நவராத்திரி அலப்ரைஸ்!
🌷🪔🌷
முன்பெல்லாம் நவராத்திரி கொலுவுக்கு வருபவர்கள் அம்மன் மீது பாட்டு பாடுவார்கள். வீட்டு எஜமானி, ஆளுக்கு கொஞ்சம் சுண்டலை பேப்பரிலோ, இலையிலோ மடித்து தருவார். அதோடு முடிந்தது.
இந்த Gift / Return gift சமாச்சாரம் எப்போ, எப்படி ஆரம்பித்ததோ தெரியவில்லை.
Plastic டப்பாக்களும், எவர்சில்வர் டப்பாக்களும் கொடிகட்டி பறக்கின்றன. வீட்டில் வைக்க இடமில்லை.
ரொம்ப சிரமப்படுத்தும் ஐட்டம் , சின்ன சின்ன ஸ்வாமி விக்கிரகங்கள்தான். ஏற்கெனவே பூஜை ரூம் / அலமாரியில் ஏகப்பட்ட குட்டி விக்கிரகங்கள் நெருக்கியடித்து அமர்ந்திருக்கின்றன. மேலும் மேலும் சேர்ந்தால் என் செய்வது? தெய்வ விக்கிரகங்களை வெளியில் போடவும் முடியாது.
இன்னொரு சங்கடம் ரவிக்கை பிட்டுகள். இந்த தலைமுறையினர் பெரும்பாலும் சுடிதார் அணிவதாலும், கலர் /texture suit ஆகாமல் இருப்பதாலும் ரவிக்கை பிட்டுகள் Re-cycling பாதையில் சென்று ... சுத்தி சுத்தி வந்தீக ...! 🫣
அடுத்தது ஸ்லோக புஸ்தகங்கள். எங்கள் வீட்டில் லலிதா ஸஹஸ்ரநாமம் புஸ்தகம் ஏகப்பட்டது சேர்ந்திருக்கிறது!
"அவா வீட்டில் பெரிய எவர்சில்வர் தட்டு கொடுத்தா. நன்னா கிண்ணுனு இருந்தது. நாம்ப ஒரு மூடி போட்ட எவர்சில்வர் டப்பாவாவது கொடுக்கலேன்னா என்ன நினைப்பா? "
'உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே'ன்னு ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வருகிறது.
இது ஒரு ஈகோ / போட்டி விஷயமாக ஆகி விட்டதோ.....? அம்மணிகள் கோச்சுக்க கூடாது. நிதானமாக யோசித்து பார்க்கலாம்.
யார் வீட்டில் தைரியமாக, இந்த வருஷம் No gift என்று முடிவெடுத்து, சுண்டலோ, கேஸரியோ, புட்டோ ... பொட்டலம் கட்டிக் கொடுத்து, அதோடு நிறுத்திக் கொள்கிறார்களோ ... ... அவர்களுக்கே என்னுடைய ஓட்டு! 😃
எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
🙏🪔🙏
No comments:
Post a Comment