👆பாகல்பூர் என்ற ஊரிலிருந்த 25 கி்மீ தொலைவில் மந்தர் மலை என்ற பகுதி உள்ளது. இந்த சங்கு குளம் மந்தர் மலையில் உள்ளது. இந்த குளத்தில் தான் பஞ்சகன்யா சங்கு தோன்றுகிறது. இது பாற்கடலில் அமிர்தம் தோன்றுவதற்கு முன் தோன்றியது. இதைக் கொண்டு தான் சிவன் கொடிய ஆலகால விஷத்தை எடுத்து உண்டதாக ஐதீகம்.
இந்த சங்கானது ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி தினத்திற்கு ஒரு நாள் முன்பு இந்த குளத்தில் தெளிவாகத் தெரிகிறது.
அந்த நாள் வரை நல்ல ஆழமான குளத்தில் 70 அ 80 அடி ஆழத்தில் அமைதியாக உறங்குகிறது. சிவராத்திரிக்கு முதல் நாள் அவ்வளவு நீரும்வற்றிப்போகிறது. சங்கு பார்வைக்கு நன்கு தெரிகிறது.
காணாமல் போன குளத்து நீர் மீண்டும் மறுநாள் குளத்தை நிரப்பி சங்கைதன் அடி மடியில் கிடத்தி விடுகிறது.
நீரானது எப்படி அந்த சிவராத்திரி தினத்தில்எங்கு போகிறது? எப்படிப் போகிறது? மறுநாள் சரியாக எப்படி திரும்ப வருகிறது? புரியாத ரகசியம்.
No comments:
Post a Comment