தென்னிந்திய உணவு வகைகளை சமைக்கும்போது நாம் செய்யும் பொதுவான தவறுகள் யாவை?
எதுல இருந்து ஆரம்பிக்கலாம்?🤔சரி... தென்னிந்திய உணவு என்றாலே எது நினைவுக்கு வரும்?
அரிசி ...(நம்ம staple food)
அதை சார்ந்த இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம்.
அரிசியை சமைக்க வேண்டுமாயின்... முதலில் 20-30 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு வேக வைத்தும் வடிப்பது சிறந்தது.
இதை இனிமேல் பழகிப் பார்க்கலாம்.
அந்த காலத்தில் பசுந்தாள் உரம், பிண்ணாக்கு, சாணம் இப்படி இயற்கையை சார்ந்தே பயிர் செய்தோம்.
இப்போது அரிசி விளைவிக்க இடும் இராசயண உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லியெல்லாம் கரைந்து போக வேண்டும் என்றால் .... அரிசியை வேக வைக்கும் முன்னே... 7-9 மணி நேரம் ஊறினால்தான்...அதை முழுமையாய் வெளியேற்ற முடியும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன..
கண்டிப்பாக, அரிசியை வேக வைத்து வடித்தல் மூலம் தேவைக்கு அதிகமான மாவுசத்தும் (Carbohydrate) வெளியேற்றி விடலாம்.
( அதில் என்ன சத்து இருக்கும்?கவலைப்படாதீங்க.. ஸ்டார்ச் தாங்க வெளியேறும்...பரவாயில்ல..இப்ப இருக்கிற சர்க்கரை, இதய நோய் எல்லாம் வராம இருக்கணும்னா இப்படி சாப்டுறது சரி தானங்க..)
(புடவைக்கு கஞ்சி போடலாம்😂)
ஆனா பாருங்க…நம்ம தமிழ் மக்கள், எல்லாமே, ஆராய்ச்சி செய்துதான் நம் பாரம்பரியமான ...உணவு முறையே தந்து இருக்காங்க.. இப்ப நம் தேவைக்கேற்ப ஆராய்ச்சிகள் நடைபெருகின்றன.👇
சிறுதானியங்கள் இப்போது உணவில் சேர்ப்பது பெருகி வருகிறது.
புழுங்கல்( parboiled rice) அரிசியை தானே சாப்பிடுறோம்..!
கொஞ்ச வருஷத்துக்கு முன்னே...எல்லாரும் எல்லா வேளையும் அரிசியா சாப்பிட்டாங்க.? இல்லையே !
இப்பதான் மூணு வேளையும்
காலைல இட்லி...
மத்தியானம் சோறு...
இரவு இட்லி தோசை...
இதில் கண்டிப்பாக மாற்றம் கொண்டு வந்தால் தான் ... நம் சந்ததிகளும் ... பெரிய வியாதிகள் எதுவும் வராம சுகமா இருக்க வாய்ப்பு உள்ளது.
பிரஷ்ர் cooker பயன்படுத்தும் போது அதன் கலோரி அளவுகள் கூடி…. நமக்கு உடம்புல மாவு சத்து அதிகமாகி எடை கூட வாய்ப்பு இருக்கு…எனவே, வடித்து சாப்பிடுவது சிறந்தது…
இன்னும் அரிசி... வெறும் வெள்ளையான அரிசியாக காண்பிக்க தீட்டுதல் (Polish) முறையில் வெள்ளையாக்கப்படுகிறது. இது ஒரு வியாபார யுக்தி.
அப்படியான அரிசியை வாங்கிப் பயன்படுத்தும் போது அதிலுள்ள அனைத்து விதமான சத்துக்களும் ... குறிப்பாக விட்டமின் B... இல்லாது போக வாய்ப்புள்ளது.
வெள்ளை அரிசியை மட்டும் மொத்தமாக வாங்காமல் ...
என வாங்கி உணவை வித்தியாசப்படுத்திப் பார்க்கலாம்..
கவுணி அரிசியில் அளப்பரிய அருமையான சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதாவது அதிகப்படியான ஆண்டிஆக்ஸிடெண்டுகள். 👇
ஆனால் இந்த அரிசிகளை நன்றாகக் கழுவி பின்னர் 8-10 மணி நேரம் ஊற வைத்து சமைத்தல் அவசியமாகிறது.
இந்த அரிசிகள் மருந்துகள் இடாமல் இருந்தால் ஊற வைத்த தண்ணீரை வடிக்க வேண்டியது இல்லை.
வேக வைத்த பிறகும் வடிக்க வேண்டியது இல்லை.
வெள்ளையாக இருக்கும் அரிசியை மட்டுமே தவிர்க்க அறிவுருத்துகிறோம்... ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே அரிசி ... மற்ற நேரங்களில் , சிறுதானியங்கள்... பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளில் செய்த உணவுமுறைகள் பின்பற்றி உடல் நலன் பேணலாம்.
