Thursday, September 15, 2022

தொட்டால் சிணுங்கி இலை

 சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் தொட்டால் சிணுங்கி இலைகளை நன்கு அரைத்து 5 முதல் 6 நாட்கள் 10 கிராம் அளவில் எடுத்து காலையில் தயிரோடு சாப்பிட்டு வர சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குறையும்.

இந்த சூரணம் -5 கிராம் பசும்பாலில் குடிக்க சிறுநீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும்.

சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.

பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு நோய் தீரவேண்டுமானால் தொட்டால் சுருங்கி இலையைப் பறித்து சுத்தம் செய்து, அவ்விலையோடு தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து பசு மோரில் கலந்து பெண்கள் அருந்த நோய் குணமாகும்.                Viji

No comments:

Post a Comment