Sunday, September 4, 2022

புதினா ரைஸ்

 சனிக்கிழமை சமையல் பதிவு

புதினா ரைஸ்.


புதினா பொடி செய்து வடித்த சாதத்தில் சிறிது நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி நெய்யில் முந்திரி வறுத்து அலங்கரிக்கவும். புதினா ரைஸ் ரெடி.

புதினா பொடி செய்வது எப்படி

புதினா பொடி -

 mint leaves powder

செய்முறை

 புதினா இலையை தண்டு இல்லாமல் தனியாக எடுத்து வைத்து கொள்ளவேண்டும், பிறகு வானெலியில் சிறிது எண்ணை ஊற்றி இலையை போட்டு நன்றாக வதக்கி  எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து  கொஞ்சம் உளுத்தம் பருப்பு,  4 மிளகாய் வத்தல், சிறிது கடலை பருப்பு, பெருங்காயம், கொஞ்சம் புளி இவற்றை தனிதனியாக கடாயில் போட்டு ப்ரவுன் நிறம் வரும் வரை வதக்க வேண்டும், பிறகு சிறிது சால்ட் சேர்த்து கலந்து, வறுத்த கலவையை புதினவுடன் சேர்த்து நீர் சேர்க்காமல் அரைக்கவும். நல்ல பவுடராக வரும்.

(மிளகாய் பொடி அரைப்பது போல் ஆனால்  மிளாகாய் கம்மியா இருக்கனும், புளி சேர்க்கனும்)

புதினா ரைஸ் செய்யவும் இட்லி தோசைக்கு சைடு டிஷ் ஆகவும், பொரியல், கூட்டு இவற்றுக்கு மசாலா பொடியாகவும் பயன் படுத்தலாம்.

ரசத்துடன் சேர்த்து பொதினா ரசமும், சூப் செய்யவும் உதவும், தயிருடன் சிறிது துருவிய தேங்காய்,பொதினா

பொடி சேர்த்தால் புதினா தயிர்பச்சடி செய்யலாம், நீர் சேர்த்து அரைத்தால் பொதினா துவையல் ரெடி.

நளபாகம்.

 ____மாயவரம் மூர்த்தி..

No comments:

Post a Comment