Sunday, September 11, 2022

வீட்டு வேலை செய்பவர்

 வீட்டு ஹெல்ப்ர்கள் போஸ்டுகள் நிறைய சுற்றி கொண்டு இருந்தன போன வாரம். அப்பவே எழுதியிருக்கணும். Time கிடைக்க வில்லை.

Sujatha Krishnamurthy from Madhyamar FB

துணை தேவதைன்னு யாரு பெயர் கொடுத்தாங்கனு தெரியலையே!!! அப்போ மெயின் தேவதை யாரு? நாம்தானா!!!!  வேடிக்கையா இருக்கு. தேவதைன்னு சொல்லற அளவுக்கு என்னனு புரியல!!! நம்ம postion யே சமயத்தில ஆட்டம் காணறது!!!  ஹெல்ப்ர், வீட்டு வேலை செய்பவர்னு சொல்லலாம். ஆபீஸ்ல நமக்கு டீச்சர், HM கிளர்க் கேஷியர் manager ன்னு இல்லியா அதே மாதிரி வீட்டு பணிபுரிபவர்னு சொல்லலாம்.

தெற்கு மேற்கு கிழக்கு வடக்குன்னு இந்தியாவின் எல்லா திசை நகரத்திலும் இருந்ததால் எல்லா வித பணி புரிபவர்களை பற்றியும் தெரியும். எங்கும் எந்த பணியாளருடன் எந்த வித பிரச்னையும் வந்ததில்லை. Infact மாற்றலில் நான் ஊரை விட்டு போகும்போது எல்லோருமே ரொம்ப வருத்த  பட்டு இருக்கிறார்கள். இவர்களை அன்புடன் பரிவுடன் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. முடிந்த உதவிகளை இவர்களுக்கு செய்யலாம் தப்பில்லை ஆனால் எந்த சமயத்திலும் இவர்கள் எந்தவித advantage ம், நமக்கு தெரியாமலேயே எடுத்து கொள்ளும் சந்தர்பத்தை நாமே ஏற்படுத்தி கொடுக்காத வகையில் இவர்களுடன் உள்ள உறவை வைத்து கொள்ளுவது நல்லது.

சென்னை..... இவர்கள் வித்யாசமானவர்கள். எக்ஸ்ட்ரா வேலை வாங்கமுடியாது. முன் மாதிரி இல்லை. இப்போதெல்லாம் உணவு கூட வேண்டாம் என்கிறார்கள். காபி மட்டும் மறுப்பதில்லை. முப்பது வருடம் முன்பு 50 ருபாய் கொடுத்த வேலைக்கு இன்று 3000 கொடுக்கிறோம். அவர்களை சொல்லி ஒன்றும் இல்லை!!! அதும் ஏரியாவுக்கு தகுந்தபடி. என் இப்போதைய maid மிக சுத்தமாக செய்வார் . லீவ் போட மாட்டார் . ஓரு வேலைக்கு 1500/-. சிலர் ஸ்கூட்டி யில் வருகிறார்கள்.( நாம கத்தரிக்கா வெண்டக்காய் வாங்கிறா மாதிரி எனக்கொரு ஸ்கூட்டி என் பொண்ணுக்கொரு ஸ்கூட்டி வாங்கிட்டேம்மா ன்னு சொன்னார் ஓரு நாள் ). முன்பெல்லாம் all ரேடியோ நியூஸ் readers ஆக அக்கம் பக்கத்து எல்லார் வீட்டு நியூஸ்ம் படித்துக்கொண்டு இருந்தவர்கள் இப்போது மாறி விட்டார்கள். இது தான் நமக்கும் வேண்டும்.

மும்பை.... இங்குள்ள maids படு proffesionals. வருவார்கள் neataaga வேலையை முடித்து போய்க்கொண்டே இருப்பார்கள். எக்ஸ்ட்ரா பேச்சு அட்வான்ஸ் என்றெல்லாம் ஒன்றும் இருக்காது..சப்பாத்தி செய்து கொடுப்பது இவர்கள் ஸ்பெஷலிட்டி. இங்கு ஓரு பங்களாதேஷ் பெண் எனக்கு செய்தாள். மும்பையில் இருந்து ராஞ்சி போனபோது ஒரே அழுகை ஏன் ஆன்ட்டி போற இங்கேயே இரு என்று.

கம்பம்.... கம்பமும் கும்பகோணமும் மும்பை போவதற்கு முன்பு.  இங்கு வேலை செய்தவர் ஓரு பாசக்கார பாட்டி. இந்த ஊரே ஓரு பாசக்கார ஊரு தான்.ரொம்ப பிரியமாக இருப்பார். அப்பப்போ கடலை நெல்லிக்காய் எல்லாம் கொண்டு கொடுப்பார். பாட்டி பாவம் என்று அவர் செய்யும் வேலை தவிர எதுவுமே சொல்ல மாட்டேன். பாங்கு காரங்க வீடு என்று வெளில போய் பாட்டிக்கு மகா பெருமை. மாற்றல் வந்தவுடன் நானும் அடுத்த ஊருக்கு வருவேன் என்று அடம் பிடித்து காரில் எங்களுடனே வந்து 2 நாட்கள் தங்கி பின்பு திரும்பினார்.

