்துட்டான். அதனால நீ கூடவே கூட்டிண்டு போ” என்றார். காசி யாத்ரை முடிந்தது. ஊஞ்சல் முடிந்தது. முஹுர்த்தம் தொடங்கியது. சாஸ்திரிகள் விச்சு வை காணாமல் தேட ஆரம்பித்தார். பாட்டி அவன் பசி தாங்க மாட்டான் என்று யாருக்கும் தெரியாமல் இட்லி கொடுத்து கொண்டு இருக்க, சாஸ்திரிகள் பதறி போனார். இப்படியாக பாட்டியின் மேற்பார்வையில் விச்சு சச்சு கழுத்தில் தாலி கட்ட, ஒருவருக்கொருவர் கை குலுக்கி கொண்டார்கள். மாலையில் நலுங்கு தொடங்கியது.
நலுங்கு விளையாட ஆரம்பித்தார்கள். அப்பளத்தை தேட அதை காணாமல், பாட்டி “அப்பளம் வைக்கலையாடா” ன்னு கேக்க, பாட்டி “வெச்சோம்,யாரோ எடுத்து சாப்பிட்டுடா. வேற கொண்டு வரேன்” என்று குரல் வந்தது. விச்சு வின் வாயில் இருந்து லேசாக பெருங்காய வாசனை வந்தது. நலுங்கு விளையாட்டு வேடிக்கையாக முடிந்தது. கலயாணமும் நல்ல படியாக நடந்தது முடிந்தது.
எல்லோரும் இந்திய திரும்ப ரெடி ஆனார்கள். விச்சு மேனேஜர் ஸ்டான்லி அங்கு வந்தார். “ஏண்டா விச்சு, இந்த சீனு இப்ப எதுக்குடா வரான் என்று பாட்டி கேட்டார். ஸ்டான்லி சந்தோசத்துடன் “Visu, we have a girl child. Named her as “Annie” I am very happy. Your grandma is very helpful to me” என்று சொல்லி பாட்டியை பல முறை வணங்கி சென்றான். “நான் சொன்னேன் பார்த்தாயா, அன்னபூரணி தான் வருவான்னு, “Annie” யா வந்துட்டா” ன்னு சொல்ல, விச்சு சந்தோஷமாக பாட்டியை அணைத்து கொண்டான். அவனை செல்லமாக தட்டி “விச்சு உனக்குன்னு ஒருத்தி வந்தாச்சு. இனி என்னை அம்மாவை எல்லாம் கட்டிக்கபுடாது. சச்சு கோபிச்சுப்பா. அதோ அவளே உன்ன தேடிண்டு வரா பார்” என்று கூற, வந்த சச்சு “விஷ், என் கண்ணாடிய எங்கயாவது பார்த்தயாடா” என்று கேட்டாள். அதை கேட்ட பாட்டி, பாரு கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆயிருக்கு. அவ எப்படி அன்போட, உரிமையோட கூப்டறா. எனக்கு கல்யாணம் ஆனப்போ, உன் தாத்தாவோட அம்மா எங்கிட்ட “நீ இப்படி நாலு புருஷா இருக்கிற இடத்துல எல்லாம் வந்து நிக்கப்படாது, உங்காத்துல சொல்லி தரலையா” என்று கோபித்து கொண்டாள் உங்க தாத்தாட்ட பேசவே முடியல. அப்படி கிடச்சாலும், நான் பேசலாம்ன்னு பார்த்த அந்த பாவி மனுஷன் அவர் அம்மா பின்னாலேயே போயுண்டு இருந்தார். காலம் இப்ப எப்படி எல்லாம் மாறிடுத்து பார்த்தாயா” என்று கூறி சச்சுவிடம் “இந்த விச்சு ரொம்ப சுத்தகதி, அவனுக்கு படிப்ப தவிர ஒன்னும் தெரியாது. அடாவடி சாமர்த்தியம் கிடையாது. அதெல்லாம் அவனுக்கு சொல்லி கொடுத்து, பாட்டி, அம்மா இல்லாத குறைய நீ போக்கணும் கேட்டயா” என்று கூற, சச்சு பாட்டியிடம் “பாட்டி பாருங்கோ அடுத்த தடவ விச்சுவ விஸ்வநாதனா தான் பார்பேள்” என்று கூறினாள். “விச்சு, தப்பு, விஸ்வநாதன் செலக்சன் தப்பா போனதே இல்லை. இரண்டு பேரும் சேமமா இருங்கோ. நீ நன்னா பாடுவேன்னு சொன்னான்” ஒரு பாட்டு பாடு. நாங்க கிளம்பறோம்” என்று பாட்டி சொல்ல சச்சு என்ற சரஸ்வதியும்
என்று பாட ஆரம்பிக்க, எல்லோரும் கூடவே பாடிக்கொண்டு விமான நிலையத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
வாட்ஸப் பகிர்வு
No comments:
Post a Comment