நம் இந்திய சிறுதானியக் கழகம் பலவிதமான ஆரோக்கிய மேம்பாட்டிற்கு எடுத்துள்ள முயற்சிகள் மக்களை சென்றடைந்தால், அதை விட சிறப்பு ஏதுமில்லை.
எப்படி சமைப்பது என்று கற்றுக் கொண்டு பயன்படுத்தி ஆரோக்கியம் பெறலாம்.
தென்னிந்தியா என குறிப்பிட்டதால்... நாம் நம் மண்ணில் விளையும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துதலே சிறந்தது ஆகும்...
கிரைண்டர் வந்ததும் நம் வீட்டுப் பெண்கள் ஒரு வாரத்திற்கு வருமாறு அரிசியை அரைத்து குளிரூட்டியில் Stock ஏற்றும் பழக்கத்திலிருந்து வெளியே வருவது சிறந்ததாக இருக்கும்..
தினமும் தோசை இட்லி வட்டத்திலிருந்து வெளியேறினால் மருத்துவமனைக்கு உள் நடப்பு குறைந்துபோகும் ...
இப்போது உடல் பருமனே பலவிதமான நோய்களுக்கான... வரவேற்பு வாசலாகி விட்டது.
தமிழ் சமையலில் சொல்லாடல் மொழிகள் இருக்கு…நம்ம பாட்டி சொல்வாங்க…அதை கவனித்து பின்பற்றலாம். ஆராய்ச்சி அறிவியலும் இதைத்தான் உறுதி செய்கின்றன.
1. ரெண்டு மிளகு இடிச்சி போட்டு ரசம் வைம்மா.. ஏன்?
மிளகை அம்மில இடிச்சி தான் ரசம் வைக்கணும். அப்பதான் அதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உடலில் வேலை செய்யும். (இப்ப முக்கியமா கவனிக்க வேண்டிய ஒண்ணு) இப்ப mixie - ல தான் அரைக்கிறோம்.
2. ரெண்டு பூண்டு பல் தட்டி போடுங்க..
கேட்டதுண்டா?…2 பூண்டு பல் என்றால் என்ன? 2 பல் பூண்டு போதும் என்று பொருள். இது ஒரு நல்ல மருந்து…மருந்து என்றால்...மருந்துதானே. !.
( யோக முறையில்…பூண்டு வேண்டவே வேண்டாம்னு சொல்றாங்க…)
இதையும் தட்டிதாங்க போடணும்
…ஏன்?
இதுவும் அம்மில தட்டும் போதுதான் அல்லிசினின் ( allicinin) என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் வெளில வரும்.. ( இப்ப பூண்டு வாசனைத் தெரியுதா?) அந்த திரவம் நசுக்கும் போதுதான் வாசனையாக வெளியில் வரும். எண்ணெய் போன்ற ஒரு திரவம் வெளிப்படும். பார்த்து இருக்கிறீர்களா?
3. கடுகு:
சொல்லாடல் என்ன? சொல்லுங்க பாக்கலாம்..
ஆமா..கடுக வெடிக்க விட்டுதான் மற்ற தாளித பொருட்களை சேர்க்கணும்..
கடுகு வெடிக்காம…தாளிச்சா அயோடின் குறைபாடு வர வாய்ப்புள்ளது…
4. தக்காளியை வதக்கி:
பொதுவாகவே நாம் தக்காளியை வதக்கி சமைப்பது நமது சமையல் முறையிலேயே இருக்கிறது. அதிலுள்ளை லைக்கோபீன் என்ற ஆண்டிஆக்ஸிடென்ட் எண்ணெயில் வதக்கும் போதும் மற்றும் நன்றாக தோல் வெளியேறும்படி கொதிக்க வைக்கும் போதும் உறுதிபடுகிறது.
தக்காளி கெட்டுப் போயிருந்தால் பயன் படுத்துதல் வேண்டாம். இது முக்கியம்.
காய்கறிகளை சுருள எண்ணெயில் வதக்கி பயன்படுத்தாமல், அவித்து உட்கொள்ளுதல் ( Steaming) அவசியம்.
காய்கறிகளை நன்றாகக் கழுவிய பின் வெட்டி சமைத்தல் வேண்டும். சிறுசிறு துண்டுகளாக இல்லாது ....கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி சமைத்தல் சிறந்தது.
மூன்று வேளையும் அரிசி சார்ந்த உணவு முறையை கண்டிப்பாக தவிர்த்து சிறுதானிய வகைகளை உட்புகுத்தி இப்போது உள்ள உணவு முறையை மாற்றுதல் ... உடல் அளவில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வர ஏதுவாக இருக்கும்..
இதன் மூலம் பலவிதமான இதய மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும் ...
வீட்டு சமையலில் இராசயண நிறமிகள் அறவே தவிர்த்தல் வேண்டும்.
இப்போதைக்கு இதை கடைபிடிக்க ஒரு சிறு முயற்சி செய்து நல்வாழ்வு பெற வாழ்த்தி ...எழுத வாய்ப்பு தந்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி ✍️🙏
https://youtu.be/9bCybkEFXlU
No comments:
Post a Comment