கும்பகோணம்.... இந்த ஊரின் மகிமையோ என்னவோ, இங்கு மட்டும் இவர்களை என்னால் சமாளிக்கவே முடியவில்லை.அப்போது எங்கள் வீட்டில் காபி கிடையாது. வடஇந்திய மாடலில் டீ தான். இந்த கும்பகோணத்திலேயே பில்டர் காபி இல்லாத ஐயர் வீடு இது தாம்மா என்று ஆரம்பித்து, இவர்கள் பேசும் பேச்சே அலாதி. இது 25 வருடம் முன்பு.  கண்டிஷனா மாசம் 3 நாள் லீவு போடுவார்கள் , சில விஷயங்களுக்காக. இது ok. ஆனால் இப்போது சொல்லப்போகும் விஷயம் நீங்கள் யாரும் எந்த maid மூலமாகவும் பெற்றிருக்கமுடியாத ஓரு அனுபவம். 3 நாள் லீவு ok. எனது மாதாந்திர time 3 நாட்களும் கூட வரமாட்டார் .மொத்தம் 6 நாட்கள் லீவு. கேட்டால் காரணம் சொல்வார் அவர் வேலை செய்யும் வக்கீல் மாமி வீட்டில் எனது மாதாந்திர சமயத்தில் இங்கு அவர் வேலை செய்தால் அவள் மூலம் பத்து பாத்திரம் மூலம் தீட்டு வக்கீல் மாமி வீட்டுக்கு வந்துவிடுமாம்.  ஜனங்களுக்கு என்ன ஓரு பரந்து, விரிந்த, அறிவு  மனப்பான்மை என்று வியப்பாய் இருக்கும். அவளுக்கு permanantaaga இருக்கும் கும்பகோணம் வக்கீலாத்து மாமியை,  transfer ஆகி போய்க்கொண்டே இருக்கும் எனக்காக, பகைத்து கொள்ள முடியாதே!!!!  ஊரின் மண்ணின் மகிமை தான் 😄😄

ராஞ்சி.... Maids அதிகம் கிடையாது. 18,20 வயது பையன்கள் ஆண்கள் தான் பெரும்பாலும் வீட்டு வேலைக்கு வருவார்கள். படிப்பின்மை வறுமை இரண்டும் இதற்கு காரணம் என்று புரிந்து கொண்டேன். பாவமாக இருக்கும். பெருக்கி துடைத்து பாத்திரம் தேய்த்து, கார்டன் கவனித்து கொண்டு எல்லா வேலைக்கும் மிக சாதாரண சம்பளம் தான் கேட்பார்கள்.  வாசலில் வாட்ச்மன் உண்டு அவரே இந்த பையன் லீவு போட்டால் செய்து கொடுப்பார். Very much loyal. அதுவும் ZM வீடு என்பதால் இங்கு வேலைக்கு வர ஏகத்துக்கும் போட்டி உண்டு. மிக மிக சுத்தமாக செய்வார்கள். வீட்டில் இருந்த non ஸ்டிக் தவா சட்டி எல்லா வற்றையும் கருப்பாக இருக்கிறது என நினைத்து தேய் தேய் ன்னு தேய்த்து வெள்ளி கட்டி போல் வெள்ளை வெளேரென்று ஆகிவிட்டான் தசரத் எனும் வேலை செய்யும் பையன் 😂😂. என்ன மேடம் வீட்டில நீங்களே சமைக்கிறீங்க, யாராவது வந்தா நீங்களே காபி டீ போட்டு கொடுக்கிறீங்க? ஓரு சின்ன பெண்ணை வேலைக்கு சேர்த்து விடுறேன், நீங்க சோபாவில உக்காருங்க என்று சொல்லும் நண்பர்களை,sorry child labour தப்பு. சின்ன குழந்தையை எல்லாம் வேலைக்கு வச்சுக்கமாட்டேன். எனக்கு எந்த பந்தவும் வேணாம் என் வீட்டு சமையல் வேலை நான் தான் செஞ்சுப்பேன்  என கும்பிட்டு அவர்களை திருப்பி அனுப்பியிருக்கிறேன். பாவம், அங்குள்ள  குடும்பங்களின் வறுமை அப்படிப்பட்டது.

நியூடெல்லி... இவர்கள் கெத்து தான். கொஞ்சம் பிகு, அலட்சியம், எல்லாம் சேர்ந்த கலவை இவர்கள். இவர்களும் சப்பாத்தி செய்வதில் கெட்டிகாரரso ்  உச்சகட்ட தாங்க முடியாத குளிரில் இவர்களின் அனல் பறக்கும் சப்பாத்தி சப்ஜி தேவாமிருத்தமாய் இருந்திருக்கிறது எங்களுக்கு.

பதிவு நீளமாகி விட்டது. இன்னும் மூன்று நான்கு ஊர் maid பற்றி பிறகு எழுதுகிறேன்

சுஜா கிருஷ்ணா.

No comments:

Post a Comment